under review

கபிலர் (இன்னாநாற்பது): Difference between revisions

From Tamil Wiki
(category & stage updated)
mNo edit summary
Line 1: Line 1:
கபிலர் (இன்னாநாற்பது) (பொயு 3-4 ஆம் நூற்றாண்டு) நீதிநூல் காலகட்டத்தைச் சேர்ந்த பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றாகிய இன்னா நாற்பது என்னும் நூலை பாடியவர். இவர் சங்ககாலக் கபிலர் அல்ல.  
கபிலர் (இன்னாநாற்பது) (பொ.யு. 3-4-ஆம் நூற்றாண்டு) நீதிநூல் காலகட்டத்தைச் சேர்ந்த பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றாகிய இன்னா நாற்பது என்னும் நூலை பாடியவர். இவர் சங்ககாலக் கபிலர் அல்ல.  

(பார்க்க [[கபிலர்கள்|கபிலர்கள் )]]  
(பார்க்க [[கபிலர்கள்|கபிலர்கள் )]]
== காலம் ==
== காலம் ==
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களின் காலம் பொயு மூன்றாம் நூற்றாண்டுக்கு பிறகு என்பது பொதுவாக ஏற்கப்பட்டது. ஆகவே சங்ககால கபிலருக்கு குறைந்தது முந்நூறாண்டுகளுக்கு பின்னர் வந்தவர் இக்கபிலர். பாடலை இவர் கவி என்று குறிப்பிடுவதே இவருடைய காலம் பிந்தையது என்பதை காட்டுகிறது (இன்னா நாற்பது 39 ஆம் பாடல்)

Revision as of 21:32, 28 June 2022

கபிலர் (இன்னாநாற்பது) (பொ.யு. 3-4-ஆம் நூற்றாண்டு) நீதிநூல் காலகட்டத்தைச் சேர்ந்த பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றாகிய இன்னா நாற்பது என்னும் நூலை பாடியவர். இவர் சங்ககாலக் கபிலர் அல்ல.

(பார்க்க கபிலர்கள் )

காலம்

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களின் காலம் பொயு மூன்றாம் நூற்றாண்டுக்கு பிறகு என்பது பொதுவாக ஏற்கப்பட்டது. ஆகவே சங்ககால கபிலருக்கு குறைந்தது முந்நூறாண்டுகளுக்கு பின்னர் வந்தவர் இக்கபிலர். பாடலை இவர் கவி என்று குறிப்பிடுவதே இவருடைய காலம் பிந்தையது என்பதை காட்டுகிறது (இன்னா நாற்பது 39 ஆம் பாடல்)

அடையாளம்

’ஏட்டுப்பிரதிகள் சிலவற்றில் ஆசிரியர் பெயர் கபிலதேவர் என்று காணப்படுகிறது. மேலும் இக்கீழ்க்கணக்கு நூல்களை இயற்றியவர்களில் பெரும்பாலானவர்கள் சங்ககாலத்தவர் அல்லர். எனவே இன்னா நாற்பதும் பன்னிரு பாட்டியல் நூலில் கபிலர் பெயரால் வழங்கும் சூத்திரங்களும் சங்ககாலப் புலவரின் வேறான ஒருவரால் இயற்றப்பட்டன என்று கொள்வதே நேரிது’ என்று எஸ். வையாபுரிப் பிள்ளை குறிப்பிடுகிறார் (தமிழ்ச் சுடர்மணிகள்)

நூல்

இன்னா நாற்பது என்னும் நூல் துன்பம் தரும் நாற்பது செயல்கள் மற்றும் பொருட்களை ஒற்றைவரிப் பாடல்களாகச் சொல்கிறது. இந்த நூலிலுள்ள கடவுள் வாழ்த்துப் பாடல் முக்கண்ணான், பனைக்கொடியான், சக்கரத்தான், சத்தியான் (வேலாயுதம்) ஆகியோரைக் குறிப்பிடுகிறது.

உசாத்துணை

எஸ். வையாபுரிப் பிள்ளை- (தமிழ்ச் சுடர்மணிகள்)

✅Finalised Page