இஸ்லாமிய பக்தி இதழ்கள்

From Tamil Wiki
Revision as of 07:57, 25 February 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "அலாமத் லங்காபுரி சிங்கை வர்த்தமானி புதினாலங்காரி தங்கை நேசன் முஸ்லிம் நேசன் வித்தியா விசாரிணி உலக நேசன் சர்வ ஜன நேசன் சிங்கை நேசன் சம்சுல் ஈமான் முகம்மது சமதானி சீரிய சூ...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

அலாமத் லங்காபுரி

சிங்கை வர்த்தமானி

புதினாலங்காரி

தங்கை நேசன்

முஸ்லிம் நேசன்

வித்தியா விசாரிணி

உலக நேசன்

சர்வ ஜன நேசன்

சிங்கை நேசன்

சம்சுல் ஈமான்

முகம்மது சமதானி

சீரிய சூரியன்

யதார்த்தவாதி

இஸ்லாமிய மித்திரன்

அஜாயிபுல் அக்பாற்

லிவாவுல் இஸ்லாம்

முஸ்லிம் தூதன்

இஸ்லாம் நேசன்

அஜாயிபுல் ஆலம்

இஷாஅத்

சைபுல் இஸ்லாம்

தத்துவ இஸ்லாம்

தாருல் இஸ்லாம்

முஸல்மான்

இஸ்லாம்

தாஜுல் இஸ்லாம்

அல்கலாம்

பத்ஹுல் இஸ்லாம்

வஜுருல் இஸ்லாம்

அல்-இஸ்லாம்

அல்-ஹிதாயா

அல்-ஹக்

கமருஸ்ஸமான்

இஸ்லாம்

மத்ஹுல் இஸ்லாம்

சம்சுல் இஸ்லாம்

ஜவ்ஹருல் இஸ்லாம்

ஹிபாஜத்துல் இஸ்லாம்

ஹக்குல் இஸ்லாம்

ஷம்ஸுல் ஹுதா

விடுதலை

காலச்சந்திரன்

ஜன்மத்

சத்திய இஸ்லாம்

சாந்தி

ஞானச்சுடர்

சாந்தி உலகம்

முஸ்லிம்

சமரசம்

மஸ்னவி ஷரீப்

முஸ்லிம் லீக்

முஸ்லிம்

நூருல் இஸ்லாம்

கதிர்

முன்னேற்றம்

றபீக்குல் இஸ்லாம்

இளம்பிறை

பாக்கிஸ்தான்

பால்யன்

முஸ்லிம் இந்தியா

வெள்ளி

சமாதானம்

சன்மார்க்கச் சங்கு

மணிமொழி

மின்னொழி

நூருல் ஹக்

மார்க்க வினா விடை

மிலாப்

லீக் முஸல்மான்

அருள்ஜோதி

ஆஸாத்

நூருல் ஹக்

வளர்பிறை

இஷா அத்துல் இஸ்லாம்

உத்தம மித்திரன்

புகாரி

செம்பிறை

வெடிகுண்டு’

சிட்டி கெஜட்

நவயுகம்

ஒளி

சாட்டை

தமிழ்முழக்கம்

பிறை

மதிநா

ஷாஜஹான்

கதம்பம்

மறுமலர்ச்சி

உரிமைக்குரல்

மணிவிளக்கு

மணிச்சுடர்

தாருல் குர்ஆன்

தாரகை

தாஜ்மஹால்

கர்ஜனை

பத்ஹுல் இஸ்லாம்

பறக்கும் பால்யன்

உதயம்

சமரன்

பாகவி

புத்துலகம்

சன்மார்க்க சங்கு

வெள்ளி மலர்

இஸ்லாமியச் சோலை

இன்சாப்

பிறைக்கொடி

குர்ஆனின் குரல்

நேர்வழி

முபல்லிக்

அல் இஸ்லாம்

சாந்தி விகடன்

அல் இன்ஸாப்

ஒளிவிளக்கு

ரஹ்மத்

இந்திய தூதன்

ஒளிச்சுடர்

மறைக்கதிர்

அல் ஹிதாயா

சுதந்திரக் கதிர்

அல் இஸ்லாம்

கலாச்சாரம்

இளைய சமுதாயம்

ஜிஹாத்

குவ்வத்

றபீக்குல் இஸ்லாம்

ஜன்னத்

அறமுரசு

நறுமணம்

ஜமாஅத்துல் உலமா

அக்பர்

அறவிளக்கு

சரவிளக்கு

திப்பு

நற்சிந்தனை

பசுங்கதிர்

மறைவழி

பரீதா

சிராஜ்

தெளலத்

மறைச்செய்திகள்

முஸ்லிம் குரல்

முஸ்லிம் சுடர்

முஸ்லிம் நேசன்

1976 இல் ஆன்மீக இன்பம், தாவூஸ், முபாரக், ஹாஜா, ஹுஜ்ஜத், 1977 இல் தர்பியத்துல் இஸ்லாம், 1978 இல் அல் ஃபுர்கான், இஸ்லாமியர் உலகம், காயிதே மில்லத், கத்தரிக்கோல், சமுதாயக் குரல், ஞானரதம், முத்துச்சுடர், 1979 இல் இலட்டு, இஸ்மி, 1980 இல் அல்-அமீன், புரட்சி மின்னல், 1981 இல் இந்தியன் முஸ்லிம் ஹெரால்டு, 1982 இல் றப்பானி, அன்வாருல் குர்ஆன், சிராஜுல் மில்லத், முஸ்லிம் நேஷனல் ஹெரால்டு, முஸ்லிம் மறுமலர்ச்சி, 1983 இல் இளைய நிலா, நம்குரல், பைத்துல்மால், 1984 இல் இதயக்குரல், உண்மை ஒளி, தவ்ஹீத், தீன்குரல், நுஸ்ரத், நூருல் ஜுமான், 1985 இல் அல்-மிம்பர், அஷ்ஷரீஅத்துல் இஸ்லாமியா, அஹ்லெ சுன்னத், சமுதாய முழக்கம், செப்பம், தீன்குலம், 1986 இல் அந்-நஜாத், அல்-முபாரக், அல்-ஜன்னத், இறை அமுதம், இஸ்லாமியர் இதயக்குரல், உண்மைக்குரல், ஞானப்பூங்கா, மலர்மதி, ஷரீஅத், ஹிலால், 1987 இல் அல்-முஜாஹித், இந்தியன் மைனாரிட்டீஸ், கனியமுதம், சுவனப்பூங்கா, தீன்தமிழ், பள்ளிவாசல், மக்காச்சுடர், மறைஞானப் பேழை, மும்தாஜ், வஸீலா, வான்சுடர், ஷரீஅத் பேசுகிறது, 1988 இல் அல்முபீன், எழுச்சிக்குரல், கந்தூரி, தீன்மணி, பாலைவன ரோஜா, 1989 இல் அல்-ஜன்னத், கருவூலம், 1990 இல் அல்-பரகத், அல்-பைஜுல் இஸ்லாம், புஷ்ராச்சுடர், முஸ்லிம் மெயில் ஆகிய இதழ்கள் வெளியாயின.

1991 இல் அல்-ஜிஹாத், இஸ்லாமியத் தென்றல், நேர்வழி, ஹுதா, 1992 இல் அல்-இர்ஷாத், அல்-இஸ்லாம், இதயவாசல், இளைய நிலா, உம்மத், புதுமலர்ச்சி, முஸ்லிம் வீக்லி, மெய் ஒளி, 1993 இல் அல்-ஹுதா, மறைச்சுடர், மனாருல் ஹுதா, ஃபீஸஃபீல், 1994 இல் அல்லாஹ்வின் ஆலயம், அல்-ஹக், அல்-ஹிக்மத், இஸ்லாமிய சகோதரத்துவக் குரல், தமிழ் அருவி, தீன் துன்யா, நமது இளைய நிலா, மஹாராணி, லீக் டைம்ஸ், 1995 இல் சாந்தி வளாகம், நுக்தா, 1996 இல் அந்நிஃமத், இஸ்லாமிய வளர்பிறை, திருமதினா அரசு, 1998 இல் சிந்தனைச் சரம், 1999 இல் முஸ்லிம் டைம்ஸ், 2001 இல் அந்நிஸா, அஸ்ஸிராத், மறைச்சுடர், ஜமாஅத் முரசு, 2002 இல் புதிய காற்று, அல்-ஹரம், நமது முற்றம், புதிய பயணம், மனித நேயத் தொண்டன், மனிதன், சென்னை நண்பன், 2003 இல் இனிய திசைகள், இனிய தென்றல், ஏகத்துவம், சொர்க்கத் தோழி, தர்மத்தின் குரல், புதிய சுவடி, 2005 இல் சமுதாயத் தொண்டன், 2006 இல் இளம்பிறை, திங்கள் தூது, மெய்யெழுத்து, உலக வெற்றி முரசு, ஹைர உம்மத், 2008 இல் சமூகநீதி முரசு, சமஉரிமை, 2009 இல் தங்கம், 2011 இல் பீஸ் வாய்ஸ், அஹ்லுஸ் சுன்னா என ஏராளமான இதழ்கள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும், பச்சைரோஜா, இளையான்குடியான் மடல், தீன்குலப் பெண்மணி, பள்ளிவாசல் டுடே, அன்னை கதீஜா, அல்-ஹிந்த், சமுதாய உரிமை, ஆகிய இதழ்களும் வெளியிடப்பட்டுள்ளன.

இவற்றில் நிறைய இதழ்கள் பாதியிலேயே நின்றுவிட்டாலும், பல இதழ்கள் இன்றும் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

1972 இல் திருச்சியில் தூத்துக்குடி எம்.முஸ்தபா ஹுசைன் தொடங்கிய ‘நர்கிஸ்’ மாத இதழ் 40 ஆண்டுகளைக் கடந்து இன்றும் வெளியாகிக் கொண்டிருக்கிறது. இஸ்லாமிய இதழ்களிலேயே பெண்களுக்காக நடத்தப்படும் இதழ் என்ற சிறப்பை நர்கிஸ் பெற்றுள்ளது. எம்.அனீஸ் பாத்திமா எனும் பெண்மணி ஆசிரியராக இருந்து திறம்பட நடத்திக் கொண்டிருக்கிறார்.

1980 இல் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பினால் தொடங்கப்பட்ட மாதம் இருமுறை இதழான ‘சமரசம்’ இன்றுவரை தொய்வில்லாமல் வெளிவருகின்றது. எழுத்தாளர் சிராஜுல் ஹசன் இவ்விதழின் பொறுப்பாசிரியராக செயலாற்றி வருகிறார்.

1991 இல் பழனிபாபா தொடங்கிய இதழின் பெயர் ‘புனிதப் போராளி’. அதில் அனல் பறக்கும் கட்டுரைகளை எழுதிய பாபா, நாடு முழுவதும் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெறும் கொடுமைகளையும், அரச அடக்குமுறைகளையும் தொடர்ச்சியாக அம்பலப்படுத்தினார். 'அல்-முஜாஹித்', 'முக்குல முரசு' போன்ற பத்திரிகைகளையும் பாபா நடத்தியுள்ளார்.

1992 இல் நடைபெற்ற பாபர் மஸ்ஜித் இடிப்பிற்குப் பின் முஸ்லிம்களிடம் ஏற்பட்ட அரசியல் எழுச்சியை அடைகாக்கும் வகையில் நிறைய இதழ்கள் தோன்றின. அவற்றில் மிக முக்கியமான இதழாக கொடிக்கால் ஷேக் அப்துல்லாஹ் தொடங்கிய ‘உங்கள் தூதுவன்’ இதழ் விளங்குகின்றது. அரசியல் விழிப்புணர்வூட்டும் ஆங்கங்களும், முஸ்லிம்களின் மறைக்கப்பட்ட வரலாறுகளும் அவ்விதழில் வெளியிடப்பட்டன.

இந்துத்துவ எதிர்ப்பு, ஏகாதிபத்திய ஒழிப்பு, மூடநம்பிக்கை அழிப்பு, ஒடுக்கப்பட்டோர் சார்பு ஆகிய கொள்கைகளுடன் 1982 இல் வெளியான ‘SIM செய்தி மடல்’ எனும் மாத இதழை, இன்று வெளியாகிக் கொண்டிருக்கும் பல இதழ்களின் தாய்மடி என்று சொல்லலாம். 1996 இல் தொடங்கப்பட்ட ‘உணர்வு’, வார இதழ், 2001 இல் தொடங்கப்பட்ட ‘ஒற்றுமை’ மாதம் இருமுறை இதழ், 2004 இல் தொடங்கப்பட்ட ‘மக்கள் உரிமை’ வார இதழ் ஆகியவை த.மு.மு.க.வின் அதிகாரப்பூர்வ ஏடுகள். 2004 லிருந்து ததஜவின் இதழாக உணர்வு மாறிவிட்டது.

1996 இல் தொடங்கப்பட்ட ‘விடியல் வெள்ளி’, 2011 இல் தொடங்கப்பட்ட ‘புதிய பாதை’ ஆகியவை பாப்புலர் பிரண்ட் மற்றும் எஸ்.டி.பி.ஐ.யின் இதழ்கள். 2009 இல் ‘வைகறை வெளிச்சம்’ என்ற இதழை மூத்த பத்திரிகையாளர் மு.குலாம் முஹம்மது தொடங்கினார். இந்திய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் சார்பில் 2009 இல் ‘சமுதாய மக்கள் ரிப்போர்ட்’ எனும் வார இதழ் தொடங்கப்பட்டது.

இவ்வாறு எண்ணிக்கையில் அடங்காத வகையில் ஏராளம் இதழ்கள் தோன்றியிருந்தாலும், 2003 இல் தொடங்கப்பட்ட ‘சமநிலைச் சமுதாயம்’ மாதஇதழ், பல்வேறு அம்சங்களில் தனித்துவத்துடன் மிளிர்கிறது. சமநிலையின் சிறப்பே, அது எந்த இயக்கச் சார்புடனும் வெளிவருவதில்லை என்பதுதான். எல்லா இயக்கங்களைப் பற்றியும் அதில் விமர்சனக் கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. சமூகத்தில் நடக்கும் எந்தஒரு அநீதியையும் கண்டு சமநிலை வாய்மூடி இருந்ததில்லை. தனக்கு வேண்டியவர் வேண்டாதவர் என்ற அளவுகோலுடன் எதையும் அணுகுவதில்லை. விருப்பு வெறுப்புக்கு இடமளிப்பதில்லை. அச்சுறுத்தலுக்கோ, மிரட்டலுக்கோ அது என்றுமே அடிபணிந்ததில்லை.

'அதிகாரத்தை நோக்கிய உண்மையின் குரலா'கவே சமநிலை இன்றும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

1998 இல் நிகழ்ந்த கோவை குண்டுவெடிப்பு வழக்கில் சிக்கவைக்கப்பட்டு சுமார் ஒன்பதரை ஆண்டுகள் விசாரணைக் கைதியாகவே சிறையில் பூட்டப்பட்டிருந்த அப்துல் நாசர் மதானி பற்றி, 2004 இல் சமநிலை வெளியிட்ட அட்டைப்படக் கட்டுரை அதன் துணிவையும், துயருறும் மனிதர்கள் மீதான அதன் கனிவையும் பறைசாற்றியது. அக்கட்டுரை, தமிழகத்தில் மனித உரிமைத் தளத்தில் பங்காற்றி வரும் சமூக செயல்பாட்டாளர்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்தது.

மறைக்கப்பட்ட வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்யும் பணியை செம்மையாகச் செய்து வருகிறது சமநிலை. காயிதே மில்லத், அபுல் கலாம் ஆசாத், நாகூர் ஹனிபா, பஹதூர் ஷா ஜாபர் ஆகிய ஆளுமைகளின் வாழ்க்கையை மீளாய்வு செய்ததன் மூலம், அன்றைய தலைவர்களை இன்றைய தலைமுறைக்கு கொண்டு சேர்த்தது சமநிலை.

மூத்த எழுத்தாளர் ஜே.எம்.சாலி எழுதிய ‘இலக்கிய இதழியல் முன்னோடிகள்’, கடையநல்லூர் எழுத்தாளர் சேயன் இப்ராஹிம் எழுதிவரும் ‘முதல் தலைமுறை மனிதர்கள்’ ஆகிய தொடர்கள் நமது கடந்த காலத்தை நம் கண்முன்னே நிறுத்தின.

அருந்ததிராய், ஏ.ஜி.நூரானி, ஏ.பி.ஜே.அப்துல் கலாம், ஏ.ஆர்.ரஹ்மான், சல்மா, தொல்.திருமாவளவன், வைகோ, கி.வீரமணி, விஜயகாந்த் என ஏராளமான முகங்களைத் தாங்கிய அட்டைப்படக் கட்டுரைகளையும், நேர்காணல்களையும் சமநிலை வெளியிட்டுள்ளது. அ.முத்துகிருஷ்ணன் எழுதிய பாலஸ்தீன் பயணக் கட்டுரை தமிழுலகிற்கு ஓர் புதிய அனுபவமாகவே அமைந்தது.

பரமக்குடி, கூடங்குளம், தர்மபுரி போன்ற பிரச்சனைகளை அலசும் முகப்போவியங்களும், பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாவின் ஆவேச வெளிப்பாடுகளும் அதிர்வுகளை ஏற்படுத்திய பதிவுகளாகும்.

புதிய பொருளாதாரக் கொள்கை, அன்னிய நேரடி முதலீடு, பசுமை வேட்டை என மத்திய அரசு செய்யும் மக்கள் விரோத செயல்கள் அனைத்தையும் சினம் கொண்டு எதிர்த்துள்ளது சமநிலை.

அ.மார்க்ஸ் எனும் எழுத்துப் போராளி சமநிலையில் தொடர்ச்சியாக எழுதிய அனைத்துக் கட்டுரைகளும் காலத்தால் அழியாதவை. இந்துத்துவமும், ஏகாதிபத்தியமும், அதிகார வர்க்கமும் முஸ்லிம்களுக்கு எதிராக செய்யும் அத்தனை சூழ்ச்சிகளையும் அம்பலப்படுத்தினார் மார்க்ஸ்.

நபிகளார், நபித்தோழர்கள், அரபு நாடுகள், மத்திய கிழக்காசிய நாடுகளில் நிலவும் அரசியல் சூழல்கள், இஸ்லாமிய அரசுகள், மதரசாக்கள், மார்க்க அறிஞர்கள் பற்றியெல்லாம் கோவை அப்துல் அஜீஸ் பாக்கவி தொடர்ந்து எழுதிவரும் கட்டுரைகள் புதிய சிந்தனைகளை விதைத்தன.

தரமான மொழிபெயர்ப்பு கட்டுரைகள் மற்றும் ஆழமான நேர்காணல்கள் இதழை மேலும் கனப்படுத்தின. பேராசிரியர் தி.மு.அப்துல் காதர், நிகழ் அய்க்கண், டாக்டர்.மு.அப்துல் ரசாக் ஆகியோரது கட்டுரைகளும் குறிப்பிடத்தக்கவை.

மற்ற அனைத்து இதழ்களிலிருந்தும் சமநிலை வேறுபட்ட ஒரு இடம் உண்டென்றால், அது வடிவமைப்பு தான். அட்டை முதல் உள்ளடக்கம் வரை அத்தனைப் பக்கங்களும் நேர்த்தியுடன் அமைந்துள்ளன.