under review

ஆளுடையபிள்ளையார் திருச்சண்பை விருத்தம்: Difference between revisions

From Tamil Wiki
m (Spell Check done)
 
Line 10: Line 10:
திருஞான சம்பந்தர் பிறந்த சீர்காழியின் தலப்பெருமை  பதினொன்று கட்டளைக்கலித்துறைப் பாடல்களால் பாடப்பட்டுள்ளது. பதினோராவது பாடல் கைக்கிளை திணையில் அகத்துறைப் பாடலாக  அமைகிறது. ஒவ்வொரு பாடலும் 'சண்பையர் காவலன் சம்பந்தனே' என முடிகிறது.

ஞானசம்பந்தர் குழந்தையாக உமையிடம் ஞானப்பால் அருந்தியது, பாம்பு தீண்டியவனுக்கு பதிகம் பாடி விடம் தீர்த்தது,  திருமறைக்காட்டில் கதவடைக்கப் பாடியது,  சமணர்களை வென்றது, நல்லூர்ப் பெருமணத்தில் தன் துணைவியுடன் சிவபதம் சேர்ந்தது உள்ளிட்ட ஞான சம்பதரின் வாழ்க்கை வரலாற்றுச் செய்திகள் கூறப்பட்டுள்ளன.   
ஞானசம்பந்தர் குழந்தையாக உமையிடம் ஞானப்பால் அருந்தியது, பாம்பு தீண்டியவனுக்கு பதிகம் பாடி விடம் தீர்த்தது,  திருமறைக்காட்டில் கதவடைக்கப் பாடியது,  சமணர்களை வென்றது, நல்லூர்ப் பெருமணத்தில் தன் துணைவியுடன் சிவபதம் சேர்ந்தது உள்ளிட்ட ஞான சம்பந்தரின் வாழ்க்கை வரலாற்றுச் செய்திகள் கூறப்பட்டுள்ளன.   
==பாடல் நடை==
==பாடல் நடை==
<poem>
<poem>
Line 41: Line 41:
{{Finalised}}
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:Spc]]

Latest revision as of 16:36, 30 September 2023

ஆளுடையபிள்ளையார் திருச்சண்பை விருத்தம் திருஞான சம்பந்தர் பிறந்த சீர்காழியின் தலப்பெருமையை விருத்தப் பாக்களால் பாடிய நூல். பதினொன்றாம் திருமுறையில் இடம் பெறுகிறது. 'சண்பை' சீர்காழியின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று.

ஆசிரியர்

ஆளுடையபிள்ளையார் திருச்சண்பை விருத்தத்தை இயற்றியவர் நம்பியாண்டார் நம்பி. பன்னிரு சைவத் திருமுறைகளைத் தொகுத்தளித்தவர்.

நூல் அமைப்பு

'ஆளுடையபிள்ளையார்' திருஞான சம்பந்தரைக் குறிக்கும் பெயர். ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதியில் திருஞான சம்பந்தர் மீது நூறு கட்டளைக் கலித்துறைகளை அந்தாதியாக இயற்றிய நம்பிகள், மீண்டும் பத்துப் பாடல்களை, 'திருச்சண்பையர் விருத்தம்' என்ற பெயரில் இயற்றினார். சண்பை-சண்பக மரம். சண்பக மரத்தைத் தல விருக்ஷமாகக் கொண்டதால் சீர்காழியும் சண்பை எனப்பட்டது. இங்கு சிவனைக் கண்ணன் சண்பக மலரால் பூசித்ததாகப் புராணம் கூறுகிறது.

திருஞான சம்பந்தர் பிறந்த சீர்காழியின் தலப்பெருமை பதினொன்று கட்டளைக்கலித்துறைப் பாடல்களால் பாடப்பட்டுள்ளது. பதினோராவது பாடல் கைக்கிளை திணையில் அகத்துறைப் பாடலாக அமைகிறது. ஒவ்வொரு பாடலும் 'சண்பையர் காவலன் சம்பந்தனே' என முடிகிறது.

ஞானசம்பந்தர் குழந்தையாக உமையிடம் ஞானப்பால் அருந்தியது, பாம்பு தீண்டியவனுக்கு பதிகம் பாடி விடம் தீர்த்தது, திருமறைக்காட்டில் கதவடைக்கப் பாடியது, சமணர்களை வென்றது, நல்லூர்ப் பெருமணத்தில் தன் துணைவியுடன் சிவபதம் சேர்ந்தது உள்ளிட்ட ஞான சம்பந்தரின் வாழ்க்கை வரலாற்றுச் செய்திகள் கூறப்பட்டுள்ளன.

பாடல் நடை

பாலித் தெழில்தங்கு பாரகம்
உய்யப் பறிதலையோர்
மாலுற் றழுந்த அவதரித்
தோன்மணி நீர்க்கமலத்
தாலித் தலர்மிசை யன்னம்
நடப்ப, வணங்கிதென்னாச்
சாலித் தலைபணி சண்பையர்
காவலன் சம்பந்தனே.

அகத்துறைப் பாடல்

பாலித்த கொங்கு குவளைகள்
ளம்பொழில் கீழ்ப்பரந்து
வாலிப்ப வாறதே றுங்கழ
னிச்சண்பை யந்தமுந்து
மேலிட்ட புண்டலைக் குஞ்சரத்
எண்டலைக் குந்தலைவன்
கோலிட்ட வாறு விடந்திளைக்
கும்அர வல்குலையே.

உசாத்துணை

✅Finalised Page