under review

உதயணன் (கனடா): Difference between revisions

From Tamil Wiki
(category & stage updated)
mNo edit summary
Line 1: Line 1:
[[File:உதயணன்2.png|thumb|உதயணன்]]
[[File:உதயணன்2.png|thumb|உதயணன்]]
[[File:Uthayanan .jpg|thumb|உதயணன் கனடா]]
[[File:Uthayanan .jpg|thumb|உதயணன் கனடா]]
உதயணன் (கனடா) (25 மே 1935 - 23 ஜூலை 2019) (ஆர்.சிவலிங்கம்) ( இராமலிங்கம் சிவலிங்கம்) தமிழ் எழுத்தாளர். கனடாவில் டொரொண்டோ நகரில் வாழ்ந்தார். ஃபின்லாந்து நூல்களை மொழியாக்கம் செய்தவர். ஃபின்லாந்தின் தேசியக்காப்பியமான கலேவலாவை தமிழாக்கம் செய்தவர்.
உதயணன் (கனடா) (மே 25, 1935 - ஜூலை 23, 2019) (ஆர்.சிவலிங்கம்) ( இராமலிங்கம் சிவலிங்கம்) தமிழ் எழுத்தாளர். கனடாவில் டொரொண்டோ நகரில் வாழ்ந்தார். ஃபின்லாந்து நூல்களை மொழியாக்கம் செய்தவர். ஃபின்லாந்தின் தேசியக்காப்பியமான கலேவலாவை தமிழாக்கம் செய்தவர்.


(பார்க்க [[உதயணன்]] )
(பார்க்க [[உதயணன்]] )
Line 42: Line 42:
* [https://www.jeyamohan.in/60840 இலக்கியமும் சமூகமும் ஜெயமோகன்]
* [https://www.jeyamohan.in/60840 இலக்கியமும் சமூகமும் ஜெயமோகன்]
*[https://www.jeyamohan.in/?p=168062 காப்பியங்கள் தமிழில் ஜெயமோகன்]
*[https://www.jeyamohan.in/?p=168062 காப்பியங்கள் தமிழில் ஜெயமோகன்]
{{finalised}}
{{finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 22:00, 28 June 2022

உதயணன்
உதயணன் கனடா

உதயணன் (கனடா) (மே 25, 1935 - ஜூலை 23, 2019) (ஆர்.சிவலிங்கம்) ( இராமலிங்கம் சிவலிங்கம்) தமிழ் எழுத்தாளர். கனடாவில் டொரொண்டோ நகரில் வாழ்ந்தார். ஃபின்லாந்து நூல்களை மொழியாக்கம் செய்தவர். ஃபின்லாந்தின் தேசியக்காப்பியமான கலேவலாவை தமிழாக்கம் செய்தவர்.

(பார்க்க உதயணன் )

பிறப்பு, கல்வி

இலங்கையின் யாழ்ப்பாணத்தில் உடுவில் என்னும் ஊரில் 1935 ஜூன் 25 இல் பிறந்தார். இவரது தந்தையார் இராமலிங்கம் இலங்கை ரயில்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். உதயணன் பிறந்த சில தினங்களிலேயே தாயை இழந்தார். உதயணன் காங்கேசன்துறை உறோமன் கத்தோலிக்கப் பாடசாலை, அமெரிக்கன் மிஷன் ஆங்கிலப் பாடசாலை, மற்றும் அனுராதபுரம் செயின்ட் ஜோசப் கல்லூரி, யாழ்ப்பாணம் பரமேஸ்வரா கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றார்.

தனிவாழ்ககை

1955 - 1957 வரை நாவலப்பிட்டி கதிரேசன் தமிழ்ப் பாடசாலையிலும், கதிரேசன் கல்லூரியிலும் ஆங்கில உதவி ஆசிரியராகப் பணியாற்றிய பின்னர், 1957இல் அரச எழுதுவினைஞர் பணியேற்று கொழும்பு சமூக சேவைத் திணைக்களம், புத்தளம் கச்சேரி, யாழ்ப்பாணம் மாநிலக் கல்வி அலுவலகம், மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றம் ஆகியவற்றில் பணியாற்று 1979இல் ஓய்வு பெற்றார். அதன்மேல் ஈராக்கில் கெர்க்கூக் என்னும் நகரில் ஓர் அரேபியக் கம்பனியில் களஞ்சியப் பொறுப்பாளராக மூன்று ஆண்டுகள் பணியாற்றிய பின்னர், ஈரான் - ஈராக் போரை அடுத்து 1982 டிசம்பரில் இலங்கை திரும்பினார்.1983 இனக்கலவரத்தை அடுத்து அவ்வாண்டு அக்டோபரில் பின்லாந்துக்குக் குடிபெயர்ந்தார்

பின்லாந்தில் ஹெல்சிங்கி பல்கலைக்கழகத்தில் ஆய்வு உதவியாளராகவும், பகுதி நேர தமிழ்மொழி விரிவுரையாளராகவும் 1986 இல் நியமனம் பெற்றார். பழந்தமிழ் இலக்கியங்களைப் பின்னிஷ் மொழியில் மொழிபெயர்க்கும் பணி இவருக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் திருக்குறள், சிலப்பதிகாரம் என்னும் படைப்புகளில் இவர் பங்களிப்புச் செய்திருந்தார். பேராசிரியர் அஸ்கோ பார்பொலா (Dr Asko Parpola) வுடன் இணைந்து பணியாற்றினார். இவர் ஆசிய ஆபிரிக்க நாடுகள் தொடர்பான கல்வித்திணைக்களத்தின் இந்தியவியல் கல்விக்குப் பொறுப்பாக இருந்தார். உதயணன் ஹெல்சிங்கி பல்கலைக்கழகத்தில் 19 வருடங்கள் தமிழ் கற்பித்தார்

உதயணன் 2008 ல் கனடாவுக்குக் குடிபெயர்ந்தார்.

இதழியல்

‘ஈழதேவி’ இதழின் வளர்ச்சிக்கும், சிற்பி சி. சிவசரவணபவனை ஆசிரியராகக் கொண்டு 1958 முதல் 1966 வரை வெளிவந்த ’கலைச்செல்வி’ இதழின் வளர்ச்சியிலும் முன்னின்று உழைத்தவர் உதயணன்.

இலக்கிய வாழ்க்கை

தொடக்ககால எழுத்துக்கள்

உதயணன் தனது எழுத்துலகிற்கு வித்திட்டவர்களாக யாழ்.பரமேஸ்வராக் கல்லூரி தமிழாசிரியர் இ.கேதீஸ்வரநாதன், மற்றும் வித்துவான் வேந்தனார், பண்டிதர் மு.ஞானப்பிரகாசம் என்பவர்களை நினைவு கூர்கிறார். 1957ல் உதயணனின் முதல் கவிதை வீரகேசரி இதழில் வெளிவந்தது. உதயணன் 1957 – 1980 காலப்பகுதிகளில் வீரகேசரி, தினகரன், சுதந்திரன், ஈழநாடு, சிந்தாமணி, தினபதி மலர், சுடர், அஞ்சலி, கலைச்செல்வி, தமிழோசை, தமிழின்பம் போன்றவற்றில் எழுபதிற்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதினார். 1961ஆம் ஆண்டில் கல்கி இதழ் நடத்திய சிறுகதைப் போட்டியில் இவரது தேடி வந்த கண்கள் சிறுகதை பரிசு பெற்றது. கல்கி, குமுதம் போன்ற இந்திய இதழ்களிலும் படைப்புகள் வந்துள்ளன.

நாவல்கள்

கலைச்செல்வியில் ‘இதய வானிலே’, ‘மனப்பாறை’ ஆகிய நாவல்களும், வீரகேசரிப் பிரசுர நாவல்களாக ‘பொன்னான மலரல்லவோ’, ‘அந்தரங்ககீதம்’ (சில மாறுதல்களுடன் ’மனப்பாறை’ என்ற பேரில் வெளியாகியது) போன்ற நாவல்களையும் எழுதியிருக்கின்றார். மித்திரன் நாளிதழில் ‘மனக்கோட்டை’ தொடர்கதை, சிந்தாமணியில் ‘கொடிமல்லிகை’ குறுநாவல் வந்துள்ளன. நகைச்சுவைக் கட்டுரை, இதழியல், மொழிபெயர்ப்பு ஆகியவற்றையும் எழுதியுள்ளார். உதயணனின் இரண்டு நாவல்கள் பொன்னான மலரல்லவோ, அந்தரங்க கீதம் ஆகியவை 'வீரகேசரிப் பிரசுரங்கள்' வரிசையில் வெளியிடப்பட்டுள்ளன.

மொழியாக்கம்

பின்லாந்தின் தேசிய காவியமான செய்யுள் வடிவில் அமைந்த ‘கலேவலா’ (KALEVALA) என்பதை மூலமொழியான பின்னிஷ் மொழியில் இருந்து தமிழிற்கு மொழிபெயர்த்தார். மூன்று ஆண்டுகால உழைப்பின் விளைவாக 1994 ஆம் ஆண்டு கலேவலா வெளிவந்தது. ஃபின்னிஷ் மொழியிலிருந்து தமிழிற்கு வந்த முதல் நூல் அது. (பார்க்க கலேவலா)

மறைவு

உதயணன் 23 ஜூலை 2019 ல் மறைந்தார்

இலக்கிய இடம்

உதயணனின் நூல்கள் பொதுவாசிப்புக்குரியவை, சமூகக்கருத்துக்களை முன்வைக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட கதையோட்டம் கொண்டவை. உதயணனின் கலேவலா மொழியாக்கம் தமிழ் வாசகர்களால் கிட்டத்தட்ட முழுமையாகவே நிராகரிக்கப்பட்டது. நாட்டார்த்தன்மையும் வீரசாகசத் தன்மையும் கொண்ட கலேவலாவை செயற்கையான, திருகலான , தேய்வழக்குகள் மிக்க மொழியில் மொழியாக்கம் செய்தார் என்று ஜெயமோகன் குறிப்பிடுகிறார். யாப்பிலமைந்த வடிவம் வாசக ஏற்பு பெறாமையால் அதை உரைநடை வடிவத்தில் மீண்டும் எழுதினார். உரைநடையிலும் அது கவனிப்பை பெறவில்லை.

நூல்கள்

கட்டுரைகள்
  • பின்லாந்தின் பசுமை நினைவுகள்
நாவல்கள்
  • இதய வானிலே
  • மனப்பாறை
  • பொன்னான மலரல்லவோ
  • அந்தரங்ககீதம் (சில மாறுதல்களுடன் ’மனப்பாறை’ என்ற பேரில் வெளியாகியது)
சிறுகதைகள்
  • பிரிந்தவர் பேசினால்
  • உங்கள் தீர்ப்பு என்ன
மொழிபெயர்ப்பு
  • கலேவலா

உசாத்துணை


✅Finalised Page