under review

ஏர்னஸ்ட் கோர்டான்: Difference between revisions

From Tamil Wiki
(changed template text)
(Removed bold formatting)
Line 5: Line 5:
ஏர்னஸ்ட் கோர்டான் (Ernest Gordon) (மே 31, 1916 – ஜனவரி 16, 2002) சயாம் மரண ரயில்பாதையில் போர்க்கைதிகளாக இருந்தவர்களில் ஒருவர்.ராணுவ அதிகாரி. பின்னர் மதப்பணியாளரானார். கோர்டானின் மரணரயில்பாதை நினைவுகள் நூல்வடிவாயின. பின்னர் அதையொட்டி திரைப்படம் ஒன்று தயாரிக்கப்பட்டது.

பார்க்க : [[சயாம் மரண ரயில்பாதை|'''சயாம் மரண ரயில்பாதை''']]
பார்க்க : [[சயாம் மரண ரயில்பாதை|சயாம் மரண ரயில்பாதை]]
== இளமை, கல்வி ==
== இளமை, கல்வி ==
ஏர்னஸ்ட் கோர்டான் ஸ்காட்லாந்தில் கிரீனோக் Greenock என்னும் ஊரில் ஜேம்ஸ் கோர்டானுக்கும் சாரா மாக்மில்லனுக்கும்  மே 31, 1916-ல் பிறந்தார்.  
ஏர்னஸ்ட் கோர்டான் ஸ்காட்லாந்தில் கிரீனோக் Greenock என்னும் ஊரில் ஜேம்ஸ் கோர்டானுக்கும் சாரா மாக்மில்லனுக்கும்  மே 31, 1916-ல் பிறந்தார்.  

Revision as of 11:00, 16 December 2022

To read the article in English: Ernest Gordon. ‎

ஏர்னஸ்ட் கோர்டான் 2001
கோர்டான் திரைப்படம்
கோர்டான் இளமையில்

ஏர்னஸ்ட் கோர்டான் (Ernest Gordon) (மே 31, 1916 – ஜனவரி 16, 2002) சயாம் மரண ரயில்பாதையில் போர்க்கைதிகளாக இருந்தவர்களில் ஒருவர்.ராணுவ அதிகாரி. பின்னர் மதப்பணியாளரானார். கோர்டானின் மரணரயில்பாதை நினைவுகள் நூல்வடிவாயின. பின்னர் அதையொட்டி திரைப்படம் ஒன்று தயாரிக்கப்பட்டது.

பார்க்க : சயாம் மரண ரயில்பாதை

இளமை, கல்வி

ஏர்னஸ்ட் கோர்டான் ஸ்காட்லாந்தில் கிரீனோக் Greenock என்னும் ஊரில் ஜேம்ஸ் கோர்டானுக்கும் சாரா மாக்மில்லனுக்கும் மே 31, 1916-ல் பிறந்தார்.

பள்ளியிறுதிக் கல்விக்குப்பின் 1936-ல் ராணுவத்தில் சேர்ந்த கோர்டான் போருக்குப்பின் ஹார்ட்போர்ட் இறையியல் கல்லூரி (Hartford Theological Seminary)யில் 1948- ல் இளங்கலை பட்டமும் முதுகலைப்பட்டமும் பெற்றார். கிளாஸ்கோ பல்கலையில் (University Glasgow ) 1951-ல் முதுகலைப் பட்டம் பெற்றார். 1959-ல் சட்டத்தில் முனைவர் பட்டத்தை புளூம்ஃபீல்ட் கல்லூரியிலும் (Bloomfield College), 1966-ல் மொழியியல் சிறப்புப் பட்டத்தை கனடாவின் பிஷப் பல்கலை கழகத்திலும் பெற்றார்.

தனிவாழ்க்கை

ஏர்னஸ்ட் கோர்டான் ஹெலென் மக் ராபர்ட்சனை (Helen McIntosh Robertson) டிசம்பர் 17, 1945-ல் மணந்தார். அவர்களுக்கு கிலியன் மார்க்கரெட் (Gillian Margaret ) அலஸ்டார் ஜேம்ஸ் ( Alastair James ) என இரு வாரிசுகள். ஜெலென் 1997-ல் மறைந்தார்.

போர்ப்பணி

பிரிட்டிஷ் ராணுவத்தில் கோர்டான் ஆர்கில் மற்றும் சுதர்லான் ஹைலாண்டர்ஸ் ( Argyll and Sutherland Highlanders) பிரிவுகளின் இரண்டாவது படைப்பிரிவில் காப்டனாக இருந்தார். மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் பல போர்களில் கலந்துகொண்டார். சிங்கப்பூரில் இருந்து மலேசியாவுக்கு பாலங்களை உடைத்துவிட்டு ஜோகூர் வழியாக பிரிட்டிஷ் ராணுவம் பின்வாங்கியபோது அப்பிரிவில் இறுதியாக சென்ற படைப்பிரிவை வழிநடத்தினார். சிங்கப்பூரை ஜப்பானியர் கைப்பற்றியபோது கோர்டான் ஜாவாவிற்கு தப்பிச் சென்றார். படாங் Padang துறைமுகத்தில் இருந்து ஸ்ரீலங்காவின் கொழும்பு துறைமுகத்திற்கு மீனவப்படகொன்றில் பிரிட்டிஷ் படைவீரர்களுடன் தப்பிச் செல்ல முயன்றார். ஜப்பானிய போர்க் கப்பலால் பிடிக்கப்பட்டு சிங்கப்பூருக்கு போர்க்கைதியாக அனுப்பப் பட்டார்.

சயாம் மரண ரயில்பாதையில்

சயாம் மரண ரயில்பாதையில் கோர்டான் போர்க்கைதியாக பணியாற்றினார். குவாய் நதிப் பாலத்தை கட்டியவர்களில் அவரும் ஒருவர். உடல் எடை மிகக்குறைந்து மலேரியாவால் பாதிக்கப்பட்டு சாகப்போகும் கைதிகளுக்கான மரண வார்டில் அவர் சேர்க்கப்பட்டார். அங்கே மெதடிஸ்ட் கிறிஸ்தவப் பிரிவை சேர்ந்த ’டஸ்டி’ மில்லர்(Dusty Miller) மற்றும் ரோமன் கத்தோலிக்க பிரிவைச் சேர்ந்த டிண்டி மூர் (."Dinty" Moore) இருவரும் கோர்டான் உயிர் தப்ப உதவினர். அதுவரை மத நம்பிக்கையில்லாதவராக இருந்த கோர்டான் அவர்களின் எளிமை, நம்பிக்கை, ஊக்கம் ஆகியவற்றால் கவரப்பட்டார். டஸ்டி மில்லர் ஒரு ஜப்பானிய படைவீரனால் கொல்லப்பட்டார். டிண்டி போர்க்கைதிகளுக்கான கப்பலில் சென்றுகொண்டிருந்தபோது அதன் மேல் அடையாளமேதும் இல்லாமலிருந்தமையால் அமெரிக்கப் படைக்கப்பலால் அவர் சென்ற கப்பல் மூழ்கடிக்கப்பட்டது. அவர்கள் இருவருடைய சேவையும் ஆளுமையும் கோர்டானை மனம் மாறச்செய்து ஆழ்ந்த கிறிஸ்தவ நம்பிக்கை கொண்டவராக மாற்றின.

போருக்குப்பின்

1946-ல் நேசநாடுகள் போரில் வென்றபோது கோர்டான் விடுதலையானார். ஸ்காட்லாந்துக்கு திரும்பி ஸ்காட்லாந்து திருச்சபையின் (Church of Scotland ) போதகராக பைஸ்லி அபே (Paisley Abbey )யில் 1950-ல் பணிக்குச் சேர்ந்தார். பின்னர் அமெரிக்காவில் குடியேறி லாங் ஐலண்ட் பகுதியில் அமாகன்செட் (Amagansett ) மாண்டாக் (Montauk) ஆலயங்களில் பணியாற்றினார். பிரின்ஸ்டன் பல்கலைக் கழக தேவாலயத்திற்கு பிரிஸ்பேனியன் பிரிவின் Presbyterian போதகராக 1954-ல் வந்தார். 1960-ல் அமெரிக்கக் குடிமகனாக ஆனார். இறப்பது வரை பிரின்ஸ்டனில் போதகராக நீடித்தார்.

மறைவு

கோடான் ஜனவரி 16, 2002-ல் மறைந்தார்.

கௌரவங்கள்

கோர்டான் மேலும் கௌரவ டாக்டர் பட்டங்களைப் பெற்றவர்.

  • 1973-ல் மார்ஷால் பல்கலைக்கழகத்தில் (Marshall University ) கௌரவ டாக்டர் பட்டம்..
  • 1976-ல் ஸ்காட்லாந்தின் செயின்ட் ஆண்ட்ரூஸ் பல்கலை(St. Andrews University, Scotland)கௌரவ டாக்டர் பட்டம்..
  • 1988-ல் குரோவ் சிட்டி காலேஜ் (Grove City College) கௌரவ டாக்டர் பட்டம்..

திரைப்படம்

கோர்டான் எழுதிய Through the Valley of the Kwai என்னும் நாவலை அடியொற்றி End All Wars என்னும் திரைப்படம் 2001-ல் வெளியானது.

நூல்கள்

  • To End All Wars (2002)
  • Through the Valley of the Kwai (1962)
  • Miracle on the River Kwai (1963)

உசாத்துணை

✅Finalised Page