எஸ். சுரேஷ்

From Tamil Wiki

எஸ். சுரேஷ் (பிப்ரவரி 3, 1965) தமிழ் மற்றும் ஆங்கிலத்திலும் எழுதி வரும் எழுத்தாளர். கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர், சிறுகதைகள் எழுதி வருகிறார்.

வாழ்க்கைக் குறிப்பு

எஸ். சுரேஷ் விழுப்புரம் மாவட்டத்தில் சுந்தரேசன், பாமா தம்பதியினருக்கு மகனாக பிப்ரவரி 3, 1965இல் மகனாகப் பிறந்தார். வளர்ந்தது சிகந்திரபாத். தற்போது பெங்களூரில் வசித்து வருகிறார். ஒஸ்மானியா பல்கலைக்கிழகத்தில் பி.டெக் (கெமிக்கல் எஞினியரிங்) இளங்கலைப்பட்டம் பெற்றார். பெங்களூரு (IISC) இந்திய அறிவியல் நிறுவனத்தில் எம்.டெக் (கெமிக்கல் எஞினியரிங்) முதுகலைப்பட்டம் பெற்றார். பெங்களூரில் ஐ.டி. (க்ளெளட் டெக்னாலஜி எக்ஸ்பர்ட்) பயிற்சி மையம் நடத்துகிறார். மனைவி காயத்ரி. பிள்ளைகள் ஸ்ரீரஞ்சனி மற்றும் ஹரிணி

இலக்கிய வாழ்க்கை

சுரேஷ் தமிழ் மற்றும் ஆங்கிலத்திலும் எழுதி வருகிறார். இசை, சினிமா பற்றிய கட்டுரைகள் எழுதி வருகிறார். மொழிபெயர்ப்பாளர். கவிதைகள், சிறுகதைகள் எழுத்தி வருகிறார். 'மூக முனி' என்ற சிறுகதை இவருடைய முதல் புனைவு கதை பதாகையில் வெளிவந்தது. கே.வீ.மகாதேவன் சினிமா இசையில் செவ்வியல் இசையை கையாண்ட விதத்தை சித்தரிக்கும் கட்டுரை தமிழில் இவருடைய முதல் ஆக்கம் சொல்வனத்தில் வெளிவந்தது. பதகையிலும் சொல்வனத்திலும் எழுதிய கதைகள் 'பாகேஷ்ரீ' என்ற தலைப்பில் தொகுக்கபட்டு 'யாவரும் - பதாகை' பிரசுரத்தால் வெளியிடப்பட்டது. பதாகைக்கு எழுதிய 'மிருக கவிதைகள்' தொகுப்பு இலவச நூலாக வெளியிடப்பட்டது. பதாகைக்கு பெண் கவிஞர்களை முன்வைத்து 'கவியின் கண்' எனும் தொடரை எழுதினார். சொல்வனத்தில் இவர் இசை கட்டுரைகளையும், இந்திய கிளாசிக் புத்தக விமர்சனங்களையும், சினிமா விமர்சனங்களையும் எழுதியுள்ளார்.

ஆங்கிலத்தில் இவர் எழுதிய இசைக் கட்டுரைகளை தொகுத்து 'Music without Boundaries' என்ற பெயரில் கிண்டிலில் வெளியிடப்பட்டுள்ளது. குறுந்தொகை கவிதைகள் சிலவற்றையும், தெலுங்கு கவிஞர் க்ஷேத்ரய்யா கவிதைகள் சிலவற்றையும் இவர் மொழிபெயர்த்திருக்கிறார். அவை சாகித்ய அகாடெமியின் 'Indian Literature' என்னும் இதழில் வெளியிடப்பட்டன.

தன் ஆதர்ச எழுத்தாளராக தமிழில் அசோகமித்ரன் மற்றும் ஜெயமோகன்-யும், உலக அளவில் டால்ஸ்டாய், தஸ்தாயெவ்ஸ்கி, மர்க்வெஸ் மற்றும் ஜான்லிகாரே ஆகியோரையும் குறிப்பிடுகிறார். இந்தியா மொழிகளில் பிடித்த எழுத்தாளர்களாக வைக்கம் முகம்மெத் பஷீர், பிபூதி பூஷன், தாரா ஷங்கர், பைரப்ப, பூர்ணசந்த்ர தேஜெஸ்வி, ராகவேந்திர பாட்டீல், பி.கே.பணர்ஜீ, நரேந்திராநாத் மித்ரா ஆகியோரைக் கூறுகிறார்.

விருதுகள்

  • 'பாகேஷ்ரீ' தொகுப்புக்கு 'சுஜாதா உயிர்மை' விருது வழங்கப்பட்டது.
  • இவருடைய சிறுகதையான 'வன்மம்' இவரால் மொழிபெயர்க்கப்பட்டு 'DNA Out of Print' எனும் ஆங்கில இதழில் பிரசுரிக்கபட்டு முதல் பரிசு கொடுக்கபட்டது.

நூல்கள்

  • 'பாகேஷ்ரீ' சிறுகதை தொகுப்பு (தமிழ்)
  • 'ம்யூசிக் விதவுட் பௌண்டரீஸ்' (ஆங்கிலம்)

உசாத்துணை