அரிமளம் சு.பத்மநாபன்

From Tamil Wiki
Revision as of 22:16, 5 March 2022 by Tamizhkalai (talk | contribs)

அரிமளம் சு.பத்மநாபன் தமிழிசைக் கலைஞர் , ஆராய்ச்சியாளர், இசையாசிரியர் மற்றும் இசையமைப்பாளர்.தொல்காப்பியத்தையும், பத்துப்பாட்டையும் செம்மொழி நிறுவனத்திற்காக முற்றோதல் வகையில் ஆவணப்படுத்தியவர்.தேசியகல்வி, ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் , (NCERT)   தேசிய சேர்ந்திசைப் பயிற்றுனராகப் பணி புரிந்தவர். இந்தோளப் பண் பாடுவதில் தேர்ந்தவர். தமிழின் முதல்  ‘இசைத் தமிழ்க் கலைச் சொல் அகராதி’யின் தொகுப்பு ஆசிரியர்.

பிறப்பு,கல்வி

அரிமளம் சு.பத்மநாபன் அவர்கள் புதுக்கோட்டையை அடுத்த அரிமளம் என்ற ஊரில்   ஜூன் 14.1951  அன்று  இசைக்கலைஞர் அரிமளம் சுப்பிரமணியம் (புகழ்பெற்ற அரிமளம் சகோதரர்களில் மூத்தவர்), மங்களம் அம்மாள் ஆகியோரின் மகனாகப் பிறந்தவர். அரிமளத்தில் உயர்நிலைக் கல்வியும், தந்தையாரிடம் முறைப்படி மரபிசையும் கற்று ஆங்கில இலக்கியயத்திலும் கல்வியியலிலும் முதுகலை பயின்றார். தவத்திரு சங்கரதாஸ் சுவாமி களின் நாடகங்களில் இசைக் கூறுகள்” என்னும் தலைப்பில்  தமிழ் மரபுவழி நாடக இசையில் ஆய்வு மேற்கொண்டு 1998ஆம் ஆண்டில் முனைவர் (Ph.D.) பட்டம் பெற்றார்