under review

ஆதி. இராஜகுமாரன்: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "thumb|ஆதி. இராஜகுமாரன் ஆதி. இராஜகுமாரன் (ஜூலை 20, 1948 - ஆகஸ்டு 25, 2018) மலேசியாவின் மூத்தப் பத்திரிகையாளர்களில் ஒருவர். குறிப்பிடத்தக்க சிறுகதைகள், கவிதைகள் எழுதியவர். இதழியல் மூ...")
 
(Corrected error in line feed character)
Tag: Manual revert
 
(14 intermediate revisions by 7 users not shown)
Line 1: Line 1:
[[File:Rajakumaran-late-.jpg|thumb|ஆதி. இராஜகுமாரன்]]
[[File:Rajakumaran-late-.jpg|thumb|ஆதி. இராஜகுமாரன்]]
ஆதி. இராஜகுமாரன் (ஜூலை 20, 1948 - ஆகஸ்டு 25, 2018) மலேசியாவின் மூத்தப் பத்திரிகையாளர்களில் ஒருவர். குறிப்பிடத்தக்க சிறுகதைகள், கவிதைகள் எழுதியவர். இதழியல் மூலமாக இளம் எழுத்தாளர்களையும் வெகுசன இதழாசிரியர்களையும் உருவாக்கியவர்.  
ஆதி. இராஜகுமாரன் (ஜூலை 20, 1948 - ஆகஸ்டு 25, 2018) மலேசியாவின் மூத்த பத்திரிகையாளர்களில் ஒருவர். குறிப்பிடத்தக்க சிறுகதைகள், கவிதைகள் எழுதியவர். இதழியல் மூலமாக இளம் எழுத்தாளர்களையும் இதழாசிரியர்களையும் உருவாக்கியவர்.  
 
== பிறப்பு, கல்வி ==
== பிறப்பு, கல்வி ==
ஆதி. இராஜகுமாரன் ஜூலை 20, 1948 ல் பட்டர்வொர்த்தில் பிறந்தார். இவரது தந்தை ஆதிமூலம். தாயார் சாரதம்பாள். பினாங்கின் தொடக்கத் தமிழ்ப் பள்ளியில் கற்கத் தொடங்கிய சிறிது காலத்தில், தந்தை இவரைத் தமிழகத்தில் கல்வியைத் தொடர அனுப்பி வைத்தார். அங்கு மேற்கல்வியை முடித்தபின் பெரியார் கல்லூரியைச் சார்ந்த சென்னைப் பல்கலைக்கழகத்தில் இளநிலை அறிவியல் (B.Sc) மற்றும் சட்டம் (B.G.L) ஆகியவற்றில் பட்டங்கள் பெற்றார். பின்னர் மலாயாவுக்குத் திருப்பினார்.  
ஆதி. இராஜகுமாரன் ஜூலை 20, 1948 அன்று மலேசியாவில் பட்டர்வொர்த்தில் பிறந்தார். இவரது தந்தை ஆதிமூலம். தாயார் சாரதம்பாள். பினாங்கின் தொடக்கத் தமிழ்ப் பள்ளியில் கற்கத் தொடங்கிய சிறிது காலத்தில், தந்தை இவரைத் தமிழகத்தில் கல்வியைத் தொடர அனுப்பி வைத்தார். அங்கு மேற்கல்வியை முடித்தபின் பெரியார் கல்லூரியைச் சார்ந்த சென்னைப் பல்கலைக்கழகத்தில் இளநிலை அறிவியல் (B.Sc) மற்றும் சட்டம் (B.G.L) ஆகியவற்றில் பட்டங்கள் பெற்றுர் மலாயாவுக்குத் திரும்பினார். இவருடைய தம்பி இதழாளரான [[ஆதி. குமணன்]]
 
== இதழியல் ==
== இதழியல் ==
[[File:ராஜகுமார.png|thumb|ஆதி. இராஜகுமாரனுடன் பெ.ராஜேந்திரன்]]
[[File:ராஜகுமார.png|thumb|ஆதி. இராஜகுமாரனுடன் பெ.ராஜேந்திரன்]]
ஆதி. இராஜகுமாரன் 1975ல் தமிழ்மலர் நாளிதழில் இணைந்து பணியாற்றினார். 1976 - 77ல் புதிய நிர்வாகத்தின் கெடுபிடிகளால் ஊழியர்கள் பலர் பாதிக்கப்பட்டனர். நிர்வாகத்தை எதிர்த்து இவரது தம்பி ஆதி. குமணன் நடத்திய போராட்டத்தில் தீவிரமாகப் பங்கெடுத்தார். போராட்டம் நடத்தியவர்களை நிர்வாகம் வேலையில் இருந்து வெளியேற்றியதும் ஆதி.குமணன் 1977ல் தொடங்கிய வானம்பாடி வார இதழ் வளர்ச்சிக்குத் தீவிரமாகப் பங்களித்தார். அதில் துணையாசிரியராகப் பொறுப்பேற்றார். அந்த வானம்பாடி இதழில் 'சாசனம்' எனும் பகுதியை ஏற்படுத்தி 1978 முதல் 1981 வரை வாரம் தோறும் இலக்கியம், அரசியல், வாழ்வியல் போன்ற துறைகளைப் பற்றி தொடர் எழுதினார். அப்படைப்பு வாசகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
ஆதி. இராஜகுமாரன் 1975-ல் [[தமிழ் மலர்]] நாளிதழில் இணைந்து பணியாற்றினார். 1976 - 77-ல் புதிய நிர்வாகத்தின் கெடுபிடிகளால் ஊழியர்கள் பலர் பாதிக்கப்பட்டனர். நிர்வாகத்தை எதிர்த்து இவரது தம்பி [[ஆதி. குமணன்]] நடத்திய போராட்டத்தில் தீவிரமாகப் பங்கெடுத்தார். போராட்டம் நடத்தியவர்களை நிர்வாகம் வேலையில் இருந்து வெளியேற்றியதும் ஆதி.குமணன் 1977-ல் தொடங்கிய [[வானம்பாடி (மலேசியா)|வானம்பாடி]] (மலேசியா) வளர்ச்சிக்குத் தீவிரமாகப் பங்களித்தார். அதில் துணையாசிரியராகப் பொறுப்பேற்றார். வானம்பாடி இதழில் 'சாசனம்' எனும் பகுதியை ஏற்படுத்தி 1978 முதல் 1981 வரை வாரம் தோறும் இலக்கியம், அரசியல், வாழ்வியல் போன்ற துறைகளைப் பற்றி தொடர் எழுதினார். அப்படைப்பு வாசகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.


வானம்பாடிக்குப் பின்னர் ஆதி.குமணன் 1981ல் 'தமிழ் ஓசை' நாளிதழின் ஆசிரியரானார். அதில் ஆதி. இராஜகுமாரன் ஞாயிறு பதிப்பு பொறுப்பாசிரியரானார். அரசியல் காரணங்களால் அந்நாளிதழ் நிறுத்தப்பட்டது. பின்னர் ஆதி.இராஜகுமாரனை உரிமைப் பங்காளராகவும் முதன்மை ஆசிரியராகவும் கொண்டு 1994ல் 'மக்கள் ஓசை' வார இதழ் தொடங்கப்பட்டது. மேலும் பெ.ராஜேந்திரன் எனும் பத்திரிகை நிருபருடன் இணைந்து 1987ல் தொடங்கப்பட்ட 'நயனம்' எனும் இதழையும் நடத்திவந்தார் ஆதி. இராஜகுமாரன். தமிழகத்தின் 'குமுதம்' இதழை முன்மாதிரியாகக் கொண்டு அவ்விதழ் வெளிவந்து வெற்றியும் பெற்றது. சதுரங்கம் எனும் இவரது வாசகர் கேள்வி பதில் அங்கமும் புதுநிலவு எனும் புனைப்பெயரில் இவர் எழுதிய கவிதைகளும் நயனம் இதழில் சிலாகிக்கப்பட்டன.  
வானம்பாடிக்குப் பின்னர் ஆதி.குமணன் 1981-ல் '[[தமிழ் ஓசை]]' நாளிதழின் ஆசிரியரானார். அதில் ஆதி. இராஜகுமாரன் ஞாயிறு பதிப்பு பொறுப்பாசிரியரானார். அரசியல் காரணங்களால் அந்நாளிதழ் நிறுத்தப்பட்டது. பின்னர் ஆதி. இராஜகுமாரனை உரிமைப் பங்காளராகவும் முதன்மை ஆசிரியராகவும் கொண்டு 1994-ல் '[[மக்கள் ஓசை]]' வார இதழ் தொடங்கப்பட்டது. [[பெ. ராஜேந்திரன்]] எனும் பத்திரிகை நிருபருடன் இணைந்து 1987-ல் தொடங்கப்பட்ட 'நயனம்' எனும் இதழையும் நடத்திவந்தார் ஆதி. இராஜகுமாரன். தமிழகத்தின் 'குமுதம்' இதழை முன்மாதிரியாகக் கொண்டு அவ்விதழ் வெளிவந்து வெற்றியும் பெற்றது. சதுரங்கம் எனும் இவரது வாசகர் கேள்வி பதில் அங்கமும் புதுநிலவு எனும் புனைப்பெயரில் இவர் எழுதிய கவிதைகளும் நயனம் இதழில் சிலாகிக்கப்பட்டன.  


நயனம் வாசகர்களிடம் பரவலாகப் பெற்ற ஆதரவைத் தொடர்ந்து விடிவெள்ளி (1991), நிலா (2012), எனும் இதழ்களை வெளியிட்டார். 'நிலா' முதலில் மலாய் மொழியில் வெளிவந்து பின்னர் சிலகாலம் தமிழ் இதழாக வந்தது. ஓரண்டில் நிறுத்தப்பட்டது. விடிவெள்ளி மோகன் பெருமாள் பொறுப்பில் வெளிவந்து ஓராண்டில் நின்றது. இரண்டு இதழ்களும் புத்திலக்கியங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளிவந்தன.  
நயனம் வாசகர்களிடம் பரவலாகப் பெற்ற ஆதரவைத் தொடர்ந்து விடிவெள்ளி (1991), நிலா (2012), எனும் இதழ்களை வெளியிட்டார். 'நிலா' முதலில் மலாய் மொழியில் வெளிவந்து பின்னர் சிலகாலம் தமிழ் இதழாக வந்தது. ஓரண்டில் நிறுத்தப்பட்டது. விடிவெள்ளி மோகன் பெருமாள் பொறுப்பில் வெளிவந்து ஓராண்டில் நின்றது. இரண்டு இதழ்களும் புத்திலக்கியங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளிவந்தன.  


தீவிர இலக்கிய வாசகரான ஆதி. இராஜகுமாரன் 'வல்லினம்' போன்ற இலக்கிய இதழ் வருகைக்கு துணை நின்றவர்.
தீவிர இலக்கிய வாசகரான ஆதி. இராஜகுமாரன் '[[வல்லினம்]]' போன்ற இலக்கிய இதழ் வருகைக்கு துணை நின்றவர்.
 
== இணையம் ==
== இணையம் ==
[[File:00130-300x214-300x214.jpg|thumb|ஆதி. இராஜகுமாரன், இராஜேந்திரன்]]
[[File:00130-300x214-300x214.jpg|thumb|ஆதி. இராஜகுமாரன், இராஜேந்திரன்]]
முத்து நெடுமாறன் உருவாக்கிய முரசு செயலியில் தொடக்க காலத்திலிருந்து ஆதரித்து வருபவர் ஆதி. இராஜகுமாரன். அது நடைமுறைக்கு வந்த நாள் தொட்டே நயனம் இதழில் பயன்படுத்தத் தொடங்கினார். அத்துறை மேம்பாட்டிற்காகத் தம் பங்காக 'இணையம்' எனும் கலைச்சொல்லை உருவாக்கினார்.  
[[முத்து நெடுமாறன்]] உருவாக்கிய [[முரசு செயலி]]யில் தொடக்க காலத்திலிருந்து பங்களித்து ஆதி. இராஜகுமாரன். அது நடைமுறைக்கு வந்த நாள் தொட்டே நயனம் இதழில் பயன்படுத்தத் தொடங்கினார். அத்துறை மேம்பாட்டிற்காகத் தம் பங்காக 'இணையம்' எனும் கலைச்சொல்லை உருவாக்கினார்.
 
== பங்களிப்பு ==
== பங்களிப்பு ==
ஆதி. இராஜகுமாரன் 80களில் குறிப்பிடத்தக்க சிறுகதைகளை எழுதியவர். வித்யாசாகர், எஸ்.பி.அருண் போன்ற வெகுசன இதழியலாளர்கள் உருவாகக் காரணியாக இருந்தார். 'இணையம்' எனும் கலைச்சொல் தமிழ்ச் சூழலில் இவர் வழங்கிய கொடை.
ஆதி. இராஜகுமாரன் 1980-களில் குறிப்பிடத்தக்க சிறுகதைகளை எழுதியவர். [[வித்யாசாகர்]], [[எஸ்.பி.அருண்]] போன்ற வெகுசன இதழியலாளர்கள் உருவாகக் காரணியாக இருந்தார்.  
 
== நூல்கள் ==
== நூல்கள் ==
* ராத்திரி பூக்கள் - நாவல் - 1980
* ராத்திரி பூக்கள் - நாவல் - 1980
* முகவரி தேடும் மலர்கள் - சிறுகதைகள் - 1984
* முகவரி தேடும் மலர்கள் - சிறுகதைகள் - 1984
* ஆதி. இராஜகுமாரன் சிறுகதைகள் - 2019
* ஆதி. இராஜகுமாரன் சிறுகதைகள் - 2019
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* [http://vallinam.com.my/navin/?p=3316 ஆதி.இராஜகுமாரன்: நிழலைப் பதுக்கிய கலைஞன் - ம.நவீன்]
* [http://vallinam.com.my/navin/?p=3316 ஆதி.இராஜகுமாரன்: நிழலைப் பதுக்கிய கலைஞன் - ம.நவீன்]
* உலகத் தமிழ்க் களஞ்சியம் - 2018
* உலகத் தமிழ்க் களஞ்சியம் - 2018
{{Finalised}}
[[Category:மலேசிய ஆளுமைகள்]]
[[Category:Tamil Content]]
[[Category:Spc]]
[[Category:இதழாசிரியர்கள்]]
[[Category:எழுத்தாளர்கள்]]
[[Category:சிறுகதையாசிரியர்கள்]]

Latest revision as of 20:09, 12 July 2023

ஆதி. இராஜகுமாரன்

ஆதி. இராஜகுமாரன் (ஜூலை 20, 1948 - ஆகஸ்டு 25, 2018) மலேசியாவின் மூத்த பத்திரிகையாளர்களில் ஒருவர். குறிப்பிடத்தக்க சிறுகதைகள், கவிதைகள் எழுதியவர். இதழியல் மூலமாக இளம் எழுத்தாளர்களையும் இதழாசிரியர்களையும் உருவாக்கியவர்.

பிறப்பு, கல்வி

ஆதி. இராஜகுமாரன் ஜூலை 20, 1948 அன்று மலேசியாவில் பட்டர்வொர்த்தில் பிறந்தார். இவரது தந்தை ஆதிமூலம். தாயார் சாரதம்பாள். பினாங்கின் தொடக்கத் தமிழ்ப் பள்ளியில் கற்கத் தொடங்கிய சிறிது காலத்தில், தந்தை இவரைத் தமிழகத்தில் கல்வியைத் தொடர அனுப்பி வைத்தார். அங்கு மேற்கல்வியை முடித்தபின் பெரியார் கல்லூரியைச் சார்ந்த சென்னைப் பல்கலைக்கழகத்தில் இளநிலை அறிவியல் (B.Sc) மற்றும் சட்டம் (B.G.L) ஆகியவற்றில் பட்டங்கள் பெற்றுர் மலாயாவுக்குத் திரும்பினார். இவருடைய தம்பி இதழாளரான ஆதி. குமணன்

இதழியல்

ஆதி. இராஜகுமாரனுடன் பெ.ராஜேந்திரன்

ஆதி. இராஜகுமாரன் 1975-ல் தமிழ் மலர் நாளிதழில் இணைந்து பணியாற்றினார். 1976 - 77-ல் புதிய நிர்வாகத்தின் கெடுபிடிகளால் ஊழியர்கள் பலர் பாதிக்கப்பட்டனர். நிர்வாகத்தை எதிர்த்து இவரது தம்பி ஆதி. குமணன் நடத்திய போராட்டத்தில் தீவிரமாகப் பங்கெடுத்தார். போராட்டம் நடத்தியவர்களை நிர்வாகம் வேலையில் இருந்து வெளியேற்றியதும் ஆதி.குமணன் 1977-ல் தொடங்கிய வானம்பாடி (மலேசியா) வளர்ச்சிக்குத் தீவிரமாகப் பங்களித்தார். அதில் துணையாசிரியராகப் பொறுப்பேற்றார். வானம்பாடி இதழில் 'சாசனம்' எனும் பகுதியை ஏற்படுத்தி 1978 முதல் 1981 வரை வாரம் தோறும் இலக்கியம், அரசியல், வாழ்வியல் போன்ற துறைகளைப் பற்றி தொடர் எழுதினார். அப்படைப்பு வாசகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

வானம்பாடிக்குப் பின்னர் ஆதி.குமணன் 1981-ல் 'தமிழ் ஓசை' நாளிதழின் ஆசிரியரானார். அதில் ஆதி. இராஜகுமாரன் ஞாயிறு பதிப்பு பொறுப்பாசிரியரானார். அரசியல் காரணங்களால் அந்நாளிதழ் நிறுத்தப்பட்டது. பின்னர் ஆதி. இராஜகுமாரனை உரிமைப் பங்காளராகவும் முதன்மை ஆசிரியராகவும் கொண்டு 1994-ல் 'மக்கள் ஓசை' வார இதழ் தொடங்கப்பட்டது. பெ. ராஜேந்திரன் எனும் பத்திரிகை நிருபருடன் இணைந்து 1987-ல் தொடங்கப்பட்ட 'நயனம்' எனும் இதழையும் நடத்திவந்தார் ஆதி. இராஜகுமாரன். தமிழகத்தின் 'குமுதம்' இதழை முன்மாதிரியாகக் கொண்டு அவ்விதழ் வெளிவந்து வெற்றியும் பெற்றது. சதுரங்கம் எனும் இவரது வாசகர் கேள்வி பதில் அங்கமும் புதுநிலவு எனும் புனைப்பெயரில் இவர் எழுதிய கவிதைகளும் நயனம் இதழில் சிலாகிக்கப்பட்டன.

நயனம் வாசகர்களிடம் பரவலாகப் பெற்ற ஆதரவைத் தொடர்ந்து விடிவெள்ளி (1991), நிலா (2012), எனும் இதழ்களை வெளியிட்டார். 'நிலா' முதலில் மலாய் மொழியில் வெளிவந்து பின்னர் சிலகாலம் தமிழ் இதழாக வந்தது. ஓரண்டில் நிறுத்தப்பட்டது. விடிவெள்ளி மோகன் பெருமாள் பொறுப்பில் வெளிவந்து ஓராண்டில் நின்றது. இரண்டு இதழ்களும் புத்திலக்கியங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளிவந்தன.

தீவிர இலக்கிய வாசகரான ஆதி. இராஜகுமாரன் 'வல்லினம்' போன்ற இலக்கிய இதழ் வருகைக்கு துணை நின்றவர்.

இணையம்

ஆதி. இராஜகுமாரன், இராஜேந்திரன்

முத்து நெடுமாறன் உருவாக்கிய முரசு செயலியில் தொடக்க காலத்திலிருந்து பங்களித்து ஆதி. இராஜகுமாரன். அது நடைமுறைக்கு வந்த நாள் தொட்டே நயனம் இதழில் பயன்படுத்தத் தொடங்கினார். அத்துறை மேம்பாட்டிற்காகத் தம் பங்காக 'இணையம்' எனும் கலைச்சொல்லை உருவாக்கினார்.

பங்களிப்பு

ஆதி. இராஜகுமாரன் 1980-களில் குறிப்பிடத்தக்க சிறுகதைகளை எழுதியவர். வித்யாசாகர், எஸ்.பி.அருண் போன்ற வெகுசன இதழியலாளர்கள் உருவாகக் காரணியாக இருந்தார்.

நூல்கள்

  • ராத்திரி பூக்கள் - நாவல் - 1980
  • முகவரி தேடும் மலர்கள் - சிறுகதைகள் - 1984
  • ஆதி. இராஜகுமாரன் சிறுகதைகள் - 2019

உசாத்துணை


✅Finalised Page