under review

உதயண குமார காவியம்: Difference between revisions

From Tamil Wiki
(Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)
No edit summary
 
Line 1: Line 1:
உதயண குமார காவியம் ஐஞ்சிறுங் [[காப்பியங்கள்|காப்பியங்க]]ளில் ஒன்று. [[சமணம்|சமண]] சமயம் சார்ந்தது. உதயணன் கதையைக் கூறும் நூல் பெருங்கதை. வட மொழியின் தழுவல் அந்நூல். அதனை இயற்றியவர் கொங்குவேளிர் என்பவர். பெருங்கதையின் சுருக்கமே உதயண குமார காவியம். இது சமண சமயப் பெண்பால் துறவியரில் ஒருவரான கந்தியர் என்பவரால் இயற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.  

== நூல் அமைப்பு ==
== நூல் அமைப்பு ==
369 பாடல்களைக் கொண்ட இந்த நூல், உஞ்சை காண்டம், மகத காண்டம், இலாவண காண்டம், வத்தவ காண்டம், நரவாண காண்டம், துறவுக் காண்டம் என ஆறு காண்டங்களைக் கொண்டுள்ளது. பெருங்கதையின் முதல் பகுதியும் இறுதிப் பகுதியும் கிடைக்கவில்லை. பெருங்கதையில் கிடைக்கப் பெறாத கதைக் குறிப்புகளை அறிந்து கொள்ள, உதயண குமார காவியம் நூல் உதவுகிறது. இக்காப்பியத்தின் முதற்பகுதி உதயணன் வரலாற்றையும், பிற்பகுதி அவனது மகனாகிய நரவாகனனது வரலாற்றையும் கூறுகிறது.
369 பாடல்களைக் கொண்ட உதயண குமார காவியம்  உஞ்சை காண்டம், மகத காண்டம், இலாவண காண்டம், வத்தவ காண்டம், நரவாண காண்டம், துறவுக் காண்டம் என ஆறு காண்டங்களைக் கொண்டுள்ளது.
 
[[பெருங்கதை]] என்னும் சமணக் காப்பியத்தின் முதல் பகுதியும் இறுதிப் பகுதியும் கிடைக்கவில்லை. பெருங்கதையில் கிடைக்கப் பெறாத கதைக் குறிப்புகளை அறிந்து கொள்ள, உதயண குமார காவியம் நூல் உதவுகிறது. இக்காப்பியத்தின் முதற்பகுதி உதயணன் வரலாற்றையும், பிற்பகுதி அவனது மகனாகிய நரவாகனனது வரலாற்றையும் கூறுகிறது.

சீவக சிந்தாமணி, கந்தபுராணம் போன்ற பெரு நூல்களுக்குச் சுருக்க நூல் இயற்றும் மரபு தமிழில் உண்டு. அந்த வகையில், பெருங்கதையின் சுருக்கமாக உருவான நூலே உதயணகுமார காவியம். விருத்தப்பாவில் இந்நூல் இயற்றப்பட்டுள்ளது. இதன் காலம் பதினைந்தாம் நூற்றாண்டாகும்.

Latest revision as of 08:37, 28 April 2024

உதயண குமார காவியம் ஐஞ்சிறுங் காப்பியங்களில் ஒன்று. சமண சமயம் சார்ந்தது. உதயணன் கதையைக் கூறும் நூல் பெருங்கதை. வட மொழியின் தழுவல் அந்நூல். அதனை இயற்றியவர் கொங்குவேளிர் என்பவர். பெருங்கதையின் சுருக்கமே உதயண குமார காவியம். இது சமண சமயப் பெண்பால் துறவியரில் ஒருவரான கந்தியர் என்பவரால் இயற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

நூல் அமைப்பு

369 பாடல்களைக் கொண்ட உதயண குமார காவியம் உஞ்சை காண்டம், மகத காண்டம், இலாவண காண்டம், வத்தவ காண்டம், நரவாண காண்டம், துறவுக் காண்டம் என ஆறு காண்டங்களைக் கொண்டுள்ளது.

பெருங்கதை என்னும் சமணக் காப்பியத்தின் முதல் பகுதியும் இறுதிப் பகுதியும் கிடைக்கவில்லை. பெருங்கதையில் கிடைக்கப் பெறாத கதைக் குறிப்புகளை அறிந்து கொள்ள, உதயண குமார காவியம் நூல் உதவுகிறது. இக்காப்பியத்தின் முதற்பகுதி உதயணன் வரலாற்றையும், பிற்பகுதி அவனது மகனாகிய நரவாகனனது வரலாற்றையும் கூறுகிறது.

சீவக சிந்தாமணி, கந்தபுராணம் போன்ற பெரு நூல்களுக்குச் சுருக்க நூல் இயற்றும் மரபு தமிழில் உண்டு. அந்த வகையில், பெருங்கதையின் சுருக்கமாக உருவான நூலே உதயணகுமார காவியம். விருத்தப்பாவில் இந்நூல் இயற்றப்பட்டுள்ளது. இதன் காலம் பதினைந்தாம் நூற்றாண்டாகும்.

காப்பியத்தின் கதை

கௌசாம்பி நகரத்தின் மன்னன் சதானிகனுக்கும் மனைவி மிருகாபதிக்கும் மூன்று ஆண்மக்கள் பிறந்தனர் . அவர்களில் முதலாமவன் உதயணன். இரண்டாவது மகன் பிங்கலன். மூன்றாவது மகன் கடகன்.

உதயணனின் மிக நெருங்கிய நண்பன் யூகி. இவன் சேதிநாட்டின் முனிவர்கள் தலைவரான பிரமசுந்தர முனிவரின் மகன். உதயணன் யூகி இருவரும் கலைகளில் சிறந்தர்களாய் இருந்தனர்.

பிரமசுந்தர முனிவர், யானையின் சினத்தை அடக்கி வசப்படுத்தும் மந்திரம் ஒன்றை உதயணனுக்குச் சொல்லிக் கொடுத்தார். உதயணனுக்கு இசைப்பயிற்சி அளித்து, இந்திரனால் தனக்கு அளிக்கப்பட்டதும், இசையால் யானைகளை வசப்படுத்த வல்லதுமான 'கோடபதி’ என்னும் யாழையும் பரிசாக அளித்தார். உதயணன் அந்த யாழின் உதவியால் தெய்வயானை ஒன்றை அடக்கி, அதனையே பரிசாகப் பெற்றான் . குபேரனின் இயக்கர்களில் ஒருவனான நஞ்சுகன் என்பவனின் நட்பையும் பெற்றான். தனது மாமனின் நகரமான வைசாலிநகரை உதயணன் ஆட்சி செய்தான். யூகி அவனுக்கு அமைச்சனாக விளங்கினான்.

உதயணனின் தந்தை துறவு பூண்டதால் கௌசாம்பி நாட்டின் ஆட்சியை ஏற்று நடத்தும் பொறுப்பும் உதயணனுக்கு வந்தது. அதனால், தனது நண்பனான யூகியிடம் வைசாலி நகர அரசை ஒப்படைத்தான். இருவரும் தங்கள் தங்கள் நாட்டைச் சிறப்பாக அரசாண்டனர்.

இந்நிலையில் உஞ்ஞைநகர் அரசன் பிரச்சோதனனால் உதயணன் சிறைப்பிடிக்கப்பட்டான். இதனை அறிந்த யூகி தந்திரங்கள் சில செய்து உதயணனைச் சிறை மீட்டான். யூகியின் உதவியால், உதயணன், பிரச்சோதனனின் மகள் வாசவதத்தையைத் திருமணம் செய்து கொண்டான். தொடர்ந்து பதுமாபதி, மானனீகை, விரிசிகை ஆகிய மூன்று பெண்களையும் மணந்துகொண்டான். வாழ்வாங்கு வாழ்ந்த உதயணன், இறுதியில் தன் மகன் நரவாகனனிடம் அரசை ஒப்படைத்து துறவு மேற்கொண்டான்.

பாடல் சிறப்புகள்

யானையின் நடையை

வடிப டும்முழக் கிடியென விடும்
கொடியு டைமதில் கிடுகி டென்றிடும்
விடுபற் கோட்டினில் வெட்டி விட்டிடப்
படப டென்னவே பயண மானதே

- என்று யானையைப் போலவே கம்பீரமாக வல்லெழுத்து ஒலிக்கும் வகையில் சொற்சுவையுடன் குறிப்பிட்டுள்ளார் ஆசிரியர். வாசவதத்தையைப் பிரிந்த உதயணன் புலம்பும் பாடல், மெல்லொலி மிக்கதாக விளங்குகிறது.

வீணைநற் கிழத்திநீ வித்தக உருவுநீ
நாணிற் பாவை தானும்நீ நலந்திகழ் மணியும்நீ
காண என்றன் முன்பதாய்க் காரிகையே வந்துநீ
தோணிமுகம் காட்டெனச் சொல்லியே புலம்புவான்

சொற்சுவையும், பொருட்சுவையும் கொண்டதாக உதயணகுமார காவியம் அமைந்துள்ளது.

பதிப்பு

உ. வே. சாமிநாத ஐயர் இந்நூலை 1935-ம் ஆண்டில் பதிப்பித்து வெளியிட்டார்.

உசாத்துணை

✅Finalised Page