under review

ஊற்றுமலை இருதயாலய மருதப்ப தேவர்: Difference between revisions

From Tamil Wiki
(Corrected error in line feed character)
(Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)
 
Line 2: Line 2:
[[File:ஊற்றுமலை ஜமீந்தார்.png|thumb|ஊற்றுமலை ஜமீன்தார்]]
[[File:ஊற்றுமலை ஜமீந்தார்.png|thumb|ஊற்றுமலை ஜமீன்தார்]]
[[File:Iruthalaya.png|thumb|இருதயாலய மருதப்பர்]]
[[File:Iruthalaya.png|thumb|இருதயாலய மருதப்பர்]]
ஊற்றுமலை இருதயாலய மருதப்ப தேவர் (பொ.யு. 19-ஆம் நூற்றாண்டு) நிலக்கிழார். ஊற்றுமலை ஜமீன்தார். தமிழ்ப்புலவர்களை ஆதரித்தவர்.
ஊற்றுமலை இருதயாலய மருதப்ப தேவர் (பொ.யு. 19-ம் நூற்றாண்டு) நிலக்கிழார். ஊற்றுமலை ஜமீன்தார். தமிழ்ப்புலவர்களை ஆதரித்தவர்.
== முன்னோர் ==
== முன்னோர் ==
[[File:ஊற்றுமலை ஜமீந்தார்2.jpg|thumb|ஊற்றுமலை ஜமீந்தார்]]
[[File:ஊற்றுமலை ஜமீந்தார்2.jpg|thumb|ஊற்றுமலை ஜமீந்தார்]]
Line 12: Line 12:
மதுரை மன்னர் விஸ்வநாத நாயக்கர் காலத்தில் பிரிக்கப்பட்ட 72 பாளையங்களில், ஊற்றுமலை மிகப்பெரிதாக திகழ்ந்துள்ளது. இதன் ஆளுகைக்குள் 148 கிராமங்கள் இருந்தன. ஒரு காலகட்டத்தில் சுரண்டை ஜமீனையும் ஊத்துமலை ஜமீன்தார் ஏலம் எடுத்து தனது ஆளுகைக்கு கொண்டுவந்தார். பின்னர் வெள்ளையர் ஆட்சிக்காலத்தில் ஜமீன்தார் பட்டம் கிடைத்தது.  

1850-ஆம் ஆண்டு ஆங்கில அரசு ஒவ்வொரு பளையங்ககளின் மரபு,உரிமை மற்று ஆதரத்தை சமர்பிக்குமறு ஆணையிட்டது . ஆதாரமில்லாமல் நிகழும் அரசுகளை தன் அரசாங்கத்தில் சேர்ப்பதே அவர்களின் எண்ணம். எனவே அனைத்துப் பளையங்களும் தனித்தனியே வம்சாவளிகளை எழுதிக்கொண்டனர்.இவை ’கைபீது’ என அழைக்கப்படுகின்றன.
1850-ம் ஆண்டு ஆங்கில அரசு ஒவ்வொரு பளையங்ககளின் மரபு,உரிமை மற்று ஆதரத்தை சமர்பிக்குமறு ஆணையிட்டது . ஆதாரமில்லாமல் நிகழும் அரசுகளை தன் அரசாங்கத்தில் சேர்ப்பதே அவர்களின் எண்ணம். எனவே அனைத்துப் பளையங்களும் தனித்தனியே வம்சாவளிகளை எழுதிக்கொண்டனர்.இவை ’கைபீது’ என அழைக்கப்படுகின்றன.

இந்த கைபீதுகளில் ஒவ்வொரு ஆட்சியாளரும் தங்கள் குலவரிசை, மதம் சார்ந்த உரிமைகள். நிலவுரிமைகள் ஆகியவற்றை குறிப்பிடுகின்றன. தங்கள் சாதியடையாளத்திற்கு தொன்மங்களுடனுள்ள உறவையே அடிப்படையாகக் கொண்டுள்ளனர். அவற்றை புலவர்களைக்கொண்டு எழுதுவித்தனர்.

Latest revision as of 07:25, 24 February 2024

To read the article in English: Ootrumalai Iruthayaalaya Maruthappa Devar. ‎

ஊற்றுமலை ஜமீன்தார்
இருதயாலய மருதப்பர்

ஊற்றுமலை இருதயாலய மருதப்ப தேவர் (பொ.யு. 19-ம் நூற்றாண்டு) நிலக்கிழார். ஊற்றுமலை ஜமீன்தார். தமிழ்ப்புலவர்களை ஆதரித்தவர்.

முன்னோர்

ஊற்றுமலை ஜமீந்தார்
ஊற்றுமலை ஜமீன்

திருநெல்வேலி, தென்காசி மாவட்டத்திற்கு அருகேயுள்ள வீரகேரளம்புதூரைச் சார்ந்தது ஊற்றுமலை ஜமீன். திருநெல்வேலி சீமையில் ஆட்சி செய்த மறவர் இனத்தைச் சேர்ந்த பாளையக்காரர்கள் அனைவரும் ராமநாதபுரம் பகுதியில் உள்ள "கிலுவை" நாட்டிலிருந்து வந்தவர்கள். மறவர் இனத்தில் கொண்டயங்கோட்டைப் பிரிவை சேர்ந்தவர்கள்தான் ஊற்றுமலை ஜமீன்தார்கள்.

ஊத்துமலை ஜமீன்தாருக்கு விஜயகுணராம பாண்டியன் என்ற பட்டம் உண்டு. இவர் உபய சாமரம், புலிக்கொடி, மகரக்கொடி, இந்திரனின் கொடியான வலரிக் கொடி ஆகியவற்றைப் பெற்றவர். குறும்பர்களின் தொல்லையை அடக்கி பாண்டியனை காத்தமைக்காக இந்த மரியாதைகளும் பாண்டியன் என்னும் பட்டப்பெயரும் அளிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

மதுரை மன்னர் விஸ்வநாத நாயக்கர் காலத்தில் பிரிக்கப்பட்ட 72 பாளையங்களில், ஊற்றுமலை மிகப்பெரிதாக திகழ்ந்துள்ளது. இதன் ஆளுகைக்குள் 148 கிராமங்கள் இருந்தன. ஒரு காலகட்டத்தில் சுரண்டை ஜமீனையும் ஊத்துமலை ஜமீன்தார் ஏலம் எடுத்து தனது ஆளுகைக்கு கொண்டுவந்தார். பின்னர் வெள்ளையர் ஆட்சிக்காலத்தில் ஜமீன்தார் பட்டம் கிடைத்தது.

1850-ம் ஆண்டு ஆங்கில அரசு ஒவ்வொரு பளையங்ககளின் மரபு,உரிமை மற்று ஆதரத்தை சமர்பிக்குமறு ஆணையிட்டது . ஆதாரமில்லாமல் நிகழும் அரசுகளை தன் அரசாங்கத்தில் சேர்ப்பதே அவர்களின் எண்ணம். எனவே அனைத்துப் பளையங்களும் தனித்தனியே வம்சாவளிகளை எழுதிக்கொண்டனர்.இவை ’கைபீது’ என அழைக்கப்படுகின்றன.

இந்த கைபீதுகளில் ஒவ்வொரு ஆட்சியாளரும் தங்கள் குலவரிசை, மதம் சார்ந்த உரிமைகள். நிலவுரிமைகள் ஆகியவற்றை குறிப்பிடுகின்றன. தங்கள் சாதியடையாளத்திற்கு தொன்மங்களுடனுள்ள உறவையே அடிப்படையாகக் கொண்டுள்ளனர். அவற்றை புலவர்களைக்கொண்டு எழுதுவித்தனர்.

தொன்மக்கதைகளின்படி மீனாட்சி திக்விஜயம் செய்யும்போது அசுரர்கள் தடைசெய்தமையால் அவர்களை வெல்லும்பொருட்டு தேவியின் வலப்புறத்தில் தோன்றியவர்கள் என்று இவர்கள் கூறிக்கொண்டனர். இவர்கள் வலங்கைப் பிரிவினர் என்பதற்கான சான்று. தங்களுடைய வேட்டுவப் பின்னணியைச் சுட்ட கண்ணப்ப நாயனார் கதையையும், திருமங்கை ஆழ்வார்களின் கதையையும் குறிப்பிடுகின்றனர்

இவர்கள் சூரிய குலத்தவர்கள் என்றும், இதனால் சந்திரகுலத்தவராகிய பாண்டியன் பெண்கேட்டபோது மறுத்துவிட்டதாகவும் கைபீதில் கூறப்படுகிறது.

இவர்களின் குலதெய்வம் நவநீத கிருட்டிணப் பெருமாள். பொதுவாக தேவர்கள் சைவ மரபினர். இவர்கள் வைணவத்தை ஏற்றுக்கொண்டவர்கள்.

பிறப்பு, இளமை

ஊத்துமலை ஜமீனில் புகழ்பெற்றவர் இருதயாலய மருதப்ப தேவர். (வீரகேரளம்புதூர் கோயிலின் இறைவனின் பெயர் இருதயாலயர்) இப்பகுதியில் இருந்த சேற்றூர் (சேத்தூர்) ஜமீன்தார் வடகரை ஜமீன்தார் உதவியுடன் தென்கரை ஜமீன்தாரையும் ஊற்றுமலை ஜமீன்தாரையும் வென்றார். ஊற்றுமலை ஜமீன்தாரின் மனைவி பூசைத்தாயார் தன் இரு மைந்தர்களுடன் தென்காசி சென்று தலைமறைவாக வாழ்ந்து வந்தார். அவருடைய முதல் மைந்தரே இருதயாலய மருதப்பர். இளையவர் சீவலவ தேவர். பின்னர் அவர்கள் வடகரை சேற்றூர் ஜமீனின் ஆலோசகரான பொன்னம்பலம் பிள்ளை என்பவரின் ஆதரவுடன் தங்கள் ஜமீனை மீட்டனர். இதை உ.வே.சாமிநாதையர் குறிப்பிடுகிறார்.

தனிவாழ்க்கை

இருதயாலய மருதப்ப தேவர் ஊற்றுமலைக்கு அருகிலுள்ள குருந்தன்மொழி கிராமத்தில் சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்த மீனாட்சி சுந்தரம்மாள் என்னும் பெண்ணை கண்டு மணக்க விரும்பி தனது உடைவாளை அனுப்பி அவரிடம் மணம் முடிக்க சம்மதம் கேட்டார். அவர் வரண்ட ஊற்றுமலைக்கு வரமாட்டேன் என்று சொன்னமையால் இருதயாலயமருதப்பர் சிற்றாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டி அதிலிருந்து கால்வாய் வெட்டினார். வீரகேரளம்புதூர் என்ற இடத்தில் கால்வாயின் இருபுறங்களிலும் அரண்மனையைக் கட்டினார். அது தாயார் தோப்பு என அழைக்கப்படுகிறது. அருகிலேயே நவநீத கிருஷ்ண சுவாமி கோயிலை கட்டினார். தன் அரண்மனையை வீரகேரளம் புதூருக்கு மாற்றினார். 25.5.1864 அன்று இருதாலய மருத்தப்பதேவருக்கும் மீனாட்சி சுந்தர நாச்சியாருக்கும் திருமணம் நடந்தது.

இலக்கிய ஈடுபாடு

ஊற்றுமலை ஜமீன்

மருதப்ப தேவருடைய காலத்தில் காவடிச்சிந்து பாடிய சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியாரும், வண்ணச்சரபம் தண்டபாணி ஸ்வாமிகளும் இருந்தனர். அண்ணாமலை ரெட்டியார் அவைக்களப்புலவராக இருந்தார். வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் நவநீதகிருட்டிண கலம்பகம் பாடவும், அண்ணாமலை ரெட்டியார் காவடிச்சிந்து பாடவும் ஊக்குவித்தார். ஊற்றுமலை இருதயாலய மருதப்ப தேவர் உ.வே.சாமிநாதையருக்கு பொருளிதவி செய்தார். உ.வே.சாமிநாதையர் ஊற்றுமலையில் உ.வே.சாமிநாதையரின் உபசரிப்பில் தங்கியிருந்து, அவரை பாராட்டி பாடல்களும் புனைந்துள்ளார்.

ஆதரித்த புலவர்கள்

புகழ்

இருதயாலய மருதப்ப தேவர் மீது பாடப்பட்ட செய்யுள்களை "ஊற்றுமலை தனிப்பாடல் திரட்டு" என்ற நூலாகத் தொகுத்தனர்.

உ.வே.சாமிநாதையர் இவரைப் பற்றி பாடிய புகழ்பாடல்கள் இரண்டு

மண்களிக்கும் வீரையிடைக் கண்ணன்நவ நீதமிரு

     மலர்கை ஏந்திக் 

கண்களிக்கும் படி நிற்கும் காட்சிஇத யாலயமா

     கனவான் ஊட்டும் 

விண்களிக்கும் சுவைமிகுசிற் றுண்டிகளா தியநிதமும்

     விரும்பி உண்டுண்

டெண்களிக்கும் சுவையதனை மறந்தொழிந்த

   பெருமிதத்தை இயம்பும் மன்னே !

தன்னிடைமுன் துயின்றிடுமா தவன்வடிவு பிறிதொன்று

    தரித்தே தன்பால் 

மன்னிடுமற் றையஅனைத்தும் மருவிஇத யாலயப்பேர்

    மருவி யாரும் 

பன்னிடுமா றுறல்தெரிந்த பாற்கடலும் அவன்போலப்

    படிவ மாறித் 

துன்னிடுமற்றையதங்கி அவற்றங்கி வீரையெனத்

    துலங்கிற் றலோ. 

உசாத்துணை

✅Finalised Page