being created

டி.பி. ராய் சௌத்ரி

From Tamil Wiki
நன்றி: விக்கிபீடியா
டி.பி. ராய் சௌத்ரி, 1948
ராஸ லீலா - ஓவியம்
கியாரா மூர்த்தி சிற்பம்- புது தில்லி (நன்றி: மிண்ட் இதழ், பிரியங்கா பராஷர்)
Water carriers (Medium: Gouache and oil on paper)
Martryrs memorial in Patna (Thanks: hashamtoday.blogspot.com)
Victims of hunger, Government Museum Chennai
God of destruction sculpture, Trivandrum Museum
உழைப்பாளர் சிலை, சென்னை மெரினா கடற்கரை (நன்றி: விக்கிபீடியா)
காந்தி சிலை, சென்னை மெரினா கடற்கரை (நன்றி: விக்கிபீடியா)
DP Roy Chowdhry Art 11.jpg
Waterfall, Medium: Oil painting
Sculpture of Travancore king Chithira Thirunal Maharaja at Pattom Thanupilla Park, Thiruvananthapuram

தேவி பிரசாத் ராய் சௌத்ரி (1899-1975) இந்தியாவின் நவீன சிற்பி மற்றும் ஓவியர். வங்காளத்தைச் சேர்ந்தவர். தமிழ்நாட்டின் பொது அடையாளங்களில் ஒன்றான சென்னை மெரினா கடற்கரையில் இருக்கும் உழைப்பாளர் சிலையை வடிவமைத்தவர். மெட்ராஸ் கலை மற்றும் கைவினைப் பள்ளியின்(School of Arts and Crafts, Madras) முதல் இந்திய முதல்வராக பணியாற்றி தென் இந்தியாவில் தமிழ்நாட்டில் நவீன கலை போக்கிற்கான தொடக்கத்தை குறித்தவர். லலித் கலா அகாடமியின் முதல் தலைவராகவும் செயல்பட்டார். இந்தியாவின் பல இடங்களில் ராய் சௌத்ரி வடித்த சிற்பங்கள் உள்ளன. பத்மபூஷண் விருது பெற்றவர்.

பிறப்பு, கல்வி

ராய் சௌத்ரி ஜூலை 14, 1899-ல் அன்றைய பிரிட்டிஷ் இந்தியாவின் பிரிவினைக்கு முன்பிருந்த வங்கத்தின் ரங்பூரில் உள்ள தாஜ்ஹட் எனும் இடத்தில் பிறந்தார். முரஹஜாவை சேர்ந்த நிலப்பிரபுத்துவ குடும்பத்தில் ராஜா கேசபேஷ்வர் ராயின் வழிவந்தவர் ராய் சௌத்ரி. அப்பா பெயர் உமா பிரசாத் ராய் சௌத்ரி. ராய் சௌத்ரியின் தாத்தா ஹரிபிரசாத் ராய் சௌத்ரி சமஸ்கிருதம் மற்றும் அரபி மொழி அறிஞராக இருந்தார். கௌரிபூரின் ராஜாவும் லக்ஷ்மிபூரின் ஜமீன்தார்களும் திருமணத்தின் மூலம் ராய் சௌத்ரியின் உறவினர்கள் ஆனார்கள்.

கல்கத்தாவில் கேலட் சந்திரா, மித்ரா ஆகிய கல்வி நிறுவனங்களில் பயின்றார் ராய் சௌத்ரி. படிப்பில் ராய் சௌத்ரி ஒரு முன்மாதிரி மாணவனாக இருக்கவில்லை. இளம் வயதிலேயே கலையில் ஈடுபாடு இருந்ததால் அவரது தந்தை ராய் சௌத்ரியை ரவீந்திரநாத் தாகூரின் மருமகனும் இந்திய நவீன கலையாளுமையும் ஆன அபனேந்திரநாத் தாகூரிடம் ஓவியம் கற்க அனுப்பினார். தாகூர் குடும்பத்திற்கு தூரத்து உறவினரான ராய் சௌத்ரி தன் இருபதாவது வயதில் அபனீந்திரநாத் தாகூரின் மாணவரானார். தாகூர்களின் புகழ்பெற்ற ஜொராசங்கோ இல்லத்தில் அபனேந்திரநாத் தாகூரின் வழிகாட்டுதலுடன் ஓவியத்தின் அடிப்படைகளை, வங்காள பள்ளியின் கழுவும் முறையிலான ஓவிய நுட்பங்களை(wash technique of bengal school) கற்றுக் கொண்டார் ராய் சௌத்ரி. அபனேந்திரநாத் தாகூர் வங்காளத்தின் பட்டசித்ரா ஓவியங்களை நகலெடுக்க ஆலோசனை வழங்கிய போது அவருடன் முரண்பட்டார். அப்போது தான் கற்றுக் கொண்டிருந்த இந்தியன் சொசைட்டி ஆஃப் ஓரியண்டல் ஆர்ட்டை(Indian Society of Oriental Art) விட்டு வெளியேறி அபனீந்திரநாத் தாகூரின் கலை வழிகாட்டுதலை விட்டு விலகினார் ராய் சௌத்ரி. அடுத்த மூன்று வருடங்கள் அபனேந்திரநாத் தாகூர் முன்வைத்த இந்திய மரபு கலைக்கு முற்றிலும் மாறான மேற்கத்திய முறையிலான நேர் காட்சிகள்(life drawing), உருவப்படங்கள்(portrait drawing) வரைவதை சிக்னர் போயஸ் என்ற இத்தாலிய ஓவியரிடம் கற்றார். வாழ்நாள் முழுவதும் ராய் சௌத்ரி  படைத்த யதார்த்தமான மனித உருவங்களுக்கு போயஸிடம் பெற்ற பயிற்சியே துவக்கமாக இருந்தது. இதற்கிடையில் வங்காள பள்ளிக்கு அன்றிருந்த செல்வாக்கை உணர்ந்த ராய் சௌத்ரி மறுபடியும் அபனேந்திரநாத் தாகூரிடம் இணைந்தார். ராய் சௌத்ரியின் சமீபத்திய ஓவியங்களை பார்த்த பிறகே திரும்பி இணைய அனுமதி வழங்கிய அபனேந்திரநாத் தாகூர் இந்த முறை ராய் சௌத்ரி செயல்பட தேவையான சுதந்திரத்தை வழங்கினார். அபனேந்திரநாத் தாகூரின் அணுக்கமான மாணவனாக மாறிய ராய் சௌத்ரி இந்தியன் சொசைட்டி ஆப் ஓரியண்டல் ஆர்ட்டில் பயிலப்படும் கலை பாணியை விட மேற்கத்திய நுட்பங்களே சிறந்தது என்ற எண்ணம் கொண்டிருந்ததால் மீண்டும் அபனேந்திரநாத் தாகூருடன் விலகல் உருவானது. ஆனாலும் அவருடனான உறவு முழுவதுமாக துண்டிக்கப்படவில்லை. இந்தியன் சொசைட்டி ஆப் ஓரியண்டல் ஆர்ட்டின் கலை வகுப்புகளில் கற்பிப்பதில் உதவுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதால் மேற்கத்திய ஓவிய முறைகளை கற்பித்தார் ராய் சௌத்ரி.

அபனேந்திரநாத் தாகூரின் சிற்பத்தை வடிப்பதில் ராய் சௌத்ரி ஈடுபட்டிருந்த போது கல்கத்தாவில் அன்று புகழ்பெற்ற சிற்பிகளில் ஒருவரான ஹிரோண்மோய் ராய் சௌத்ரியின் வழிகாட்டுதலை பெறுமாறு அவருக்கு அறிவுறுத்தினார் அபனேந்திரநாத் தாகூர். அதன்படி சிற்பத்தை ஹிரோண்மோய் ராய் சௌத்ரியிடமும் பிறகு இத்தாலியிலும் பயின்றார். இந்தியா திரும்பியவர் அடுத்தகட்ட படிப்பை பெங்கால் கலைப் பள்ளியில் பூர்த்தி செய்தார். இந்தியன் சொசைட்டி ஆப் ஓரியண்டல் ஆர்ட்டில் (Indian Society of Oriental Art) சிறிது காலம் பயிற்றுனராக இருந்தார். ராய் சௌத்ரியின் ஓவியங்கள் ராமானந்த சட்டர்ஜி நடத்திய தி மோடர்ன் ரிவ்யூ, பிரபாசி ஆகிய இதழ்களிலும் தி ஸ்டுடியோ (the Studio, London), தி ஸ்டுடியோ இன்டர்நேஷனல் (the Studio International, USA) போன்ற இதழ்களிலும் பிரசுரமானது.


Like many others, Chowdhury was seized with the desire of overseas training at the Royal Academy in London. This decision was met with firm opposition by his aristocratic kinsmen. Any financial backing for such a cause is denied. Chowdhury side stepped all those, gave up a comfortable life and willingly opted for creative struggle.

He roamed the streets of Calcutta and suddenly felt friendless and mean. His

To get a job, even then was no easy feat. Chowdhury managed to obtain the post of an assistant to a scene painter. It involved the humble task of grinding colours. The chief painter was not well versed in the finer aspects of painting and hence presented faulty works with tremendous conviction. The teacher inChowdhury surfaced to effect the necessary correctices. The studio was soon buzzing with the talk of the talents and accomplishments of the new 'colour grinder'.

When the chief came to know, he was genuinely appreciative at first. He even raised Chowdhury's pay substantially. However, soon thereafter, his self-preservative instinct necked Chowdhury's out of his studio.

Chowdhury was agin to be found on the streets of Calcutta in search of a job. He took up colouring monochrome steel engravings, his daily wages totalling up to a pathetic 'eight annas'. And this meagre sum was earned only after street hawking the framed pictures that were tied to his back. Ironically, he would pass by the very streets where he once lived and where his aristocratic family still lived.

At a point, Chowdhury was tired beyond himself In sheer desperation, he sought the help of Sir Ashutosh Mukkerjee, a noted personality in Bengal. He pleased with him to find a job. Though Chowdhury tried to conceal gis aristocratic background, Ashutosh Mukherjee shrewly identified him. The Mitra Institution was to employ him. A post of drawing master was specially created and he was paid Rs. 40 a month. As a token of gratitude, Chowdhury would later execute a 3.5metre statue of Sir Ashutosh Mukherjee.

Financially The worst was behind him. The future was full of creative promise.

The press began to laud his youthful efforts. He won high praise from stalwarts like Stella Kramrisch, Dr. Kalidas Nah, Mr. Percy Brown and O.C. Gongoly. He was bestowed with academic recognition. He wrested many prestigious awards. His studio was frequented by people who mattered. His portraits included those of Abanindranath Tagore, Mr and Mrs Percy Brown and J.C. Bose. Soon after he migrated to South India to eventually become the head of the art school at Madras.

'Ballabpura Math', Matal and Dustbin testify to his skill for uncanny narration, satire and imagination. He was even applauded by Sjt. Sajanikanta Das, the merciless Bengali critic. His reputation as a writer must have been considerable judging from his continous contributions to journals such as Prabasi, Bharatvarsha and Sanibarer Chithi.

He did elaborate on art, at various fuctions and through contributions to English journals like Modern Review, Calcutta, Studio, London, Studio International, U.S.A. His delibrations are interspersed where needed in the course of this study.

He was interested in music. His music reflexted shades of the famous Hindustani vocalist Fariyaz Khan's style of singing. He incited his students who had talents in singing to his house to listen to them.

He amused himself with his flute, while he cast spells on others with it.

He was also a gourmand and gourmet, a furniture designer, a gardener with special interest in Bonsai. He was truly the 'Renaissance man's in India.

தனி வாழ்க்கை

ராய் சௌத்ரியின் மனைவியின் பெயர் சாருலதா ராய் சௌத்ரி(டோலி). மகன் பாஸ்கர் ராய் சௌத்ரி 1930 பிப்ரவரி மாதம் 11 அன்று பிறந்தார். பாஸ்கர் ஒரு புகழ்பெற்ற நடனக் கலைஞராகவும், நடிகர், ஓவியராகவும் விளங்கினார். 1955-ல் நியூயார்கில் குடிபெயர்ந்த பாஸ்கர் அங்கே 'பாஸ்கர் டான்ஸஸ் ஆப் இந்தியா'(Bhaskar Dances of India) என்ற நாட்டிய நிறுவனத்தை நடத்தினார். ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இஸ்மாயில் மெர்ச்சென்ட் இயக்கிய 'தி க்ரியேஷன் ஆப் உமன்'(The Creation of Woman) என்ற நாட்டிய குறும்படத்தில் நடன அமைப்பாளராகவும் நடிகராகவும் பங்காற்றினார் பாஸ்கர். ஐ ட்ரிங்க் யுவர் பிளட் (I Drink Your Blood) என்ற ஆங்கில படத்திலும், த்ரிசந்தியா, ஹர், குருசரண் சிங் இயக்கிய 'தி எபிடாப்'(The Epitaph), சத்தியஜித்ரே இயக்கிய 'பிரதிதுவந்தி' போன்ற இந்திய படங்களிலும் பாஸ்கர் நடித்துள்ளார்.

மெட்ராஸ் கலைப் பள்ளியின் முதல்வர்

மெட்ராஸ் ஓவியப் பள்ளியின் முதல் இந்திய கண்காணிப்பாளராக இருந்த ராவ் பகதூர் என்.ஆர். பாலகிருஷ்ணன் முதலியாரின் ஓய்விற்குப் பிறகு 1930 ஜூன் மாதம் ராய் சௌத்ரி மெட்ராஸ் கலைப் பள்ளியின் முதல் இந்திய முதல்வராக பதவியேற்றார். ராய் சௌத்ரி ஓவியப்பள்ளியின் முதல்வராக பதவியேற்ற பிறகு மேற்கத்திய முறையிலான பாட திட்டங்களை அறிமுகப்படுத்தினார். தானும் இக்காலத்தில் பல குறிப்பிடத்தகுந்த படைப்புகளை செய்தார். கல்லூரியிலும் வீட்டிலும் ஆக ராய் சௌத்ரிக்கு இரு கலைதொழிற்கூடங்கள்(studio) இருந்தன.

ராய் சௌத்ரி ஒரு மல்யுத்த வீரரும் கூட. உடற்பயிற்சிகளில் ஆர்வம் உள்ளவராக இருந்தார். மாலை நேரங்களில் கல்லூரி வளாகத்திலேயே மாணவர்களுடன் மல்யுத்த பயிற்சியில் ஈடுபட்டார். புல்லாங்குழல் வாசிப்பு, இலக்கியம், எழுத்து, துப்பாக்கி சுடுதல் போன்றவற்றிலும் ஆர்வம் உண்டு.

1958-ல் கல்லூரி பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.

தமிழ்நாட்டில் உள்ள ராய் சௌத்ரியின் படைப்புகள்

உழைப்பாளர் சிலை(Labour statue)

உழைப்பாளர் சிலை மெரினா கடற்கரையின் அண்ணா சதுக்கம் பகுதியில் சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு எதிரில் அமைந்துள்ளது. சுமார் 10 அடி அகலமும் 8 அடி உயரமும் கொண்டது. அன்றைய தமிழக முதல்வரான காமராஜர் முன்னெடுப்பில் மெரினா கடற்கரையை அழகுபடுத்துவதன் பகுதியாக இச்சிலை உருவாக்கப்பட்டது. 1923-ஆம் ஆண்டு மே மாதம் சென்னை மெரினா கடற்கரையில் சிங்காரவேலர் தலைமையில் தொழிலாளர்கள் நடத்திய மே தின போராட்டம் நடந்த இடத்திற்கு அருகில் இச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. 1959-ஆம் ஆண்டு இந்திய குடியரசு தினமான ஜனவரி 26-ஆம் தேதி அப்போதைய ஆளுநராக இருந்த விஷ்ணுராம் மேதியால் உழைப்பாளர் சிலை திறந்து வைக்கப்பட்டது.

உழைப்பாளர் சிலை வெண்கலத்தால் செய்யப்பட்டது. கோவணத் துண்டை கட்டிக்கொண்டு கட்டுக்கோப்பான உடல் கொண்ட நான்கு உழைப்பாளர்கள் சேர்ந்து ஒரு பாறாங்கல்லை தள்ளும் முயற்சியில் உள்ளதாக இச்சிலை வடிக்கப்பட்டுள்ளது. உழைப்பாளர்களின் ஒற்றுமை, விடா முயற்சி, நம்பிக்கை ஆகிய கருதுகோள்களின் குறியீடாக இச்சிற்பம் உள்ளது. சென்னை கலை மற்றும் கைவினை பள்ளியில் இருந்த தனது கலைதொழிற்கூடத்தில் வைத்து இச்சிலையை ராய் சௌத்ரி உருவாக்கினார். உழைப்பாளர் சிலையின் நான்கு உருவங்களில் 2-வது மற்றும் 4-வது உருவங்களுக்கு கலைப்பள்ளியின் அருகில் காய்கறி வியாபாரம் செய்து கொண்டிருந்தவரும் பிறகு கலைப்பள்ளியின் இரவு காவலாளியாகவும் ஆன ஏ பி சீனிவாசன் என்பவரும் 1-வது மற்றும் 3-வது உருவங்களுக்கு கலைப் பள்ளியின் மாணவராக இருந்த ராமுவும் உருவ மாதிரிகளாக(model) இருந்துள்ளனர். இன்று இச்சிலை உழைப்பாளர்களின் சின்னமாகவும் சென்னை மற்றும் தமிழ்நாட்டின் முக்கிய பொது அடையாளங்களில் ஒன்றாகவும் உள்ளது. ஈவோ ஜீமாவில் (Iwo Jima) ஆறு அமெரிக்க கப்பற்படை வீரர்கள் கொடிநாட்டும் புகழ்பெற்ற புகைப்படத்தின் சாயல் இச்சிற்பத்தொகுதிக்கு உண்டு. உழைப்பாளர் சிலையின் இன்னொரு பதிப்பு டெல்லி தேசிய நவீன கலைக்கூட வளாகத்தில் உள்ளது.

காந்தி சிற்பம்

சென்னை மெரினா கடற்கரையில் இருக்கும் ராய் சௌத்திரியின் மற்றுமொரு படைப்பு காந்தியின் சிற்பம். அன்றைய காமராஜர் அரசு இச்சிற்பவேலையை ராய் சௌத்ரியிடம் ஒப்படைத்தது. தன் மேலாடை ஒரு முட்புதரில் சிக்குவதையும் பொருட்படுத்தாமல் காந்தி தன் ஊன்றுகோலுடன் நடந்து போகும் விதத்தில் அமைந்துள்ளது இச்சிற்பம். தடைகளை பொருட்படுத்தாமல் தன் இலக்கு நோக்கி பயணிக்கும் காந்தியின் இயல்பு இச்சிற்பத்தில் பதிவாகியுள்ளது.13 அடி உயரம் கொண்ட இச்சிலை வெண்கலத்தால் உருவாக்கப்பட்டு 12 அடி உயர பீடத்தின் மீது நிற்கிறது. அன்று இந்திய பிரதமராக இருந்த ஜவகர்லால் நேரு 1959-ஆம் ஆண்டு ஏப்ரல் 14 அன்று இச்சிலையை திறந்து வைத்தார். காந்தி தண்டி பாதயாத்திரை சென்றதன் நினைவாக ராய் சௌத்ரியால் உருவாக்கப்பட்டு இப்போது டெல்லியில் உள்ள புகழ்பெற்ற சிற்பத்தொகுதியில் இருக்கும் காந்தி மெரினாவில் ராய் சௌத்ரி வடித்த காந்தி சிலையின் உருவ ஒற்றுமையை கொண்டுள்ளது.

வறுமை (Victims of Hunger)

வறுமையின் துயரை வெளிப்படுத்தும் இச்சிற்பம் சென்னை அரசு அருங்காட்சியகத்தில் உள்ளது. வெண்கலத்தால் செய்யப்பட்ட இச்சிற்பம் 78 செ.மீ அகலமும் 36 செ.மீ உயரமும் உடையது. பசிமயக்கத்தில் ஒரு குழந்தை உடல் சோர்ந்து கவிழ்ந்து கிடக்க அருகில் அக்குழந்தையின் தாய் கையறு நிலையில் தன் ஆடை விலகி விட்டதை உணரும் வலிமையும் இல்லாமல் வறுமையில் நலிந்த உடலுடன் இருக்கிறாள். அப்போதும் தாயின் ஒரு கை குழந்தையை அணைத்துள்ளதாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

இதர படைப்புகள்

சென்னை அரசு அருங்காட்சியகத்தில் இருக்கும் மார்பளவு காந்தி, குளிர்காலம்(When winter comes) சிலைகள், சில ஓவியங்கள், மெட்ராஸ் கவர்னராக இருந்த எர்ஸ்கினால் திறந்து வைக்கப்பட்டு இப்போது சென்னை அடையாறு பத்மநாபசுவாமி கோவிலின் வளாகத்தில் இருக்கும் திருவிதாங்கூர் கடைசி மன்னர் சித்திரை திருநாளின் சிற்பம், சென்னை ஜோர்ஜ் டவுனில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் இருக்கும் ராஜாஅண்ணாமலையார் சிலை, சென்னை தியாசபிக்கல் சொசைட்டியில் இருக்கும் அன்னிபெசன்ட், லீட்பீட்டர் சிலைகள் ஆகியவை ராய் சௌத்ரியால் உருவாக்கப்பட்ட படைப்புகள் ஆகும். மெட்ராஸ் தலைமை நீதிபதியாக இருந்த குமாரசுவாமி சாஸ்திரி, மெட்ராஸ் கவர்னர்கள் எர்ஸ்கைன், ஜார்ஜ் ஸ்டான்லி, மெட்ராஸ் அரசின் செயலாளராக இருந்த ஹச். ஜி. ஸ்டோக்ஸ் மற்றும் அவரது மனைவி ஏ. தம்போய் போன்றவர்களின் உருவ சிலைகளை ராய் சௌத்ரி வடிவமைத்துள்ளார்.

இந்தியாவின் மற்ற இடங்களில் உள்ள ராய் சௌத்ரியின் படைப்புகள்

தியாகிகள் நினைவுச் சின்னம் (Martyrs Memorial)

காந்தி நடத்திய 'வெள்ளையர்களே வெளியேறு' இயக்க போராட்டத்தின் பகுதியாக நடந்த மாணவர் போராட்டத்தில் பாட்னா தலைமைச் செயலகத்தில் மூவர்ண கொடியை ஏற்ற முயன்ற போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் 7 மாணவர்கள் உயிரிழந்தனர். 14 பேர் காயமடைந்தனர். மாணவர் போராட்டத்தில் கலந்து கொண்டு உயிர் துறந்த மாணவர்களை நினைவு கூரும் வகையில் பீகார் தலைநகர் பாட்னாவில் தலைமைச் செயலகத்தின் வெளியே அமைக்கப்பட்டது ராய் சௌத்ரி வடித்த தியாகிகள் நினைவு சின்னம்(சாகித் ஸ்மாரக்). சிற்பத்தில் சித்தரிக்கப்பட்டுள்ள ஏழு உருவங்களில் முன்னால் செல்பவர் இலக்கை சுட்டி காட்டிக் கொண்டு கொடியுடன் வழிநடத்திக்கொண்டே முன்னேறி செல்ல அவருக்கு பின்னால் தடுமாறி விழப்போகும் ஒருவரை இன்னொருவர் பிடித்துக் கொண்டு பயணத்தில் இணைக்கிறார். அடுத்து வரும் இருவரும் இலக்கை நோக்கி கை காட்டிக் கொண்டும் கையை வீசிக்கொண்டும் தொய்வில்லாமல் கம்பீரமாக நடக்கிறார்கள். அதற்கு பின்னால் ஒருவர் சாய்ந்து விழப்போகிறார். கடைசியில் வருபவர் தான் விழுந்து விட்டாலும் எழ முயன்றுகொண்டோ இழைந்து கொண்டோ முடிந்தவரை போராட்டத்தில் பங்கேற்க முயற்சிக்கிறார். ஒரு போராட்டத்திலோ முயற்சியிலோ பங்கு பெறுபவர்களில் சில பேருக்கு உண்டாகும் தொய்வு, இலக்கை நோக்கிச் சென்றாலும் அதை அடையமுடியாமல் சிலருக்கு உண்டாகும் தளர்ச்சி, போராட்டத்தில் இறுதி வரை தொய்வில்லாமல் செல்பவர்கள், இடையில் தடுமாறுபவர்களை உற்சாகப்படுத்தி மீண்டும் போராட்டத்தில் பங்கு பெற தூண்டுபவர்கள், ஒரு வேளை இடையில் விழுந்து விட்டாலும் முன்னால் வீறுடன் செல்பவர்களை பார்த்து தானும் முடிந்தவரை அப்பயணத்தில் பங்கு பெற முயல்பவர், இவர்களை எல்லாம் வழிநடத்தி தூண்டுகோலாக இருக்கும் தலைமை தாங்குபவர் என்று இச்சிற்பம் ஒரு பெரும் லட்சியத்தை நோக்கி கூட்டாக பயணிப்பவர்களின் இயல்புகளை பதிவு செய்துள்ளது. தியாகிகள் நினைவகத்தில் போராட்டத்தில் உயிர் துறந்த ஏழு மாணவர்களின் பெயர்களும் பொறிக்கப்பட்டுள்ளது.

தியாகிகள் நினைவு சின்னம் பீகார் முதல்வராக இருந்த ஶ்ரீ கிருஷ்ண சின்ஹாவின் மேற்பார்வையில் அமைக்கப்பட்டது. பீகார் ஆளுநராக இருந்த ஜெய்ராம் தாஸ் தௌலத்ராம் அடிக்கல் நாட்டினார். இந்திய ஜனாதிபதி டாக்டர் ராஜேந்திர பிரசாத் 24 அக்டோபர் 1956 அன்று திறந்து வைத்தார்.

தண்டி யாத்திரை சிற்பம்(gyarah murti statue)

இந்திய சுதந்திர போராட்டத்தின் பகுதியாக 1930-ல் காந்தி தலைமையில் நடந்த தண்டி பாதயாத்திரையை நினைவு கூறும் விதமாக இச்சிற்பம் படைக்கப்பட்டது. இந்திய அரசு இச்சிற்பம் செய்யும் பொறுப்பை ராய் சௌத்ரியிடம் கொடுத்தது. 24 மீட்டர் நீளமும் 3 மீட்டர் உயரமும் கொண்ட இச்சிற்பம் வெண்கலத்தால் செய்யப்பட்டது. ஒரு முட்புதரில் தன் மேலாடை சிக்குவதையும் பொருட்படுத்தாமல் காந்தி தன் ஊன்றுகோலுடன் சுறுசுறுப்பாக முன்னால் நடைபோட பத்து நபர்கள் பின்தொடர்வதாக வடிக்கப்பட்டுள்ளது. காந்தியுடன் சேர்த்து பதினொன்று உருவங்கள் உள்ளதால் இப்படைப்பு க்யாரா மூர்த்தி(க்யாரா- பதினொன்று) என்று அழைக்கப்படுகிறது. காந்தியுடன் நடக்கும் உருவங்களில் மாதங்கினி ஹாஸ்ரா, சரோஜினி நாயுடு, பிரம்மபந்தப் உபாத்யா மற்றும் அப்பாஸ் தியாப்ஜி ஆகியோர் சித்தரிக்கப்பட்டுள்ளனர் என்று நம்பப்படுகிறது. ஆனால் அப்படி குறிப்பிட்ட தலைவர்களை காட்டாமல் இந்திய சமூகத்தின் எல்லா தரப்பு மக்களையும் சித்தரிக்கும் விதமாகவே இச்சிற்பம் உருவாக்கப்பட்டுள்ளது என்ற கருத்தும் உள்ளது. காந்தி முன்னால் செல்ல இரண்டு பெண்கள், ஒரு முஸ்லிம் பெரியவரை கைதாங்கலாக கூட்டி வரும் இந்து இளைஞன், ஒரு கிறிஸ்தவ பாதிரியார், ஒரு சீக்கியர் என்று எல்லா தரப்பு மக்களும் காந்தியை பின்தொடர அனைத்து பிரிவினரையும் ஒன்றிணைக்கும் காந்தியத்தியத்தின் குறியீடாக தண்டி யாத்திரை சிற்பம் உள்ளது. இச்சிற்பம் டில்லியில் சர்தார் படேல் மார்க்கில் உள்ளது.

இதர படைப்புகள்

கொல்கட்டா சித்தரஞ்சன் அவென்யூவில் இருக்கும்(சென்ட்ரல் அவென்யூ) அஷுதோஷ் முகர்ஜி சிற்பம், ஆலய நுழைவு உரிமைக்கு அனுமதி அளித்ததை நினைவு கூரும் வகையில் திருவனந்தபுரம் பட்டம் தாணுபிள்ளை பூங்காவில் அமைக்கப்பட்ட சித்திரை திருநாள் பாலராம வர்மாவின் சிற்பம், திருவனந்தபுரம் அருங்காட்சியகத்தில் இருக்கும் சிவன்(God of destruction)சிற்பம் மற்றும் லம்பாடி நாடோடிகளின்(Lambady Gypsies) ஓவியம் ஆகியவை ராய் சௌத்ரியின் படைப்புகள் ஆகும். டெல்லியில் உள்ள தேசிய நவீன கலைக்கூடம்(National Gallery of Modern Art), ஹைதராபாத்தில் உள்ள சாலார் ஜங் அருங்காட்சியகம், பிர்லா அகாடமி(Birla Academy of Art & Culture, Calcutta), டெல்லி லலித் கலா அகாடமி போன்ற பல்வேறு இடங்களில் ராய் சௌத்ரியின் படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. சுவாமி விவேகானந்தர், மோதிலால் நேரு, சி. பி. ராமசாமி ஐயர், சுரேந்திரநாத் பானர்ஜி, அபனேந்திரநாத் தாகூர், சரோஜினி நாயுடு, ஹெச். எஸ். ஆல்காட், ராய் சௌத்ரியின் அப்பா உமாபிரசாத் ராய் சௌத்ரி போன்றவர்களின் சிலைகளையும் ராய் சௌத்ரி வடித்துள்ளார்.

ஓவியங்கள்

ராச லீலா(Ras Leela), க்காடி, சரத் பிரதிமா, மா, ஆன் இன்மேட் ஆப் ஹாரிம்(An inmate of Harem), ஏ ட்ராமாட்டிக் போஸ் ஆப் ஏ மேன் வித் ஏ லார்ஜ் க்ளாக் ஆன்ட் ஹேட்(A Dramatic Pose of a Man with a Large Cloak and Hat), ஜீபன் சந்தியா, தி ட்ரிபியூன்(The Tribune),தி ஹண்டர்(The Hunter) போன்றவை ராய் சௌத்ரியின் சில குறிப்பிடத்தக்க ஓவியங்கள் ஆகும். 1967-ல் கல்கி தீபாவளி மலரில் ராய் சௌத்ரியின் டெம்பிள் ஸ்டெப்ஸ்(Temple Steps) என்னும் வண்ணச் சித்திரம் வெளியானது. பாரதிதாசனின் பாண்டியன் பரிசு நூலுக்கு அட்டை படம் வரைந்து கொடுத்துள்ளார் ராய் சௌத்ரி.

இறப்பு

ராய் சௌத்ரி 1975-ல் தன் 76-வது வயதில் காலமானார்.

கலைத்துறையில் இடம், அழகியல்

ராய் சௌத்ரியின் முற்கால ஓவியங்களில் அவரது ஆசானான அபனேந்திரநாத் தாகூரின் தாக்கம் இருந்தது. ஜப்பானிய கழுவும் முறையிலான நீர் வண்ண ஓவிய முறை, சீன ஓவிய நுட்பங்கள், மொகலாய மற்றும் பஹாரி சிற்றோவிய மரபுகளை படைப்புகளில் இணைத்தது அபனேந்திரநாத் தாகூர் சார்ந்த பெங்கால் கலைப்பள்ளி. கண்ணில் பார்ப்பதை தத்ரூபமாக படைப்பாக்கும் ஐரோப்பிய யதார்த்த பாணியின் மீது ராய் சௌத்ரியின் ஆர்வம் திரும்பிய பிறகு யதார்த்த தன்மையும் அவரது படைப்புகளில் வெளிப்படத் துவங்கியது. ராய் சௌத்ரி நீர் வண்ணம்(water color), தைல வண்ணம் (oil), கவுச் (goauche), டெம்பரா(tempera), மை(ink) போன்ற ஊடகங்களால் ஓவியங்கள் வரைந்தார். மரபு சார்ந்தவை, கிராமம் மற்றும் இயற்கை காட்சிகள் அவரது ஓவியங்களின் பெரும்பாலான பேசுபொருளாக இருந்தன. பெங்கால் பள்ளி பாணியிலான படைப்புகளுக்கு ராய் சௌத்ரியின் ராச லீலா, முசாபிர், ஆன் இன்மேட் ஆப் ஹாரிம் (An inmate of Harem), நாட்டியக்காரி(Dancing woman), போன்ற படைப்புகள் உதாரணம். ராய் சௌத்ரியின் அப்ஸ்குயர் கார்னர்(Obscure corner), மலபார் கிராம காட்சி போன்ற ஓவியங்களில் யதார்த்த தன்மை வெளிப்பட்டாலும் ஐரோப்பிய யதார்த்தவாதத்தின் மீது ராய் சௌத்ரிக்கு இருக்கும் பற்று அவரது சிற்பங்களில் தான் முழுமையாக வெளிப்பட்டிருக்கும். டெல்லி தேசிய நவீன கலைக்கூடத்தில் (National gallery of modern art) இருக்கும் குளியலுக்குப்பிறகு(After Bath) போன்ற ராய் சௌத்ரியின் சில சிற்பங்கள் மட்டும் தான் இந்தியத் தன்மை கொண்டிருக்கிறது. ராய் சௌத்ரி உருவாக்கிய முக்கியமான சிற்பத் தொகுதிகள் உருவச்சிலைகள் அனைத்தும் ஐரோப்பிய யதார்த்தவாத(realistic) பாணியில் அமைந்தவை. ராய் சௌத்ரி சிற்பத்துறையில் ஐரோப்பிய சிற்பிகளை குறிப்பாக பிரஞ்சு சிற்பி ஒகஸ்ட் ரொடானை(Auguste Rodin) தன் ஆதர்சமாக கொண்டவர். சௌத்ரியின் முக்கிய பங்களிப்பும் சிற்பத்துறையில் தான் உள்ளன.

பொதுவெளி சிற்பங்களை யதார்த்த பாணி கலைநயத்துடன் குறியீட்டு தன்மையுடன் வடித்தவர் ராய் சௌத்ரி. இந்திய அளவில் ராய் சௌத்ரியின் சிறந்த சிற்பங்களான தண்டி யாத்திரை(க்யாரா மூர்த்தி) சிற்பம், பாட்னாவில் உள்ள தியாகிகள் நினைவுச் சின்னம் போன்றவை முக்கிய நினைவு சின்னங்களாக இருக்க மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலை, காந்தி சிலை தமிழ்நாட்டின் சென்னையின் அடையாளங்களாக உள்ளன. 1996-ல் காந்தியை மையமாகக் கொண்ட இந்தியா ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்ட போது 500 ரூபாய் நோட்டின் பின்புற வடிவமைப்பில் ராய் சௌத்ரி உருவாக்கிய தண்டி பாதையாத்திரை சிற்பத்தின் ஓவியம் இடம்பெற்றது. தமிழ்நாட்டில் உழைக்கும் மக்களுக்கான மாநாடுகள், போராட்டங்கள், இதழ்கள் தொடர்ந்து உழைப்பாளர் சிலையை தங்கள் அடையாளங்களில் ஒன்றாக கொண்டுள்ளது.

ராய் சௌத்ரி ஒரு மல்யுத்த வீரராகவும் உடற்பயிற்சிகள் மூலம் தன் உடம்பை கட்டுக்கோப்புடன் பேணி பெரிய தோற்றம் கொண்டவராவும் இருந்தார். அவரது சிற்பங்களில் உள்ள மனிதர்களும் உறுதியான உடல்களுடன் இருக்கிறார்கள். 'உழைப்பாளர் சிலை' போன்ற படைப்புகளுக்கு கட்டுக்கோப்பான உடல்களை கொண்டவர்களையே தன் உருவ மாதிரியாகவும்(Model) தேர்ந்தெடுத்திருக்கிறார். சென்னை அரசு கவின்கலை கல்லூரியின் விரிவுரையாளர் சிபி சக்ரவர்த்தி கூறுகையில்: "ராய் சௌத்ரி இயல்பில் ஒரு மல்யுத்த வீரராக இருந்ததனால் அவர் மனிதர்களின் உடல் அமைப்பை, தசையை, உடலின் இயக்க விசையை மிகவும் இரசனையுடன் சிற்பத்தில் கொண்டுவந்திருக்கிறார். அவரது சிற்பங்களில் உள்ள கால் தசை, நரம்புகள், முதுகு புடைப்பு ஆகியவற்றில் ஒரு விசை இருப்பதால் இயற்கையாகவே அவரது படைப்புகளில் எப்போதும் ஒரு வேகம் இருக்கும். மெரினா கடற்கரையில் இருக்கும் ராய் சௌத்ரியின் படைப்பான காந்தி சிற்பத்தை பார்த்தால் காந்தி இயல்பாக நடக்க அவரது ஆடை காற்றில் பறக்கும் விதத்தில் ஒரு விசையை காட்டியிருப்பார். டெல்லியில் உள்ள தண்டி பாதயாத்திரை சிற்பத்தில் உள்ள உருவங்கள் சராசரி மனிதர்களை விட உயரமாக இருக்கும். அச்சிற்பத்தில் காந்தியை தொடர்ந்து வருபவர்களில் ஒரு பெண் மயங்கிய நிலையில் நடந்து போவது போல் இருக்கும். மயக்க நிலையிலும் அப்பெண்மணி அப்போராட்டத்திற்காக எவ்வளவு வீரியத்துடன் நடந்து போகிறார் என்பதை உடல் அமைப்பில் நேர்த்தியாக காட்டியிருப்பார் ராய் சௌத்ரி. அதுவே ராய் சௌத்ரியின் சிறப்பம்சம்" என்றார். ராய் சௌத்ரியின் சிற்பங்கள் பலவற்றில் 'இம்பிரஷனிசம்'(Impressionism) பாணியில் மேற்பரப்பில் கையால்உருவாக்கிய அடையாளங்களுடன் பூசிமெழுகாமல் அப்படியே விடப்பட்டிருக்கும். உழைப்பாளர் சிலை, சிவன்(god of destruction), குளிர்காலம்(when winter comes) போன்ற சிற்பங்கள் இதற்கு உதாரணம். ராய் சௌத்ரிக்கு பிடித்தமான ஐரோப்பிய படைப்பாளிகளான ரொடான்(Rodin), போவதயெல்(Bourdelle) போன்றவர்களின் படைப்புகளில் இத்தன்மை உண்டு.

இந்திய கைவினை பொருட்களுக்கு பிரிட்டிஷாரிடம் இருந்த வரவேற்பை பூர்த்தி செய்வதற்கு துவங்கப்பட்ட மெட்ராஸ் கலை மற்றும் கைவினை பள்ளியில் ஏற்றுமதிக்கும் விற்பனைக்குமான கைவினை பொருள்களை தயாரிப்பது மற்றும் அது சார்ந்த பயிற்சிகளுக்கே முக்கியத்துவம் இருந்தது. நவீன கலை வெளிப்பாடுகளை இங்குள்ள கலைஞர்களுக்கு அறிமுகப்படுத்துவதற்கு, கலைஞனின் தனிப்பட்ட தேடலுக்கு ஊக்கம் அளிப்பதற்கு அப்பள்ளியின் பாடதிட்டங்களில் வாய்ப்பு ஏறத்தாழ இல்லாமல் இருந்தது. ராய் சௌத்ரி கலைப் பள்ளியின் முதல்வர் ஆனதும் மேற்கத்திய பாணியிலான கல்விசார் (academic) யதார்த்தவாத ஓவிய முறைகளை புதிய பாடத் திட்டங்களை கலை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தினார். மனிதர்களை, காட்சிகளை நேரில் பார்த்து வரைவது உள்ளிட்ட பயிற்சிகளை கொண்ட இப்பாடத்திட்டம் இப்போதும் சென்னை அரசு கவின் கலைக் கல்லூரி மாணவர்களின் அடிப்படையாக இருக்கிறது. ராய் சௌத்ரி மற்றும் அவரது மாணவர்கள் மூலம் தமிழ்நாட்டின் கலை ரசனையில் ஐரோப்பிய யதார்த்தவாதத்தின் பாதிப்பு உருவானது. ராய் சௌத்ரிக்கு அடுத்து மெட்ராஸ் கலை மற்றும் கைவினைப் பள்ளி முதல்வரான பணிக்கர் நவீனத்துவத்தை மெட்ராஸ் பள்ளியில் அறிமுகப்படுத்துவதற்கு ராய் சௌத்ரி அமைத்து கொடுத்த அடித்தளம் தொடக்கமானது. மெட்ராஸ் கலைப்பள்ளியில் மாணவர்கள் வரைவதற்கு தாளில் வரையப்பட்ட படத்தையே கரும்பலகையில் குத்தி வைத்து பார்த்து வரையும் நிலை இருந்தது என்றும் ராய் சௌத்ரி அதிகாரிகளுக்கு கடிதமெழுதி மாணவர்கள் பார்த்து வரைவதற்கு மனிதர்களை வடிவ மாதிரியாக(model) உட்கார ஏற்பாடு செய்து கொடுத்ததை ராய் சௌத்ரியின் மாணவரான சிற்பி தனபால் தன் சுயசரிதையில் பதிவு செய்துள்ளார்.

ராய் சௌத்ரி மெட்ராஸ் பள்ளியில் அறிமுகப்படுத்திய மேற்கத்திய கல்விசார்(academic) யதார்த்தவாத நுண்கலை பாடத்திட்ட முறை இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து மாணவர்களை ஈர்த்தது. பரிதோஷ் சென், கே சி எஸ் பணிக்கர், சிற்பி தனபால், கோபால் கோஷ், பிரதோஷ் சென், கோதண்டராமன், நிரோத் மஜும்தார், சுல்தான் அலி, பிரதோஷ் தாஸ் குப்தா, எல். முனுசாமி, சந்தானராஜ்,ராம் கோபால்,எஸ் ராஜன், கலாசாகரம் ராஜகோபால், சீனிவாசலு என்று பிற்காலத்தில் உருவாகி வந்த பல முக்கிய கலைஞர்கள் மெட்ராஸ் கலை மற்றும் கைவினைப் பள்ளியில் ராய் சௌத்ரியின் மாணவர்களாக இருந்தவர்கள்.

விவாதங்கள்

ராய் சௌத்ரி வெறும் கைவினை பொருட்களை உற்பத்தி செய்யும் இடம் என்ற நிலையிலிருந்து மெட்ராஸ் கலை மற்றும் கைவினை பள்ளியை மீட்டாலும் அவர் அதற்கான வழிமுறைகளை மேற்கின் கல்விசார் பயிற்சி முறைகளில்(academic) இருந்து மட்டுமே பெற்றுக் கொண்டார். இந்திய ஓவியசிற்ப மரபுகளை, நவீனத்துவத்தின் புதிய போக்குகளை தெரிந்து கொள்ள அப்பயிற்சி முறைகளில் இடம் இருக்கவில்லை. ராய் சௌத்ரிக்கு ஜேக்கப் எப்ஸ்டைன், ஹென்ரி மூர் போன்ற ஐரோப்பிய நவீன சிற்பிகள் ஏற்புக்கு உரியவர்களாக இருந்தாலும் புதிய பாணிகளை தன் படைப்புகளில் உட்படுத்தி வடிவச்சோதனை செய்து பார்ப்பதில் அவருக்கு விருப்பமிருக்கவில்லை. மாணவர்களுக்கும் அதையே அறிவுறுத்தினார். கலையின் குறிக்கோள் அழகியல் அனுபவத்தை அளிப்பதே ஒழிய அதன் வடிவம் ஒரு பொருட்டே அல்ல என்று ராய் சௌத்ரி தெரிவித்திருக்கிறார். ராய் சௌத்ரிக்கு கலை இயக்கத்தை வளர்த்தெடுப்பதிலும் ஈடுபாடு இருக்கவில்லை. கே.சி.எஸ் பணிக்கர், எஸ். தனபால் போன்ற ராய் சௌத்ரியின் முதன்மை மாணவர்கள் ராய் சௌத்ரி 19-ஆம் நூற்றாண்டு ஐரோப்பிய யதார்த்தவாத(realistic) கலைப் போக்குகளுடன் நின்று விட்டதாகவும் அவர் 20-ஆம் நூற்றாண்டின் நவீன கலைப் போக்குகளை கருத்தில் கொள்ளவோ உள்வாங்கவோ இல்லை என்று ராய் சௌத்ரி மீதான விமர்சனத்தை பதிவு செய்துள்ளனர். இந்தியாவின் மற்ற கலைப்பள்ளிகளுடன் ஒப்பிடும் போது மெட்ராஸ் நவீனத்தை நோக்கி வர தாமதம் ஆனதற்கு ராய் சௌத்ரிக்கு புதிய நவீன பாணிகளின் மீதிருந்த நம்பிக்கையின்மையே காரணமாக இருந்தது என்று ஏ.எஸ்.ராமன் கூறினார்.

1995 செப்டம்பர் மாதம் வெளியான கணையாழி இதழில் எழுத்தாளர் சிவகாமி உழைப்பாளர் சிலை பற்றியும், ராய் சௌத்ரி பற்றியும் விமர்சித்திருந்தார். உழைப்பாளர் சிலையில், ஒரு பெரிய பாறாங்கல்லை உழைப்பாளர்கள் நகர்த்தும் பாங்கில் நெம்புகோல் தத்துவத்துக்குக் குந்தகம் விளைந்துவிட்டதாக சிவகாமி கூறியிருந்தார். அதற்கு மறுப்பாக கலை ஆர்வலரும் எழுத்தாளருமான சி. மோகன் 1995 அக்டோபர் மாத கணையாழி இதழின் 'விவாத மேடை'யில் உழைப்பாளர் சிலையின் தனித்தன்மைகளை விளக்கியிருந்தார். 'ஓவியத் துறையைப் பற்றிய சிவகாமியின் புரிதலில் ஓவியக் கலைஞன் என்பவன் ஒரு டிராயிங் மாஸ்டர் அளவுக்குக் குறுகி இருக்கிறான். ராய் சௌத்ரி டிராயிங் மாஸ்டராக இல்லாமல் படைப்பாளியாக இருப்பதுதான் பிரச்சனையை ஏற்படுத்தியிருக்கிறது. கீழை மரபு, சுழற்சிக் கருத்தாக்கத்தையே (circular concept) வாழ்வு- காலம்- அழகியல் ஆகியவற்றின் அடிப்படைத் தத்துவமாகக் கொண்டிருக்கிறது. இது நேர்கோட்டுக் கருத்தாக்கத்தின் (linear concept) மொண்ணைத் தர்க்கத்துக்கு எதிரானது. ஒரு பாறாங்கல்லை நான்கு உழைப்பாளிகளை வைத்து உருட்டித் தள்ளி விடுவது என்ற நேர்கோட்டு மொண்ணைத் தீர்வல்ல விஷயம். கலை எப்போதுமே இத்தகைய மொண்ணையான தர்க்கத் தீர்வுகளில் உயிர் கொள்வதில்லை. யந்திரரீதியான துல்லியம் (mechanical accuracy) பற்றிய கவலையின்றி அடிப்டையான, ஆழமான, உள்ளுறைந்த உண்மையின் சுழற்சியாகவே கலை வெளிப்பாடும் விகாசமும் பெறுகிறது. அத்தகைய ஒரு படைப்புதான் உழைப்பாளர் சிலை' என்றார் சி. மோகன். 'பாறை பெயர்ந்து உருளும் பட்சத்தில் கூடவே ஒரு உழைப்பாளியும் உருண்டுவிடுவான்' என்ற சிவகாமியின் கூற்றுக்கு 'உழைப்பாளர்களின் முயற்சிகள் பாறையின் சுழல் அசைவில் சிறு நகர்த்துதலை நிகழ்த்தும் முனைப்பிலேயே வடிவம் பெற்றிருக்கின்றன. அந்த அசைவுக்குப் பின் உருவாகும் மறு அசைவுக்கான யத்தனிப்பில் வேறொருவர் தன்னை அபாயகரமான நிலையில் முன்வைக்கக் கூடும். ஒரு இயக்கத்தில் தன்னை அபாயகரமாக இருத்திக் கொள்வதன் தார்மீகத்தைச் சிவகாமி உணர்ந்திருக்கமாட்டார்' என்று சி. மோகன் பதிலளித்தார்.

விருதுகள்

  • 1937, Most excellent order of the British Empire
  • 1958, Awarded Padma Bhushan, Govt. of India
  • 1962, Fellow of the Lalit Kala Academy
  • 1968, awarded honorary D.Litt., Rabindra Bharati University, Calcutta

பிற பணிகள்

  • 1954-1960, லலித்கலா அகாடமியின் முதல் தலைவர்
  • 1955, டோக்கியோவில் நடந்த முதல் யுனெஸ்கோ கலை கருத்தரங்கிற்கு தலைமை ஏற்றார்
  • 1956, தலைமை பொறுப்பாளர், நிகில் பங்கியா சாகித்திய சம்மேளனம், சென்னை
  • 1956, தலைமை பொறுப்பு, அகில இந்திய வங்காள இலக்கிய மாநாடு

கண்காட்சிகள்

  • 1993, First solo show, Calcutta
  • 1989, Retrospective, Birla Academy of Art and Culture, Calcutta
  • 2003, Manifestations, organised by Delhi Art Gallery, World Trade Center, Mumbai and Delhi Art Gallery, New Delhi
  • 2004, Manifestations II, organised by Delhi Art Gallery, Jehangir Art Gallery, Mumbai and Delhi Art Gallery, New Delhi
  • 2005, Manifestations III, organised by Delhi Art Gallery, Nehru Center, Mumbai and Lalit Kala Akademi, New Delhi

நூல்கள்

  • The Two Great Indian Artists (Art Book On Jamini Roy and D.P. Roy Chaudhary), Editor: Prasanta Daw, Firma KLM Private Limited, Calcutta, 1978
  • Debiprasad: An Artist of Many Colours, Prasata Daw, M.C.Sarkar & Sons Ppt. Ltd.,Kolkata, 2005
  • 'Art and Aesthetics of Deviprasad' by Prasanta Daw, Mahua Publishing Company, Calcutta, 1978
  • 'Glimpses of Indian Sculpture' by Sushil Mukherjee, Bivab, Calcutta, 1989
  • Roy Chowdhury, Deviprasad. Ironies and Sarcasms. General Printers and Publishers Limited, Calcutta, 1951
  • 'Choudhury and his art' by P R Ramachandra Rao with Foreword by Sir S. Radhakrishnan, New Book Co, Bombay, 1943

உசாத்துணை


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.