being created

ஆன்டன் செகாவ்

From Tamil Wiki
Revision as of 12:08, 20 October 2023 by Ramya (talk | contribs) (Created page with "ஆன்டன் செகாவ் (ஆன்டன் பாவ்லோவிச் செகாவ்) (Anton Pavlovich Chekhov) (ஜனவரி 29, 1860 – ஜூலை 15, 1904) ரஷ்யாவைச் சேர்ந்த எழுத்தாளர், சிறுகதையாசிரியர், நாடக ஆசிரியர், மருத்துவர். == பிறப்பு, கல்வி == அன்டன் செகோவ...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

ஆன்டன் செகாவ் (ஆன்டன் பாவ்லோவிச் செகாவ்) (Anton Pavlovich Chekhov) (ஜனவரி 29, 1860 – ஜூலை 15, 1904) ரஷ்யாவைச் சேர்ந்த எழுத்தாளர், சிறுகதையாசிரியர், நாடக ஆசிரியர், மருத்துவர்.

பிறப்பு, கல்வி

அன்டன் செகோவ் ஜனவரி 29, 1860இல் தெற்கு ரஷ்யாவின் அசோவ்(Azov) கடல் துறைமுகமான டாகன்ராக் (Taganrog)இல் பவெல் எகொரோவிச் செக்கோவ், மூன்றாவதாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் ஆறு சகோதரர்கள். இவர் மூன்றாவது நபர் ஆவார். இவரது தந்தையின் பெயர் என்பதாகும். இவருடைய தந்தை ஒரு பண்ணையடிமையாவார். அவரது மனைவி, உக்ரேனிய நாட்டைச் சார்ந்தவர். அவரது வில்ஹோவட்கா கிராமமானது கொபிலியகி அருகேயுள்ள போல்டவா பகுதியில் உள்ள தற்போதைய உக்ரைன் நாட்டில் அமைந்துள்ளது. ஒரு மளிகைக் கடை நடத்தி வந்தார். இவர் திருச்சபைப் பாடகர் குழுவின் இயக்குநராகவும், பக்தியுள்ள கட்டுப்பாடான கிறிஸ்துவராகவும் மற்றும் உடல் குறைபாடுடையவராகவும் காணப்பட்டார். பவெல் செக்கோவ், சில வரலாற்றாசிரியர்களால் தனது மகனின் பல ஓவியங்களில் காணப்படும் பாவனை மூலமாகப் பார்க்கப்பட்டார். செக்கோவின் தாயான, எவ்ஜெனிய மொரோசாவா சிறந்த கதைசொல்லி. அவர் தம்முடைய குழந்தைகளுக்கு, தாம் தம் துணி வியாபாரியான தந்தையுடன் ரஷ்யா முழுக்கப் பயணித்த பல்வேறு பயண அனுபவங்களைக் கதைகளாக எடுத்துக்கூறுவார்

தனி வாழ்க்கை

நாடக வாழ்க்கை

நாடக ஆசிரியராக இருந்து இவர் படைத்த கடற்புறா, அங்கிள் வான்யா, மூன்று சகோதரிகள், செர்ரிப் பழத்தோட்டம் ஆகிய நான்கு செவ்வியல் நாடகங்கள் மற்றும் இவரது சிறந்த சிறுகதைகளும் ஏனைய எழுத்தாளர்கள் மற்றும் விமர்சகர்களிடம் இவருக்குத் தனி மரியாதையை ஏற்படுத்தின. ஹென்ரிக் இப்சன், ஆகஸ்ட் ஸ்ட்ரின்ட்பெர்க் ஆகிய இருவருடனும் செகாவ் இணைந்து நவீனத்துவத்தை மேடைகளில் புகுத்தினார். நவீனத்துவத்தை நாடகங்களில் தொடங்கி வைத்ததில் இம்மூவரும் முக்கியமானவர்களாகக் குறிப்பிடப்படுகின்றனர்.

1896 ஆம் ஆண்டில் இவரது முதல் நாடகமான கடற்புறா படுதோல்வியடைந்த போது, செக் கோவ் நாடகம் எழுதுவதைக் கைவிட்டார். த சீகல் நாடகத்தின் வரவேற்புக்குப் பின், மீளவும் 1898-இல் கான்சிட்டாண்டின் தாலின்சிலாவிசிக்கியின் மாஸ்கோ கலை அரங்கில் அரங்கேறியபோது இது பெரும் புகழ்பெற்றது. அதன் பின்னரே, மூன்று சகோதரிகள் மற்றும் செர்ரி பழத்தோட்டம் ஆகிய நாடகங்கள் அரங்கேற்றப்பட்டன. இவை நாடகக் குழுமத்தினருக்கும், பார்வையாளர்களுக்கும் சவாலாக இருந்தன. மேலும், செகாவின் இந்நாடகங்கள் மரபுவழி நடிப்புக்குப் பதிலாக, பார்வையாளர்களுக்கு "மனநிலை சார்ந்த அரங்கியல்" என்னும் நுட்பத்தையும், "நாடகத்தின் உரைகளுக்குள் ஆழ்ந்து போகும் நிலையையும்" கொடுத்தன.

இலக்கிய வாழ்க்கை

செக்கோவ் தான் முதலில் எழுதிய கதைகளைப் பணத்துக்காகவே எழுதினார். ஆனால், அவரது கலைப்படைப்பு ஈர்ப்பு அதிகரித்தபோது, தற்காலச் சிறுகதை வளர்ச்சியில் பின்னர் செல்வாக்கு ஏற்படுத்திய பல புதுமைகளை அவர் தனது கதைகளில் அன்று புகுத்தினார்.

நூல் பட்டியல்

தமிழில் மொழிபெயர்க்கப்பட்டவை

இணைப்புகள்


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.