அரிமளம் சு.பத்மநாபன்

From Tamil Wiki
Revision as of 21:39, 5 March 2022 by Tamizhkalai (talk | contribs) (Created page with "alt=அரிமளம்.சு.பத்மநாபன்|thumb|நன்றி [http://muelangovan.blogspot.com/2013/04/blog-post_24.html http://muelangovan.blogspot.com] அரிமளம் சு.பத்மநாபன் தமிழிசைக் கலைஞர் , ஆராய்ச்சியாளர், இசையாசிரியர் மற்றும் இசையமைப்பாளர்.தொல்க...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

அரிமளம் சு.பத்மநாபன் தமிழிசைக் கலைஞர் , ஆராய்ச்சியாளர், இசையாசிரியர் மற்றும் இசையமைப்பாளர்.தொல்காப்பியத்தையும், பத்துப்பாட்டையும் செம்மொழி நிறுவனத்திற்காக முற்றோதல் வகையில் ஆவணப்படுத்தியவர்.தேசியகல்வி, ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் , (NCERT)   தேசிய சேர்ந்திசைப் பயிற்றுனராகப் பணி புரிந்தவர். இந்தோளப் பண் பாடுவதில் தேர்ந்தவர். தமிழின் முதல்  ‘இசைத் தமிழ்க் கலைச் சொல் அகராதி’யின் தொகுப்பு ஆசிரியர்.