under review

கணேஷ்,வசந்த்: Difference between revisions

From Tamil Wiki
mNo edit summary
(changed template text)
Line 49: Line 49:
*[https://minivet10.rssing.com/chan-6395419/article67.html ரசிகன்: கணேஷ்-வசந்த் (minivet10.rssing.com)]
*[https://minivet10.rssing.com/chan-6395419/article67.html ரசிகன்: கணேஷ்-வசந்த் (minivet10.rssing.com)]
*[https://imsivam.wordpress.com/2017/08/28/%EF%BB%BF%E0%AE%95%E0%AE%A3%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D/ கணேஷ்-வசந்த் | அன்பே சிவம் (imsivam.wordpress.com)]
*[https://imsivam.wordpress.com/2017/08/28/%EF%BB%BF%E0%AE%95%E0%AE%A3%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D/ கணேஷ்-வசந்த் | அன்பே சிவம் (imsivam.wordpress.com)]
{{finalised}}
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:Spc]]
[[Category:Spc]]

Revision as of 13:31, 15 November 2022

To read the article in English: Ganesh, Vasanth. ‎

கணேஷ் வசந்த்
கணேஷ் வசந்த் படக்கதை

கணேஷ், வசந்த்: எழுத்தாளர் சுஜாதா உருவாக்கிய துப்பறியும் கதாபாத்திரங்கள். கணேஷ் வழக்கறிஞர், வசந்த் அவருடைய துணைவழக்கறிஞர். அவர்கள் தனிப்பட்டமுறையில் குற்றங்களைப் புலனாய்வு செய்கிறார்கள்.

வரலாறு

கணேஷ் சுஜாதா ஆகஸ்ட் 1968-ல் குமுதம் இதழில் எழுதிய நைலான் கயிறு நாவலில் மும்பையில் தொழில் செய்யும் ஒரு சிறு கதாபாத்திரமாக அறிமுகமானார். அதில் துப்பறிவாளராக அன்றி குற்றம்சாட்டப்பட்டவரை வாதாடி விடுதலை வாங்கித்தரும் வழக்கறிஞராகவே இருந்தார். அதன்பின் கணேஷ் அனிதா இளம் மனைவி நாவலில் டெல்லியில் வழக்கறிஞராக வேலைபார்ப்பவராகவும், நேரடியாகவே துப்பறிபவராகவும் வந்தார். பாதி ராஜ்யம் என்னும் கதையில் நீரஜா என்னும் உதவியாளர் கணேஷுக்கு இருந்தார். ஒரு விபத்தின் அனாடமி என்ற கதையில் அவர் விரிவுபெற்றார். பின்னர் காணமலானார்.

1973-ல் ப்ரியா என்னும் நாவலில் வசந்த் அறிமுகமானார். காயத்ரியில் வசந்த் துப்பறிதலில் உதவுகிறார். தொடக்ககாலத்தில் கணேஷ் மட்டும் வரும் நாவல்களில் பின்னாளில் வசந்த்தின் குணச்சித்திரமாக வெளிப்படும் நையாண்டியாகப் பேசும் தன்மை போன்றவை கணேஷிடமே இருந்தன.

நிர்வாணநகரம் நாவலில் கணேஷ் வசந்த் இருவருடைய குணச்சித்திரங்களும் தெளிவாக வரையறை செய்யப்பட்டுவிட்டன. ஓவியர் ஜெயராஜ் அவர்களுக்கு முகங்களையும் அளித்துவிட்டார்.

குணச்சித்திரங்கள்

கணேஷ் அறிவார்ந்த, அதிகம்பேசாத, கூர்மையான மனிதர். பெண்களிடமிருந்து ஒதுங்கியே இருப்பவர். வசந்த் பேசிக்கொண்டே இருக்கும் இளைஞன். பெண்களை துரத்துபவன். கணேஷ் படிப்படியாக ஆராய்ந்து பார்ப்பது, முற்றிலும் வழக்கத்துக்கு மாறான கோணத்தில் பார்ப்பது ஆகிய அணுகுமுறைகள் கொண்டவன். வசந்த் சட்டென்று உள்ளுணர்வால் புதியவற்றைக் கண்டடைபவன். கணேஷ் வசந்த் இருவரும் ஒருவரை ஒருவர் நிரப்பும் கதாபாத்திரங்களாக நாவல்களில் வெளிப்படுகிறார்கள். கணேஷ் வசந்த் இருவருமே திருமணமாகாதவர்களாகவும், குடும்பம் என ஏதும் இல்லாதவர்களாகவும்தான் சித்தரிக்கப்படுகிறார்கள்.

கணேஷ் மட்டும் தோன்றும் நாவல்கள்

  1. நைலான் கயிறு
  2. அனிதா-இளம் மனைவி
  3. ப்ரியா

கணேஷ்-வசந்த் இணைந்து தோன்றும் நாவல்கள்

  1. ஆ..!
  2. மேற்கே ஒரு குற்றம்
  3. மேலும் ஒரு குற்றம்
  4. மீண்டும் ஒரு குற்றம்
  5. இதன் பெயரும் கொலை
  6. கொலை அரங்கம்
  7. வஸந்த் வஸந்த்
  8. பேசும் பொம்மைகள்
  9. மேகத்தை துரத்தியவன்
  10. யவனிகா
  11. கொலையுதிர் காலம்
  12. நில்லுங்கள் ராஜாவே
  13. ஐந்தாவது அத்தியாயம்
  14. மலை மாளிகை
  15. மறுபடியும் கணேஷ்
  16. ஆயிரத்தில் இருவர்
  17. அம்மன் பதக்கம்
  18. கணேஷ் X வசந்த்
  19. 24 ரூபாய் தீவு
  20. ஓடாதே
  21. நிர்வாண நகரம்
  22. எதையும் ஒரு முறை
  23. காயத்ரி
  24. மூன்று நிமிஷம் கணேஷ்
  25. விபரீதக் கோட்பாடு

உசாத்துணை


✅Finalised Page