under review

அ. முருகவேள்: Difference between revisions

From Tamil Wiki
(changed template text)
No edit summary
 
(One intermediate revision by one other user not shown)
Line 1: Line 1:
[[File:அ. முருகவேள்.png|thumb|அ. முருகவேள் (நன்றி: செல்லையா மெற்றாஸ்மயில்)]]
[[File:அ. முருகவேள்.png|thumb|அ. முருகவேள் (நன்றி: செல்லையா மெற்றாஸ்மயில்)]]
அ. முருகவேள்(அக்டோபர் 24, 1925) ஈழத்து நாட்டுக்கூத்துக் கலைஞர். வட்டுக்கோட்டை நாட்டுக்கூத்து அபிவிருத்திக் குழுவின் ஆயுட்காலத்தலைவராக இருந்து பல நாட்டுக்கூத்துக்களை அரங்கேற்றிய அண்ணாவியார். மரபு கலப்படாமல் [[வடமோடிக்கூத்து|வடமோடி]]க்கூத்தை நடித்தும் பயிற்றுவித்தும் பங்காற்றினார்.
அ. முருகவேள்(பிறப்பு: அக்டோபர் 24, 1925) ஈழத்து நாட்டுக்கூத்துக் கலைஞர். வட்டுக்கோட்டை நாட்டுக்கூத்து அபிவிருத்திக் குழுவின் ஆயுட்காலத்தலைவராக இருந்து பல நாட்டுக்கூத்துக்களை அரங்கேற்றிய அண்ணாவியார். மரபு கலப்படாமல் [[வடமோடிக்கூத்து|வடமோடி]]க்கூத்தை நடித்தும் பயிற்றுவித்தும் பங்காற்றினார்.
== வாழ்க்கைக் குறிப்பு ==
== வாழ்க்கைக் குறிப்பு ==
இலங்கை வட்டுக்கோட்டையில் அக்டோபர் 24, 1925-ல் அ. முருகவேள் பிறந்தார். மகாபாரதம், ராமாயணம் வாய்மொழியாகக் கற்றார். முப்பதுக்கும் மேற்பட்ட நாட்டுக்கூத்து கையெழுத்துப் பிரதிகளை சேகரித்துப் படித்தார். மலையகத்திலும், யாழகத்திலும் ஆசிரியர் பணி செய்தார்.  

Line 22: Line 22:
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:Spc]]
[[Category:Spc]]
[[Category:நாடகக் கூத்துக் கலைஞர்கள்]]

Latest revision as of 10:16, 25 November 2023

அ. முருகவேள் (நன்றி: செல்லையா மெற்றாஸ்மயில்)

அ. முருகவேள்(பிறப்பு: அக்டோபர் 24, 1925) ஈழத்து நாட்டுக்கூத்துக் கலைஞர். வட்டுக்கோட்டை நாட்டுக்கூத்து அபிவிருத்திக் குழுவின் ஆயுட்காலத்தலைவராக இருந்து பல நாட்டுக்கூத்துக்களை அரங்கேற்றிய அண்ணாவியார். மரபு கலப்படாமல் வடமோடிக்கூத்தை நடித்தும் பயிற்றுவித்தும் பங்காற்றினார்.

வாழ்க்கைக் குறிப்பு

இலங்கை வட்டுக்கோட்டையில் அக்டோபர் 24, 1925-ல் அ. முருகவேள் பிறந்தார். மகாபாரதம், ராமாயணம் வாய்மொழியாகக் கற்றார். முப்பதுக்கும் மேற்பட்ட நாட்டுக்கூத்து கையெழுத்துப் பிரதிகளை சேகரித்துப் படித்தார். மலையகத்திலும், யாழகத்திலும் ஆசிரியர் பணி செய்தார்.

நண்பர்கள்
  • சேதுபேரன் முருகுப்பிள்ளைப் புலவர்
  • மூ.வே. சீவரத்தினம்
  • க. மயில்வாகனார்

கலை வாழ்க்கை

வட்டுக்கோட்டை நாட்டுக்கூத்து அபிவிருத்திக் குழுவின் ஆயுட்காலத் தலைவராக முருகவேள் இருந்தார். வடமோடிக்கூத்துக்குப் பெயர்போனவர்களும், நாட்டுக்கூத்து மரபு கலப்படாமல் பாதுகாத்தவர்களுமான வட்டுக்கோட்டை அண்ணாவியார்களில் முருகவேள் முக்கியமானவர். இளமையில் "பாலர் கலை வளர் சங்கம்" என்ற பெயரில் சிறுவர்களோடு இணைந்து உருவாக்கி தரும புத்திர நாடகத்தை அரங்கேற்றினார். 1961-ல் வட்டுக்கோட்டை பரராசசேகரம் உதவியுடன் தரும புத்திர நாடகத்தை முழுமையாக அரங்கேற்றினார். பல நாட்டுக்கூத்துக்களை நெறியாள்கை செய்து மேடையேற்றினார்.

விருதுகள்

  • கண்டி மாநகரில் கல்லூரிகளுக்கு இடையிலான போட்டியில் வீமனாக நடித்து முதல் பரிசு பெற்றார்.

அரங்கேற்றிய கூத்துகள்

  • தருமபுத்திர நாடகம்
  • இந்திரகுமாரன் நாடகம்
  • விராட நாடகம்
  • வாளபிமன் நாடகம்
  • குருக்கேத்திரன் நாடகம்

உசாத்துணை

✅Finalised Page