ஆலியார்

From Tamil Wiki
Revision as of 17:07, 14 November 2022 by Siva Angammal (talk | contribs)

ஆலியார், சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவர் இயற்றிய ஒரு பாடல் சங்க இலக்கிய தொகை நூலான புறநானூறுவில் இடம் பெற்றுள்ளது.

வாழ்க்கைக் குறிப்பு

ஆலியார், சோழநாட்டில், சீர்காழியிலிருந்து திருவெண்காட்டிற்கு செல்லும் வழியிலுள்ள ஆலி என்ற ஊரில் பிறந்தவராக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

சில ஏடுகளில் ஆவியார் என்று காணப்படுவதைக் கொண்டு இவரது பெயர் ஊரைக் கொண்டு வந்ததன்று எனவும்  ஆவினன்குடியை சேர்ந்த குறுநில மன்னர்கள் வேளிர் ஆவியர் என்று அழைக்கப்பட்டதைப் போல குடியைக் குறித்த சொல்லாக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

இலக்கிய வாழ்க்கை

ஆலியார் இயற்றிய ஒரு பாடல் சங்க இலக்கிய தொகை நூலான புறநானூறுவில் 298- வது பாடலாக இடம் பெற்றுள்ளது. இப்பாடல், மிகுந்த களிப்பைத் தரும் தெளிந்த கள்ளை வீரர்களுக்குத் தரும் மன்னனைப் பற்றி வீரனொருவன் கூறுவதாக அமைந்துள்ளது.

பாடலால் அறியவரும் செய்திகள்

புறநானூறு 298
  • திணை ; கரந்தை, நெடுமொழி
  • கள்ளை அரசன் மட்டும் உண்கிறான்.
  • பகைவர் கோட்டையை முற்றுகை இட்டுக்கொண்டிருக்கையில் தன் வாயை மடித்து உருமுகிறான்.
  • மறக்குடி மகன் ஒருவனை “நீ முந்திச் செல்” என உருமுகிறான். இந்த அரசன் கொடியவன்.
  • அரசன் கூறியது நெடுமொழி அன்று. 'முந்துவேன்' என்று போர்மறவன் முன்பே நெடுமொழி கூறியிருக்கவேண்டும். அதுதான் நெடுமொழி. அதனை அறியாத அறியாது அரசன் கூறியதால்தான் வீரன் கலக்கமடைகிறான்.

பாடல் நடை

புறநானூறு 298

எமக்கே கலங்கல் தருமே தானே

தேறல் உண்ணும் மன்னே: நன்றும்

இன்னான் மன்ற வேந்தே; இனியே_

நேரார் ஆரெயில் முற்றி,

உசாத்துணை

புலவர் கா.கோவிந்தன், சங்கத்தமிழ் புலவர் வரிசை 1

புறநானூறு 298, தமிழ் சுரங்கம் இணைய தளம்