under review

ஆஷ்லி ஜார்ஜ் ஓல்ட்: Difference between revisions

From Tamil Wiki
(Category:ஓவியர்கள் சேர்க்கப்பட்டது)
(Corrected error in line feed character)
Tag: Manual revert
 
(One intermediate revision by the same user not shown)
(No difference)

Latest revision as of 20:09, 12 July 2023

ஆஷ்லி
ஆஷ்லி ஜார்ஜ் ஓவியம்.
ஆஷ்லி ஜார்ஜ் ஓவியம்.

ஆஷ்லி ஜார்ஜ் ஓல்ட் ( Ashley George Old) (1913-2001) ஆங்கிலேய ஓவியர். சயாம் மரணரயில்பாதையின் கொடுமைகளை பதிவுசெய்தவர். அவை போர்க்குற்ற விசாரணையில் சான்றுகளாக இருந்தன.

பார்க்க சயாம் மரண ரயில்பாதை

பிறப்பு,கல்வி

பிரிட்டனில் 1913-ல் பிறந்த ஆஷ்லி ஜார்ஜ் ஓல்ட் நார்தாம்ப்டன் கவின்கலைக் கல்லுரியில் பயின்றார். அங்கே உடற்கூறு ஓவியக்கலை பயின்றார். புகழ்பெற்ற சார்ல்டன் ஆர்ட்டிஸ்ட்ஸ் (Carlton Artists) என்னும் கலைநிறுவனத்தில் பணியாற்றினார். பின்னர் சேம்பர்வில் (Camberwell School of Art) கவின்கலைக் கல்லூரியில் பயின்றார்.

சயாம் மரணரயில்

ஆஷ்லி ஜார்ஜ் ஓல்ட் 1942-ல் சிங்கப்பூருக்கு பிரிட்டிஷ் ராணுவ வீரராகச் சென்றார். அங்கே ஜப்பானியர்களிடம் போர்க்கைதியாக பிடிபட்டு சாங்கி முகாமிலும் பின்னர் தாய்ந்தாந்தில் சுவர்னபுரி முகாமிலும் இருந்தார். சயாம் மரணரயில்பாதை திட்டத்தில் பணியாற்றினார். அங்கே நிகழ்ந்த கொடுமைகளையும் ஒடுக்குமுறைகளையும் அவர் பழைய காகிதங்களில் கரியாலும் பென்சிலாலும் வரைந்தார். அந்த ஓவியங்கள் பின்னாளில் சிங்கப்பூரில் ஜப்பானியர்களுக்கு எதிராக நடந்த போர்க்குற்ற விசாரணையில் முதன்மைச் சாட்சியங்களாக திகழ்ந்தன.

போர்க்கால முகச்சித்திரங்கள்

ஆஷ்லி ஜார்ஜ் ஓல்ட் போர்க்கைதியாக இருந்தபோது தன்னுடனிருந்த படைவீரர்களையும் தளபதிகளையும் காகிதங்களில் முகச்சித்திரங்களாக வரைந்தார். ஏறத்தாழ ஆயிரம் ஓவியங்களை அவர் வரைந்தார். அவற்றில் 18 ஒவியங்களே எஞ்சியிருக்கின்றன. டஸ்டி ரோட்ஸ் என்னும் தளபதியை அவர் மூன்று நிமிடங்களில் வரைந்த முகச்சித்திரம் ஆஷ்லியின் திறனுக்குச் சான்றாக கருதப்படுகின்றது.

ஆஷ்லி ஜார்ஜ் சயாம் மரணரயில் திட்டத்தில் சித்திரவதைகளால், முறையான சிகிச்சை பெறாமல் செத்துக்கொண்டிருந்தவர்களை பார்த்து வரைந்த கோட்டோவியங்கள் முக்கியமான போர்க்கால ஆவணங்களாகக் கருதப்படுகின்றன. அவற்றில் அக்காலச் சூழலை மட்டுமல்ல அன்றிருந்த உணர்ச்சிகளையும் வெளிப்படுத்த அவரால் இயன்றது.

அவருடைய ஓவியங்கள் ஆஸ்திரேலிய போர் அருங்காட்சியகத்திலும். (Australian War Memorial) லண்டன், இம்பீரியல் போர் அருங்காட்சியகத்திலும் (Imperial War Museum) உள்ளன. அவருடன் சயாம் மரணரயில் பாதை திட்டத்தில் பணியாற்றிய ஜாக் பிரிட்ஜர் சாக்கர், ரொனால்ட் சியர்ல், பிலிப் மெனின்ஸ்கி ஆகியோருடய ஓவியங்களுடன் அவருடைய ஓவியங்களும் வைக்கப்பட்டுள்ளன. ஆகஸ்ட் 15 முதல் டிசம்பர் 1995 வரை இம்பீரியல் போர் அருங்காட்சியகத்தில் நடைபெற்ற கண்காட்சியில் ஐம்பதாண்டுகளுக்குப் பின் ஆஷ்லி ஜார்ஜ் ஓல்ட் மெனின்ஸ்கியை மீண்டும் சந்தித்தார்.

ஆஷ்லி ஜார்ஜ் உட்பட போர்க்கால ஓவியங்களின் சித்தரிப்பு முறை பிறகு வந்த ஓவியமரபில் ஆழ்ந்த பாதிப்பைச் செலுத்தியது. சாவுக்கு முந்தைய உணர்வுநிலைகளைச் சித்தரிப்பதில் அவை ஒரு நம்பகமான முறைமையை உருவாக்கின என கலை விமர்சகர்கள் குறிப்பிடுகிறார்கள்.

பிற்கால கலைப்படைப்புகள்

ஆஷ்லி ஜார்ஜ் மூன்று நிமிடத்தில் வரைந்த முகம்

ஜார்ஜ் ஓல்ட் தொடர்ச்சியாக வரைந்துகொண்டிருந்தார். பெரும்பாலும் உருமாறிக்கொண்டிருந்த நகரங்களின் இயற்கைக் காட்சிகள். இறுதிநாள் வரை போர்க்கைதியாக இருந்த நாட்களின் நினைவுகள் அளித்த உள அழுத்தம் அவருக்கு இருந்தது. அது அவர் ஓவியங்களில் வெளிப்பட்டது

பிற்கால வாழ்க்கை

ஆஷ்லி ஜார்ஜ் 1960ல் வெஸ்ட் கிளிஃப் ஓட்டலில் ஊழியராக

ஆஷ்லி ஜார்ஜ் போருக்குப்பின் இங்கிலாந்து திரும்பினார். அவர் அங்கே ஓவியராக வாழவில்லை. வெஸ்ட்கிளிஃப் ஓட்டலில் ஓர் ஊழியராக 1960-களில் பணியாற்றினார் (Westcliff Hotel) பின்னர் கான்வே தீவுகளில் ஈகன்ஸ் உணவுநிறுவனத்தில் பணியாற்றினார். ஈகன் மின்னியல் (Egen Electric) நிறுவனத்திலும் வேலைபெற்றார். 1980-ல் ஓய்வு பெற்றார்.

ஆஷ்லி 1950-க்குப் பின் ஓவியங்கள் வரைவதை குறைத்துக்கொண்டிருந்தார். காரணம், ஒவியம் வரைவது அவருக்கு பல கொடிய நினைவுகளை எழுப்பி தூக்கமின்மையை உருவாக்கியது. அவர் தன்னை ஓவியர் என காட்டிக்கொள்ளாமல் வாழ முயன்றார். 1950-க்குப்பின் அவர் போர் சார்ந்த எந்த நிகழ்ச்சிகள், நினைவுகூரல் சடங்குகளிலும் கலந்துகொள்ளவில்லை. ஆஷ்லி ஜப்பானிய கார்கள், மின்பொருட்கள் அனைத்தையும் வெறுத்தார் என அவருடைய அண்டைவீட்டார் பதிவுசெய்கிறார்கள். அவர் பற்றி அவர்களுக்கு எந்த மேலதிகச் செய்தியும் தெரிந்திருக்கவில்லை, அவர் ஓவியர் என்பதையே அவர்கள் அறிந்திருக்கவில்லை என்று கூறப்படுகிறது.

ஆஷ்லி மணம் செய்துகொள்ளவில்லை. வுல்ஃப் (Woof) என்பவரின் குடும்பத்துடன் லண்டன் பிரிக்ஸ்டனில் (Brixton) வசித்தார். அவர்கள் கான்வே தீவுகளில் ரஸ்கோய் சாலைக்கு குடிபெயர்ந்தபோது தானும் அவர்களுடன் சென்றார். இறுதி நாட்களை அமலியா பிளாக்வெல் (Amelia Blackwell) என்பவரின் இல்லத்தில் லிங்க் சாலையில் கழித்தார். அவரை போர்க்கால நினைவுகள் அலைக்கழிக்காமலிருந்திருந்தால் உலகப் புகழ்பெற்ற ஓவியர் ஆகியிருப்பார் என்று ஜேனட் பென் (Janet Penn) எழுதிய வாழ்க்கைக்குறிப்பு சொல்கிறது.

மறைவு

ஆஷ்லி ஜார்ஜ் ஓல்ட் 2001-ல் மறைந்தார். அவர் கல்லறை பென்ஃப்லீட்(Benfleet)ல் உள்ளது.

உசாத்துணை


✅Finalised Page