ஔவையாரம்மன் கோயில்

From Tamil Wiki
Revision as of 10:45, 18 September 2023 by Jeyamohan (talk | contribs) (Created page with "ஔவையாரம்மன் கோயில் ( ) குமரிமாவட்டம், தோவாளை வட்டத்தில் , குறத்தியறை என்னும் ஊரில் உள்ள கோயில். இது ஔவையாரம்மன் கோயில் என்று நாட்டார் வழிபாட்டு முறையில் உள்ளது. ஆனால் நூற்றாண்டை...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

ஔவையாரம்மன் கோயில் ( ) குமரிமாவட்டம், தோவாளை வட்டத்தில் , குறத்தியறை என்னும் ஊரில் உள்ள கோயில். இது ஔவையாரம்மன் கோயில் என்று நாட்டார் வழிபாட்டு முறையில் உள்ளது. ஆனால் நூற்றாண்டைச் சேர்ந்த விஷ்ணு ஆலயம் என தொல்லியலாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர். தமிழகத்தில் ஔவையாருக்கு அமைக்கப்பட்ட ஒரே ஆலயம் என சிலரால் சொல்லப்படுகிறது. ஔவையார் என்பது கவிஞர் ஔவையாரை அல்ல என்றும் இங்கு வழிபடப்பட்ட தொன்மையான அன்னைதெய்வமே ஔவை எனப்படுகிறது என்றும் நாட்டாரியலாளர் கூறுகின்றனர். அந்த அன்னைதெய்வம் சமணப்பின்னணி கொண்டதாக இருக்கலாமென்றும் கூறப்படுகிறது.

இடம்

நாகர்கோயிலில் இருந்து கடுக்கறை செல்லும் வழியில் அழகியபாண்டிபுரத்திற்கு முன்னால் திரும்பும் சாலை குறத்தியறை என்னும் சிற்றூரைச் சென்றடைகிறது. இங்கே மலையைக் குடைந்து செய்யப்பட்ட சிறிய ஆலயமாக இது அமைந்துள்ளது

அமைப்பு

ஔவையாரம்மன் கோயில் லாடவடிவமான சிறிய குடைவரைக் கோயிலாகும். இந்த ஆலயம் முழுக்கச் செதுக்கி முடிக்கப்படாத நிலையிலேயே உள்ளது. இது இறைநிறுவுகை செய்யப்படாமல் விடப்பட்ட ஆலயமாக இருக்கலாம். பின்னர் நாட்டார் வழிபாட்டுக்குள் வந்திருக்கலாம்.

கருவறையின் சுவரில் நாற்பது செண்டிமீட்டர் உயரத்தில் அமையுமாறு கோட்டம் ஒன்று அகழப்பட்டு அதில் புடைப்புச் சிலையாக விஷ்ணு செதுக்கப்பட்டுள்ளார். இந்த அகழ்வால் பின்சுவரின் கிழ்ப்பகுதி ஒரு மீட்டர் அகலத்தில் விஷ்ணு நிற்கும் தலம் உருவாகியுள்ளது. கோட்டத்தின் இருபுறமும் நன்கு செதுக்கப்படாத நான்முக அரைத்தூண்கள் என சுவர்த்துண்டுகள் அமைந்துள்ளன. மேலே போதிகைகள் உள்ளன. போதிகைகளின் விரிகோணக் கைகள் தாங்குமாறு அமைந்துள்ள உத்திரம் உள்ளது. வாஜனம், வலபி, கபோதம் இடம்பெறவில்லை.

சமபாத நிலையிலுள்ள விஷ்ணுவின் சிற்பம் தொடர்ந்த எண்ணைப்பூச்சால் மழுங்கியுள்ளது. தலைச்சக்கரம் பெற்ற கிரீடமகுடம், குண்டலங்கள் இவற்றை அடையாளம் காணமுடிந்தாலும் குண்டலங்கள் இவ்வகைப்பட்டவை என உறுதிசெய்ய முடியவில்லை. பின் கைகளில் வலப்புறம் சங்கு , இடப்புறம் சக்கரம் உள்ளன. முன்கைகளில் வலக்கை இடுப்பில் அமர, இடக்கை இடுப்பருகே ஏந்தாக உள்ளது. நிவீதம், முப்புரி நூல், கச்சம் வைத்த பட்டாடை, முடிச்சுத்தொங்கல்களுடன் இடைக்கட்டு அமைந்திருக்கும் விதம் சிற்பத்தின் காலத்தை பொயு எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என கூறும்படி செய்கிறது.

இக்கருவறைக் குடைவரையில் வெளியே பாறைசரிவின் மேற்கில் ஒரு கோட்டமும் கிழக்கில் ஒரு கோட்டமும் குடைவரையாகச் செதுக்கப்பட்டுள்ளன. மேற்குக்கோட்டத்தில் பிள்ளையார் இலலிதாசனத்தில் வலம்புரியாக காட்டப்பட்டுள்ளார். கரண்ட மகுடம், சரப்பளி, தோள்வளைகள், கைவளைகள் சிற்றாடை ஆகியவை உள்ளன. வலத்தந்தம் முழுமையாக இருக்க இடத்தந்தம் உடைந்த நிலையிலுள்ளது. கடகத்தில் பின்கைகள் சிதைந்துள்ளன. வலது முழங்கைமேல் உள்ள வலைக்கைப்பொருளை சிதைவின் காரணமாக அடையாளம் காணமுடியவில்லை இடமுன்கை தொடைமேல் கடகமாக உள்ளது, பாதத்தின் மேற்புறம் தெற்கு பார்வையாகுமாறு இடக்கால் கிடையாக அமைய, வலக்கால் குத்துக்காலாகப் பாதம் பார்சுவத்தில் திருப்பப்பட்டுள்ளது.


ர்உலெழல்ந்ப்அவ

இதன் பின் சுவரில் சமபதய்த்திரம், ம்க்