ஏ.எம்.ஏ. அஸீஸ்

From Tamil Wiki
Revision as of 17:21, 16 February 2023 by Ramya (talk | contribs) (Created page with "ஏ.எம்.ஏ. அஸீஸ் (அபூபக்கர் முகம்மது அப்துல் அசீஸ்) (அக்டோபர் 4, 1911 – நவம்பர் 24, 1973) ஈழத்து எழுத்தாளர், கல்வியாளர், அரசியல்வாதி, சமூக சேவையாளர். == பிறப்பு, கல்வி == ஏ.எம்.ஏ. அஸீஸ் இலங்கை யாழ்ப்...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

ஏ.எம்.ஏ. அஸீஸ் (அபூபக்கர் முகம்மது அப்துல் அசீஸ்) (அக்டோபர் 4, 1911 – நவம்பர் 24, 1973) ஈழத்து எழுத்தாளர், கல்வியாளர், அரசியல்வாதி, சமூக சேவையாளர்.

பிறப்பு, கல்வி

ஏ.எம்.ஏ. அஸீஸ் இலங்கை யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையில் சுலைமான் முகைதீன் முகம்மது அபூபக்கர், மீராமுகைதீன் நாச்சியா இணையருக்குப் அக்டோபர் 4, 1911இல் பிறந்தார். தந்தை யாழ்ப்பாண நகரசபை உறுப்பினராக இருந்தார். ஆரம்பக் கல்வியை யாழ்ப்பாணம் அல்லாபிச்சை பள்ளி, யாழ் வைத்தீஸ்வர வித்தியாலயம், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் பயின்றார்.1929இல் இலங்கைப் பல்கலைக்கழக கல்லூரியில் கற்று இளங்கலைப் பட்டம் பெற்றார். 1933இல் கேம்பிரிட்ச் பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பு பயின்றார்.

தனிவாழ்க்கை

உம்மு குல்தூம் என்பவரைத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு மரீனா சுல்பிக்கா, முகம்மத் அலி, இக்பால் ஆகியோர் பிள்ளைகள்.

அசீஸ் 1940இல் இலங்கை நிருவாக சேவையில் சேர்ந்தார். கல்முனை, கண்டி ஆகிய இடங்களில் உதவி அரசாங்க அதிபராகப் பணியாற்றினார். 1948 முதல் 1961 வரை கொழும்பு சாகிரா கல்லூரியில் அதிபராகப் பணியாற்றினார்.

அமைப்புப் பணிகள்

  • 1950-1960களில் செனட் சபை உறுப்பினராகவும், பொது சேவை ஆணைக்குழு உறுப்பினராகவும் பணியாற்றினார்.
  • 1950இல் அகில இலங்கை முஸ்லிம் இளைஞர் சங்கப் பேரவை(வை.எம்.எம்.ஏ) அமைப்பைத் தோற்றுவித்தார்.

இலக்கிய வாழ்க்கை

விருதுகள்

மறைவு

நூல்கள்

  • இலங்கையில் இஸ்லாம்
  • அறபுத் தமிழ் எங்கள் அன்புத் தமிழ்
  • மொழிபெயர்ப்புக் கலை
  • மிஸ்ரின் வசியம்
  • கிழக்காபிரிக்கக் காட்சிகள்
  • ஆபிரிக்க அனுபவங்கள்
  • தமிழ் யாத்திரை

உசாத்துணை

  • கலாநிதி ஏ.எம்.ஏ. அஸீஸ் முஸ்லிம் சமூகத்தின் முதன்மைப் பேரறிஞர்: கலாநிதி எம்.ஏ. நுஃமான்: ஆங்கில மூலத்திலிருந்து தமிழில் எஸ்.எம்.எம். யூசுப்

இணைப்புகள்