under review

அ.சே.சுந்தரராஜன்

From Tamil Wiki
Revision as of 16:24, 13 June 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Added First published date)

To read the article in English: A. S. Sundararajan. ‎

அ.சே.சுந்தரராஜன் (நன்றி: பசுபதிவுகள் (s-pasupathy.blogspot.com)

அ.சே.சுந்தரராஜன் (1899) (பேராசிரியர் அன்பில் சே. சுந்தரராஜன்) கம்ப ராமாயண அறிஞர். கம்ப ராமாயணத்திற்கு அகராதி ஒன்றை தொகுத்து அளித்தார்.

பிறப்பு, கல்வி

இவர் திருச்சிக்கு அருகில் உள்ள அன்பில் என்ற ஊரில் 1899-ம் ஆண்டு பிறந்தார். திருச்சியில் உள்ள செயிண்ட் ஜோசப் கல்லூரியில் வரலாற்றுப்பாடத்தில் இளங்கலை பட்டம் பெற்றார்.

தனிவாழ்க்கை

இவர் யாழ்ப்பாணத்தில் இராமநாத வள்ளல் நிறுவிய பரமேஸ்வரன் கல்லூரி, இராமநாதன் கல்லூரி ஆகிய இரு கல்லூரிகளில் தமிழாசிரியராக 1922-ம் வருடம் முதல் 22 ஆண்டுகள் பணிபுரிந்தார்.

இவருடைய நூல்கள் சென்னை, அண்ணாமலை மற்றும் இலங்கைப் பல்கலைக்கழகங்களில் பாடமாக இருந்தன.

நன்றி: பசுபதிவுகள் (s-pasupathy.blogspot.com)

பங்களிப்பு

இவர் கம்ப ராமாயணத்திற்கு அகராதி ஒன்றை கம்ப ராமாயண அகராதி (1-5) என்ற பெயரில் தொகுத்து வெளியிட்டார். இந்த நூல் 1978-க்கு பிறகு மறுபதிப்பு காணவில்லை.

இவர் எழுதி வெளியிட்ட நூல்கள்

  • கம்பன் கவிதைக் கோவை - 1-3[1]
  • இராம காதை (சுருக்கம்)[2]
  • நளன் சரிதம் (சுருக்கம்)[3]
  • தமிழ் அமுதம்[4]
  • வில்லி பாரதம் (சுருக்கம்)
  • கம்பராமாயண அகராதி 1-5
  • கம்பரும் உலகியலும்

உசாத்துணை

அடிக்குறிப்புகள்



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 12:05:35 IST