being created

இரா. கிருஷ்ணமூர்த்தி

From Tamil Wiki
Revision as of 14:53, 26 July 2023 by Madhusaml (talk | contribs)
நன்றி:தினமலர்

இரா.கிருஷ்ணமூர்த்தி (ஜனவரி 18, 1933-மார்ச் 4, 2021) தமிழறிஞர், நாணயவியலாளர், இதழாளர், கணினித் தமிழறிஞர். சங்க காலத்தில் பழந்தமிழ் மன்னர்கள் வெளியிட்ட நாணயங்களைக் கண்டறிந்தார். தமிழ் செம்மொழி என்ற தகுதியை பெற, இவரது நாணயவியல் கண்டுபிடிப்புகளை தமிழக அரசு முக்கிய வரலாற்று ஆதாரமாக சமர்ப்பித்தது. நாணயவியல் தொடர்பாக 30-ம் மேற்பட்ட புத்தகங்களை எழுதினார். தினமலரின் ஆசிரியராக பொறுப்பு வகித்தார் கணினியில் தமிழ் எழுத்துருக்களை உருவாக்கினார். மத்திய அரசின் செம்மொழி உயராய்வு மையத்தின் தொல்காப்பியர் விருது உட்பட பல விருதுகளைப் பெற்றார். லண்டன் ராயல் நாணயவியல் கழகத்தின் கௌரவ உறுப்பினர்.

பிறப்பு,கல்வி

இரா.கிருஷ்ணமூர்த்தி தினமலர் நிறுவனர், டி.வி.ராமசுப்பையர் - கிருஷ்ணம்மாள் இணையருக்கு அப்போதைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் நாகர்கோவில் அருகே, வடிவீஸ்வரத்தில் ஜனவரி 18, 1933 அன்று இரண்டாவது மகனாகப் பிறந்தார். நாகர்கோவில் சேது லக்ஷ்மிபாய் பள்ளியில் பள்ளிக்கல்வியை முடித்தார். ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் புதுமுக வகுப்பு பயின்றார். காரைக்குடி அழகப்பா கல்லூரியில் நிலவியலில்(Geology) இளங்கலைப் பட்டமும், சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.

தனி வாழ்க்கை

கிருஷ்ணமூர்த்தியின் மனைவி பெயர் ராஜலக்ஷ்மி. இரு மகன்கள், இரு மகள்கள்.

நாணயவியல் ஆய்வு

டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தியின் நாணயவியல் ஆய்வில், பாண்டிய மன்னன் பெருவழுதி வெளியிட்ட நாணயம் தான், அ..., 1985ல், காசி, பனாரஸ் ஹிந்து பல்கலையில் நடந்த அகில இந்திய நாணயவியல் மாநாட்டில், ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்தார். அகில இந்திய நாணயவியல் சங்க ஆய்வேட்டில், அக்கட்டுரை வெளியிடப்பட்டது. பெருவழுதி நாணயம் பொ.யு. 2 அல்லது, 3-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று கணித்தார்.

சங்ககாலத்தில் ஆண்ட சேர மன்னர்கள் வெளியிட்ட 'மாக்கோதை', 'குட்டுவன்கோதை' எனப் பெயர் பொறிக்கப்பட்ட வெள்ளி நாணயங்கள் இரண்டை (1990, 1994) கரூர் அமராவதி ஆற்றில் கண்டடைந்தார். கண்டறிந்தார். கிரேக்கத்தின் திரேஸ், தெசலி, கீரிட் பகுதியில் உருவாக்கிய நாணயங்களை, தமிழகத்தில் கண்டெடுத்து, பண்டைத் தமிழகம் கிரேக்கர்களுடன் வாணிபத் தொடர்பில் இருந்ததை சான்றுகளுடன் நிரூபித்தார்.கொழும்பு அருங்காட்சியகத்தில் அதுவரை அடையாளம் அறிந்திராத 44 நாணயங்களை அடையாளம் கண்டு நூலாக வெளியிட்டார்.

சங்க இலக்கியப் பொதிவுகள், பண்டைய எழுத்துக்களுடனும் சின்னங்களோடும் பொருத்தி வருமோ என்ற எண்ணம் அப்போது அவருக்கு உதித்தது. எனவே அவர், "தமிழ்நாடு நாணயவியல் ஆய்வுக் கழகம்" என்ற அமைப்பை நிறுவினார். தலைவராக அவரே இருக்க, சென்னை பல்கலைக் கழகத் தொல்லியல் துறைத் தலைவராக இருந்து மறைந்த குருமூர்த்தி பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்றார். ஆர்.நூருல்லா) பொருளாளராக இருந்தேன்.




இதழியல்

கிருஷ்ணமூர்த்தி 1956-ல் தினமலரில் பணியில் சேர்ந்தார். அப்போது திருவனந்தபுரத்தில் இருந்த தினமலரின் தலைமை அலுவலம் மொழிவாரி மாநிலங்கள் அமைந்தபின் சென்னைக்கு மாறியது. 1977-ல் இரா. கிருஷணமூர்த்தி தினமலரின் ஆசிரியராகப் பணியேற்றார். இந்திய நாளிதழ் ஆசிரியர்களின் மாநாட்டின் தலைவராக 1991-ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். திருச்சி, சென்னை, மதுரை, ஈரோடு, கோவை, புதுச்சேரி, வேலூர், நாகர்கோவில் நகரங்களில் தினமலர் பதிப்புகளை துவக்க காரணமாக இருந்தார். 2017 வரை ஆசிரியர் பொறுப்பு வகித்தார்.

பின்தங்கிய பகுதி மாணவர்களுக்காக 1998 முதல் ‘ஜெயித்துக்காட்டுவோம்’ என்ற நிகழ்ச்சியை நடத்தினார். இந்திய டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம், 2007 மற்றும், 2012 என, இரண்டு முறை, சென்னையில், மாநகராட்சிப்பள்ளி மாணவ, மாணவியருக்காக நடத்தப்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

பெரியார் அறிமுகப்படுத்திய தமிழ் எழுத்து சீர்மை முறையை, தினமலர் நாளிதழில், அமல்படுத்தினார். இந்த எழுத்து முறையில், 1966ம் ஆண்டு, ஒரு பத்தி செய்தியை அச்சுக் கோர்த்து முதன்முறையாக, தினமலர் திருச்சி பதிப்பில் வெளியிட்டார்.


நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் தொடர்பியல் துறைக்கு தமது சொந்த செலவில் ரூ.ஒரு கோடி மதிப்பில் கட்டிடம் கட்டி தந்தவர்

கல்வி நிறுவனங்கள், ஏழை மாணவ மாணவியர் மற்றும் அறிஞர்கள் வாழ்வில் உயர பொருளுதவிகள் செய்துள்ளார். கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட இருளர்பழங்குடியினத்தை சேர்ந்த குடும்பங்கள் சிலவற்றை, காஞ்சிபுரம் அருகே கீழ்கதிர்பூர் என்ற கிராமத்தில் குடியேற்றியது தமிழக அரசு. அவர்கள் மறு வாழ்வு பெற நிலமும் ஒதுக்கப்பட்டது. அந்த இடத்தில், சிறிய அளவிலான படிப்பகம் ஒன்றை அமைத்து சேவை செய்கிறது காஞ்சி மக்கள் மன்றம் என்ற சேவை அமைப்பு. அந்த படிப்பகம் துவங்குவதற்கான பொருளுதவி செய்து ஊக்குவித்தார் இரா.கிருஷ்ணமூர்த்தி.

கணிணித்தமிழ்

தமிழ் எழுத்துருக்கள் தொடர்பாக அவரும் மும்பையில் இருந்த மென்பொருள் நிறுவனமும் இணைந்து முதன்முதலாக மின்னம்பலத்தில் தமிழ் எழுத்துருக்களை வடிவமைத்தனர். தொடர்ந்து தினமலர் நாளிதழில் மின் எழுத்துருக்களையே  பயன்படுத்தியவர். அக்காலத்தில் ஏனைய அச்சு ஊடகங்கள் ஒளி அச்சுக்கோப்பு முறைக்கு மாறவில்லை.

விருதுகள், பரிசுகள்

இலக்கிய இடம்

படைப்புகள்

உசாத்துணை

தமிழ்த் தாயின் தலை நிமிர்த்திய தினமலர் இரா.கிருஷ்ணமூர்த்தி, தினமலர்

பாண்டிய மன்னர் நாணயம் கண்டுபிடிப்பு, தினமணி டிசம்பர் 2011



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.