under review

கனகசபைப் புலவர்: Difference between revisions

From Tamil Wiki
(changed template text)
(Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)
 
(5 intermediate revisions by the same user not shown)
Line 1: Line 1:
{{Read English|Name of target article=Kanagasabai Pulavar|Title of target article=Kanagasabai Pulavar}}
{{Read English|Name of target article=Kanagasabai Pulavar|Title of target article=Kanagasabai Pulavar}}
கனகசபைப் புலவர் (1815 - 1873) அளவெட்டி கனகசபைப் புலவர் (1815- 1879 ) கிறிஸ்தவக் கவிஞர். தமிழின் தொடக்ககாலக் கிறிஸ்தவக் காப்பியமான திருவாக்கு புராணத்தின் ஆசிரியர். இலங்கையைச் சேர்ந்தவர்.
கனகசபைப் புலவர் (1815 - 1873) அளவெட்டி கனகசபைப் புலவர் (1815- 1879 ) கிறிஸ்தவக் கவிஞர். தமிழின் தொடக்ககாலக் கிறிஸ்தவக் காப்பியமான திருவாக்கு புராணத்தின் ஆசிரியர். இலங்கையைச் சேர்ந்தவர்.

Line 16: Line 17:
அளவெட்டி கனகசபைப் புலவர் வேலூரில் வாழ்ந்துவந்த இலங்கையிலுள்ள கண்டி அரசரின் பேரனான அழகர்சாமியிடம் கனசபைப்புலவர் நெருங்கிய நட்பு கொண்டிருந்தார். அவர்மேல் அழகர்சாமி மடல் என்னும் சிற்றிலக்கியத்தை இயற்றினார். கனகசபைப் பிள்ளை கிறிஸ்தவக் காப்பியமாகிய [[திருவாக்குப் புராணம்|திருவாக்குப் புராண]]த்தை இயற்றினார். ஒரு நிகண்டு நூலையும் படைத்துள்ளார்.

== மறைவு ==
== மறைவு ==
கனகசபை பிள்ளை தன் மருத்துவப் பணிக்காக பூநகரிக்குச் சென்றிருந்தபோது இரத்த அழுத்தம் காரணமாக மயங்கிவிழுந்து 1879 தை மாதம் 9 ஆம் தேதி மரணமடைந்தார்.
கனகசபை பிள்ளை தன் மருத்துவப் பணிக்காக பூநகரிக்குச் சென்றிருந்தபோது இரத்த அழுத்தம் காரணமாக மயங்கிவிழுந்து 1879 தை மாதம் 9-ம் தேதி மரணமடைந்தார்.
== இலக்கிய இடம் ==
== இலக்கிய இடம் ==
கனகசபைப் பிள்ளை தமிழ் கிறிஸ்தவ இலக்கியத்தில் பங்களிப்பாற்றியவர். அவர் மறைவின்போது ஈழ இதழான [[உதயதாரகை]] இவ்வாறு எழுதியது. ‘தமிழுக்கு தொண்டுசெய்தோன் சாவதில்லை என்று அறிஞர் கூறுவர். கனகசபைப் பிள்ளை அவர்கள் தமிழுக்கும் தொண்டுசெய்தார். இறையரசரான இயேசுபிரானுக்கும் உண்மையடியவராக விளங்கி திருவாக்கு புராணம் முதலான பல பனுவல்களைத் தந்தார்

Line 38: Line 39:
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:ஈழத்து ஆளுமைகள்]]
[[Category:ஈழத்து ஆளுமைகள்]]
[[Category:புலவர்கள்]]
[[Category:கவிஞர்கள்]]
[[Category:கிறிஸ்தவம்]]

Latest revision as of 07:26, 24 February 2024

To read the article in English: Kanagasabai Pulavar. ‎

கனகசபைப் புலவர் (1815 - 1873) அளவெட்டி கனகசபைப் புலவர் (1815- 1879 ) கிறிஸ்தவக் கவிஞர். தமிழின் தொடக்ககாலக் கிறிஸ்தவக் காப்பியமான திருவாக்கு புராணத்தின் ஆசிரியர். இலங்கையைச் சேர்ந்தவர்.

(பார்க்க கனகசபைப்பிள்ளை, வி.கனகசபைப் பிள்ளை )

பிறப்பு, கல்வி

அளவெட்டி கனகசபைப் புலவர் (கனகசபைப் பிள்ளை) இலங்கையில் அளவெட்டியில் வேலுப்பிள்ளையின் மகனாக 12 மாசி 1815 ல் பிறந்தார். இவருடைய தந்தை வேலுப்பிள்ளை சைவராக இருந்து மதம் மாறியவர். இவருடைய முழுப்பெயர் ஜெர்மையா எவாட்ஸ் கனகசபைப் பிள்ளை.

கனகசபைப் பிள்ளை வட்டுக்கோட்டை குருமடம் நடத்திய கல்விச்சாலையில் பயின்றார். அங்கே நேதன் வார்ட் இவருடைய ஆசிரியர். அவரிடமிருந்து மருத்துவக் கல்வியையும் பெற்றார்.

கனகசபைப் புலவர் வியாக்ரபாத முனிவர் புராணத்தை இயற்றிய வைத்தியநாதத் தம்புரான் வழியில் வந்தவர் என்பது அவர் கண்டி அரசர் வழிவந்த அழகர்சாமி என்பவருக்கு எழுதிய சீட்டுகவியின் வழியாகத் தெரியவருகிறது.’

தனிவாழ்க்கை

கனகசபைப் பிள்ளை சென்னையில் அமெரிக்க மிஷன் சார்பில் தமிழ் அகராதிப் பணி நிகழ்ந்தபோது அதில் பங்கெடுத்தார்.. வினோதரச மஞ்சரி எழுதிய வீராச்சாமிச் செட்டியார் இதில் பணியாற்றினார்.பின்னர் மானிப்பாய் நகரிலுள்ள அமெரிக்க மிஷன் அச்சு இயந்திர சாலையில் மேற்பார்வையாளராகவும், கோப்பாயிலுள்ள தமிழ்ப்பாடசாலை தமிழாசிரியராகவும் பணியாற்றினார். கூடவே மருத்துவத் தொழிலையும் செய்துவந்தார்.

கனகசபை பிள்ளைக்கு இரு மகன்கள். ஒருவர் மருத்துவராகவும் இன்னொருவர் இலங்கையிலுள்ள சுண்டிக்குளி பாடசாலை தலைமையாசிரியராகவும் பணியாற்றினார்.

இலக்கிய வாழ்க்கை

அளவெட்டி கனகசபைப் புலவர் வேலூரில் வாழ்ந்துவந்த இலங்கையிலுள்ள கண்டி அரசரின் பேரனான அழகர்சாமியிடம் கனசபைப்புலவர் நெருங்கிய நட்பு கொண்டிருந்தார். அவர்மேல் அழகர்சாமி மடல் என்னும் சிற்றிலக்கியத்தை இயற்றினார். கனகசபைப் பிள்ளை கிறிஸ்தவக் காப்பியமாகிய திருவாக்குப் புராணத்தை இயற்றினார். ஒரு நிகண்டு நூலையும் படைத்துள்ளார்.

மறைவு

கனகசபை பிள்ளை தன் மருத்துவப் பணிக்காக பூநகரிக்குச் சென்றிருந்தபோது இரத்த அழுத்தம் காரணமாக மயங்கிவிழுந்து 1879 தை மாதம் 9-ம் தேதி மரணமடைந்தார்.

இலக்கிய இடம்

கனகசபைப் பிள்ளை தமிழ் கிறிஸ்தவ இலக்கியத்தில் பங்களிப்பாற்றியவர். அவர் மறைவின்போது ஈழ இதழான உதயதாரகை இவ்வாறு எழுதியது. ‘தமிழுக்கு தொண்டுசெய்தோன் சாவதில்லை என்று அறிஞர் கூறுவர். கனகசபைப் பிள்ளை அவர்கள் தமிழுக்கும் தொண்டுசெய்தார். இறையரசரான இயேசுபிரானுக்கும் உண்மையடியவராக விளங்கி திருவாக்கு புராணம் முதலான பல பனுவல்களைத் தந்தார்

நூல்கள் பட்டியல்

புராணம்
மடல்
  • அழகர்சாமி மடல்

உசாத்துணை

✅Finalised Page