அமெரிக்க இலங்கை மிஷன்

From Tamil Wiki
Revision as of 20:09, 3 March 2022 by Cyril.alex (talk | contribs) (Created page with "அமெரிக்க இலங்கை மிஷன் (1813-1916) அமெரிக்க மறுமலர்ச்சி கிறீத்துவர்களால் இலங்க்கையில் துவங்கி நடத்தப்பட்ட மதபோதக அமைப்பாகும். முக்கியமாக யாழ்ப்பாணத்தில் நவீன அடிப்படைக் கல்வியும்...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

அமெரிக்க இலங்கை மிஷன் (1813-1916) அமெரிக்க மறுமலர்ச்சி கிறீத்துவர்களால் இலங்க்கையில் துவங்கி நடத்தப்பட்ட மதபோதக அமைப்பாகும். முக்கியமாக யாழ்ப்பாணத்தில் நவீன அடிப்படைக் கல்வியும், இரண்டம் நிலைக் கல்வியும் வழங்கிய முன்னோடிகள். ஆங்கிலக் கல்வி மட்டுமல்லாமல் தமிழிலும் கல்வி கற்பித்தனர். தமிழில் பல புத்தகங்களை மொழிபெயர்த்தும், புதிதாய் இயற்றியும் வெளியிட்டுள்ளனர். பொதுக்கல்விச் சாலைகள், மருத்துவக் கல்விச்சாலைகள், மருத்துவ மனைகள் மற்றும் குருமடங்களை நிறுவி மக்கள் பணி செய்தனர்.

அவர்கள் நிறுவிய வட்டுக்கோட்டை குருமடம் ஒரு பல்கலையைப் போன்ற அமைப்பு என்பதால் ஆசியாவிலேயே முன்னோடி நிறுவனம் என்று கருதப்படுகிறது.

துவக்கம்

யாழ்ப்பாணத்தில் 1540களில் போர்ச்சுகீசியர்களின் ஆதரவுடன் கத்தோலிக்க மதபோதகர்கள் வந்து மதம் பரப்ப ஆரம்பித்தனர். 150 வருடங்களுக்குப் பின் 1658ல் டச்சுக்காரர்கள் (ஒல்லாந்தர்கள்) துறைமுகத்தைக் கைப்பற்றினர். இதன்மூலம் டச்சு சீர்திருத்த சபை அங்கு பரவியது.

- காலம், ஆளுமைகள்

- கல்விப்பணி

- பெண்கல்வி

-தலித் கல்வி

- தமிழ்ப்பணி (மொழி பெயர்ப்புகள், நூல்கள், அச்சகம்)

-சுகாதாரம் (மருத்துவமனைகள் .. காலரா)

- தொய்வு, முடிவு


அமெரிக்க இலங்கை மிஷன் சரித்திரம் - சி. டி. வேலுப்பிள்ளை

அமெரிக்க இலங்கை மிஷன் - சுருக்கப்பட்ட வரலாறு