under review

ஆர்.எஸ். அருளானந்தம்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 44: Line 44:
* [https://johnson11mcc.blogspot.com/2014/08/blog-post_78.html கிறித்தவக் காப்பியங்களின் தோற்றமும் வளர்ச்சியும், முனைவர் யோ. ஞானச்சந்திர  ஜாண்சன்]  
* [https://johnson11mcc.blogspot.com/2014/08/blog-post_78.html கிறித்தவக் காப்பியங்களின் தோற்றமும் வளர்ச்சியும், முனைவர் யோ. ஞானச்சந்திர  ஜாண்சன்]  
* நற்செய்திக் காவியம், இராச. அருளானந்தம், 481, காருண்யன் தெரு, மிலிட்டரி லைன், பாளையங்கோட்டை-627002, முதல் பதிப்பு: 2000
* நற்செய்திக் காவியம், இராச. அருளானந்தம், 481, காருண்யன் தெரு, மிலிட்டரி லைன், பாளையங்கோட்டை-627002, முதல் பதிப்பு: 2000
{{Second review completed}}
{{Finalised}}

Revision as of 09:16, 13 December 2023

ஆர்.எஸ். அருளானந்தம் (இராச. அருளானந்தம்) (பிறப்பு: 1938) எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், கிறித்தவ இறைத்தொண்டர். தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார். கிறிஸ்தவம் சார்ந்து பல நூல்களை எழுதினார். இயேசு கிறிஸ்து மீது இவர் எழுதிய ‘நற்செய்திக் காவியம்’ குறிப்பிடத்தகுந்த ஒன்று.

பிறப்பு, கல்வி

ஆர்.எஸ். அருளானந்தம், 1938-ல், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள இடையன்குடியில் பிறந்தார். இடையன்குடி கால்டுவெல் பள்ளியில் கல்வி பயின்றார். இளநிலைக் கல்வியை பாளையங்கோட்டையில் உள்ள தூய யோவான் கல்லூரியிலும், முதுநிலைக் கல்வியைச் சென்னை கிறித்தவக் கல்லூரியிலும் படித்தார்.

தனி வாழ்க்கை

ஆர்.எஸ். அருளானந்தம், பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகவும். ஆங்கிலத் துறைத் தலைவராகவும் 30 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றினார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தேர்வுக் கட்டுப்பாடு அதிகாரியாகப் பணிபுரிந்தார். பணி ஓய்வுக்குப் பின், வள்ளியூர் அருகே உள்ள பன்னிருபிடி அய்யன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சில ஆண்டுகள் முதல்வராகப் பணியாற்றினார்

அருளானந்தத்தின் மனைவி: லூசியா. இவர்களுக்கு இரண்டு மகன்கள்.

இலக்கிய வாழ்க்கை

ஆர்.எஸ். அருளானந்தம், கிறிஸ்தவம் சார்ந்து சில நூல்களை எழுதினார். சில நூல்களை மொழிபெயர்த்தார். எளிய மொழியில், வசன நடையில் இயேசு கிறிஸ்து பற்றிய காப்பியம் இயற்ற வேண்டும் என்று ஆவல் கொண்டு, நற்செய்திக் காவியம் என்ற நூலை எழுதினார். பல இலக்கியக் கருத்தரங்குகளுக்குச்  சென்று சொற்பொழிவாற்றினார். இலக்கணப் பிழையின்றி மாணவர்கள் ஆங்கிலத்தில் பேச வேண்டும் என்ற நோக்கில் அகராதி ஒன்றை உருவாக்கினார்.

மதப் பணிகள்

ஆர்.எஸ். அருளானந்தம், சிறு வயதிலேயே பெற்றோர் மற்றும் பாட்டனாரின் தூண்டுதலால் வேத விளக்க நூல்களை முறையாகக் கற்றார். பாளையங்கோட்டை உலக இரட்சகர் செபக் குழுவினருடன் இணைந்து கிராமங்கள் தோறும் சென்று நற்செய்திப் பணியாற்றினார்.

பொறுப்புகள்

  • கல்லூரி ஆட்சி மன்றப் பேரவை உறுப்பினர்
  • கல்லூரி ஆசிரியர் மன்றத் தலைவர்

மதிப்பீடு

ஆர்.எஸ். அருளானந்தம், கிறித்தவ மதப் பரப்புரையாளராகச் செயல்பட்டார். கிறித்தவம் சார்ந்து இவர் எழுதிய நூல்களில், ‘நற்செய்திக் காப்பியம்’ குறிப்பிடத்தக்க ஒன்றாக அறியப்படுகிறது.

நூல்கள்

தமிழ் நூல்கள்
  • நற்செய்திக் காவியம்
  • இயேசுவின் ஏழு வார்த்தைகள்
  • வேதனையில் வெற்றி - யோபின் வரலாறு.
  • திருத்தொண்டர் கால்ட்வெல்
ஆங்கில நூல்கள்
  • An Edition of Shakespeare Antony and Cleopatra
  • Ph.D. Thesis on St. John's Gospel and Literature
  • English, English, Tamil Dictionary for Schools and Colleges
  • Jeevan Deep Dictionary for Schools and Colleges

உசாத்துணை


✅Finalised Page