எம்.வி. வெங்கட்ராம்

From Tamil Wiki
Revision as of 22:24, 7 December 2022 by Navingssv (talk | contribs) (Created page with "எம்.வி.வெங்கட்ராம் (மே 18, 1920 - ஜனவரி 14, 2020) தமிழ் நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர். மணிக்கொடி இலக்கியக்குழுவின் இளைய உறுப்பினர். == பிறப்பு, கல்வி == எம்.வி. வெங்கட்ராம் மே 18, 1920 அன்று கும்ப...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

எம்.வி.வெங்கட்ராம் (மே 18, 1920 - ஜனவரி 14, 2020) தமிழ் நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர். மணிக்கொடி இலக்கியக்குழுவின் இளைய உறுப்பினர்.

பிறப்பு, கல்வி

எம்.வி. வெங்கட்ராம் மே 18, 1920 அன்று கும்பகோணம் மாவட்டத்தில் சௌராஷ்ட்ராக் குடும்பத்தில் ’ரெங்கா’ வீரய்யர், சீதையம்மாள் தம்பதியருக்கு மூன்றாவது குழ்ந்தையாகப் பிறந்தார். உடன்பிராந்தவர்கள் நால்வர். தந்தை ரெங்கா வீரய்யர் குடும்ப குலத் தொழிலான நெசவு தொழில் செய்தார். எம்.வி. வெங்கட்ராம் தன் ஐந்து வயதில் தாய் மாமனான மைசூர் வெங்கடாசலம், சரஸ்வதி தம்பதியருக்கு தத்துக் கொடுக்கப்பட்டார். எம்.வி. வெங்கட்ராம் தன் வளர்ப்பு தந்தை பெயரையும் சேர்த்து தன் முழு பெயரை மைசூர். வெங்கடாசலம். வெங்கட்ராம் (எம்.வி.வி) என்றே குறிப்பிடுவார்.

எம்.வி. வெங்கட்ராம் ஆரம்ப கல்விக்கு பின் கும்பகோணம் நகர உயர்நிலைப் பள்ளியில் ஆங்கில வழியில் பயின்றார். கல்லூரி இண்டர்மீடியட் படிப்பை கும்பகோணம் அரசு கல்லூரியில் தொடர்ந்தார். கல்லூரி நாட்களில் ’இந்தி விசாரத்’ தேர்வுக்காக பி.எம். கிருஷ்ணசாமியிடம் தனியாக இந்தி பயின்றார். அப்போது பி.எம். கிருஷ்ணசாமி மணிக்கொடி இதழில் இந்தி சிறுகதைகளை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டு வந்தார்.