இலக்கியவட்டம் மலேசியா (இதழ்)

From Tamil Wiki
Revision as of 00:13, 16 February 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "thumb|இலக்கியவட்டம் மலேசியா இலக்கியவட்டம் மலேசியா ( 1973- 1974) பேராசிரியர் இரா. தண்டாயுதம் ஆலோசனையில் ரெ.கார்த்திகேசு உருவாக்கிய ‘இலக்கிய வட்டம்’ குழு வெளியிட்ட காலாண்டு...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
இலக்கியவட்டம் மலேசியா

இலக்கியவட்டம் மலேசியா ( 1973- 1974) பேராசிரியர் இரா. தண்டாயுதம் ஆலோசனையில் ரெ.கார்த்திகேசு உருவாக்கிய ‘இலக்கிய வட்டம்’ குழு வெளியிட்ட காலாண்டு இதழ். தட்டச்சின் மூலம் உருவாக்கப்பட்ட இதழ்.

வரலாறு

பேராசிரியர் ரெ.கார்த்திகேசு வானொலியில் பணிபுரிந்த காலகட்டத்தில் எழுத்தாளர்களிடம் கேட்டுப்பெறப்படும் படைப்புகளை வானொலியில் தட்டச்சாளராகப் பணியாற்றியவரிடம் கொடுத்து, தட்டச்சு செய்து இலக்கியவட்டத்தின் கூட்டத்தில் வழங்கி விவாதித்ள்ளனர். அவை இலக்கியவட்டம் என்னும் இதழாக ஆயின. முதல் இதழ் பிப்ரவரி 1973ல் வெளியிடப்பட்டுள்ளது. முதல் இதழ் அரசாங்க பதிவு எண் இல்லாமல் தனிச்சுற்றாகவே வந்துள்ளது. பின்னர் இவ்விதழ் முறையான அரசாங்க பதிவு எண்ணைப்பெற்று குறிப்பிட்ட வட்டத்தில் மட்டுமே வாசிப்புக்குச் சென்றுள்ளது. அரசுப் பதிவு எண்ணுக்காக எழுத்தாளர் எம்.குமரன் (மலபார் குமார்) முகவரி வழங்கப்பட்டிருந்த சூழலில் உள்ளடக்கச் சாரத்தை ரெ.கார்த்திகேசுவே தீர்மானித்துள்ளார். மே 1974ல் ரெ.கா வானொலி பணியில் இருந்து விலகி பினாங்கு மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தில் இணைந்தபோது இலக்கிய வட்டம் நின்றது.

உள்ளடக்கம்