being created

எம். கந்தசாமி முதலியார்

From Tamil Wiki
Revision as of 19:16, 2 January 2023 by ASN (talk | contribs) (Page created; Para Added, Image Added)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
எம். கந்தசாமி முதலியார்

எம். கந்தசாமி முதலியார் (ம. கந்தசாமி முதலியார்; மயிலாப்பூர் கந்தசாமி முதலியார்; எம்.கே. முதலியார்) (1874-1939) தமிழ் நாடக முன்னோடிகளுள் ஒருவர். நாடகத் திரைக்கதை வசன ஆசிரியர். நடிகர். இயக்குநர். நடிகர் எம்.ஜி. ராமச்சந்திரனின் குரு. நடிகர் எம். கே. ராதாவின் தந்தை.

பிறப்பு, கல்வி

எம். கந்தசாமி முதலியார், சென்னையில், 1874-ல், தணிகாசல முதலியார்-பாப்பாத்தி அம்மாள் இணையருக்குப் பிறந்தார். மைலாப்பூரில் தொடக்க, உயர்நிலைக் கல்விகளைக் கற்றார். சென்னை சர்வ கலாசாலையில் ஆங்கில இலக்கியத்தில் பி.ஏ. பட்டம் பெற்றார். மேற்கல்வியைச் சென்னை கிறித்துவக் கல்லூரியில் கற்றார்.

தனி வாழ்க்கை

சென்னை அக்கவுண்டென்ட் ஜெனரல் அலுவலகத்தில் பணியாற்றினார். மணமானவர். இளம் வயதிலேயே மனைவியை இழந்தார். மறுமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்தார். ஒரே மகன் நடிகர் எம்.கே. ராதா.

நாடக வாழ்க்கை

கிறித்துவக் கல்லூரியில், கந்தசாமி முதலியாருக்கு ஆசிரியராக இருந்த வில்லியம் மில்லர் நடத்திய பாடங்களும், ஷேக்ஸ்பியர், இப்சன் போன்றோரின் படைப்புகளும் நாடக ஆர்வத்தை உண்டாக்கின. கல்லூரி நாடகங்கள் பலவற்றிற்கு வசனம் எழுதி நடித்தார். பம்மல் சம்பந்த முதலியார் ஆரம்பித்து நடத்தி வந்த ‘சுகுண விலாச சபை’யில் சேர்ந்து சிறு சிறு வேடங்களில் நடித்தார். சம்பந்த முதலியார், தான் தயாரித்து நடித்த ‘மனோஹரன்’ நாடகத்தில் ‘வசந்தசேனை’ பாத்திரத்தை கந்தசாமி முதலியாருக்கு அளித்தார். பெண் வேடம் பூண்டு, பெண் குரலில் பேசி வில்லிப் பாத்திரத்தில் திறம்பட நடித்து வரவேற்பைப் பெற்றார், கந்தசாமி முதலியார்.




🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.