ஆர்னிகா நாசர்

From Tamil Wiki
Revision as of 22:54, 28 January 2024 by ASN (talk | contribs) (Page Created by ASN)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
ஆர்னிகா நாசர்

ஆர்னிகா நாசர் (வி.ச. நாசர்) (பிறப்பு: நவம்பர் 13, 1960) எழுத்தாளர், இதழாளர், மொழிபெயர்ப்பாளர், பேச்சாளர், நாடக ஆசிரியர். பொது வாசிப்புக்குரிய சிறுகதைகளையும், நாவல்களையும், குற்றப் புதினங்களையும் எழுதினார். இஸ்லாமிய மார்க்க நூல்கள், இஸ்லாமிய நீதிக்கதைகளை எழுதினார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சுகாதாரத்துறை ஆய்வாளராகப் பணியாற்றினார். தமிழ் மாமணி விருது உள்பட பல்வேறு விருதுகளைப் பெற்றார்.

பிறப்பு, கல்வி

வி.ச. நாசர் என்னும் இயற்பெயரை உடைய ஆர்னிகா நாசர், நவம்பர் 13, 1960-ல், மதுரை கோரிப்பாளையத்தில், சம்சுதீன் – ரகிமா இணையருக்குப் பிறந்தார். தொடக்கக் கல்வியை மதுரை நேருஜி ஆரம்பப் பள்ளியில் படித்தார். உயர்நிலைக் கல்வியை திண்டுக்கல் புனித மரியன்னை பள்ளியில் பயின்றார். பூண்டி புஷ்பம் கல்லூரியில் இளம் அறிவியலில் (பி.எஸ்ஸி.) பட்டம் பெற்றார்.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படித்து சமூகவியலில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டம் பெற்றார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பயின்று சமூகவியலில் எம்.பில் பட்டம் பெற்றார். அழகப்பா பல்கலையில் பயின்று மருத்துவ மேலாண்மை நிர்வாகத்தில் எம்.பி.ஏ. பட்டம் பெற்றார். வெகுஜனத் தொடர்புக்கான முதுகலைப் பட்டயம், மருத்துவ நிர்வாகத்தில் பட்டயம் பெற்றார். தமிழ்நாடு தேர்வாணையம் நடத்தும் நீதிமன்றத் தீர்ப்புகளுக்கான மொழிபெயர்ப்புத் தேர்வு, மெடிக்கல் கோட் தேர்வு, அக்கவுண்ட் தேர்வுகள், யூஜிசி நெட் தேர்வு ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றார். மதுரை காமராஜர் பல்கலையில் சமூகவியலில் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டார்.

தனி வாழ்க்கை

ஆர்னிகா நாசர், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சுகாதாரத்துறை ஆய்வாளராகப் பணியாற்றினார். மணமானவர். மனைவி: வகிதா. மகள்: ஜாஸ்மின். மகன்: நிலாமகன்.

இலக்கிய வாழ்க்கை