being created

சிவகுருநாதப்பிள்ளை

From Tamil Wiki
Revision as of 17:25, 1 February 2023 by Ramya (talk | contribs) (Created page with "சிவகுருநாதப்பிள்ளை (சிவா பிள்ளை) தமிழ், சைவ அறிஞர். == பிறப்பு, கல்வி == சிவகுருநாதப்பிள்ளை இலங்கையின் யாழ்ப்பாணம் பகுதியில் சிவ.கணபதி பிள்ளை, நாகம்மா இணையருக்கு மே 9, 1942இல் பிறந்தா...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

சிவகுருநாதப்பிள்ளை (சிவா பிள்ளை) தமிழ், சைவ அறிஞர்.

பிறப்பு, கல்வி

சிவகுருநாதப்பிள்ளை இலங்கையின் யாழ்ப்பாணம் பகுதியில் சிவ.கணபதி பிள்ளை, நாகம்மா இணையருக்கு மே 9, 1942இல் பிறந்தார். இந்துக்கல்லூரியில் பத்தொன்பது வயது வரை கல்வி பயின்றார். இலங்கையில் உள்ள மாணவ ஆசிரியர் பயிற்சியை கோப்பாய்க் கிறித்தவக்கல்லூரியில் பயின்றார். பொறியியல் படிப்பைக் கொக்குவில் தொழில்நுட்பக்கல்லூரியில் பகுதி நேரமாகப் பயின்றார். இலங்கையில் தமிழ் மாணவர்கள் படிப்பதில் இருந்த இடையூற்றின் காரணமாகவும் செல்வச் செழிப்பின் காரணமாகவும் இலண்டனுக்கு 1967இல் படிக்கச் சென்றார்.

லண்டனுக்குச் சென்றார். தொழில்நுட்ப உதவியாளராகப் பகுதிநேரப் பணியில் ஈடுபட்டார். பகுதிநேரமாக ஆர்வம் காரணமாக கணிப்பொறி, தொழில் நுட்பம் சார்ந்த படிப்புகளை முடித்தார். பல்தொழில்நுட்பக் கல்லூரி ஒன்றில் கணிப்பொறி ஆய்வாளராக (1977-1980) பணிபுரிந்தார். 1980 இல் கோல்டுசுமித் பல்கலைக்கழகத்தில் பணியேற்றார்.

கணிப்பொறித்துறையில் தொடக்க காலம் முதல் கவனம் செலுத்தி வருபவர். கணிப்பொறியைக் கற்று அதன் வழியாகத் தமிழ் மொழியை அதில் புகுத்தித் தமிழ்க் கல்வியை எளிமைப்படுத்தினார். அயலகச்சூழலில் வாழும் தமிழ்க் குழந்தைகளுக்குத் தமிழ் கற்பித்தார்.

1980 இல் கணிப்பொறி இவர் பணிபுரிந்த பல்கலைக்கழகத்தில் அறிமுகம் ஆனது. இவர் கணிப்பொறி பயிற்றுவிக்கும் பணியில் இருந்தார். 1985இல் ஆசிரியர்களுக்குக் கணிப்பொறியைப் பயிற்றுவிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார் . 1984 முதல் இலண்டனில் தாய்மொழியைக் கற்பிக்கும் விழிப்பு ணர்ச்சி ஏற்பட்டது . எட்டு மொழிக்கு இவ்வாய்ப்பு அமைந்தது . தமிழ் கற்பதற்குப் பலரும் ஆர்வம் காட்டாமல் இருந்தனர் . தொடக்கப்பள்ளிகளில் தமிழைக்கணிப்பொறி வழியாகக் கற்பிக்கும் விழிப்புணர்ச்சி பல இடங்களில் ஏற்பட்டது . 1995 இல் இம்முயற்சி தொடங்கப்பட்டது . 1997-98 இந்தியாவில் உத்தமம் என்ற அமைப்பு தமிழைப் பயிற்றுவிக்கும் வழிமுறைகளை உரைத்தது . இலண்டனில் 2003 இல் புதிய விழிப்புணர்ச்சி ஏற்பட்டது . பல இனத்தவர்களும் தங்களின் சமூக மொழிக்கு முதன்மை வேண்டும் என வாதிட்டனர் . இங்கிலாந்தில் 310 மொழிகள் பேசப் படுகின்றன .25 மொழிகளை ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பேசுகின்றனர் . இம்மொழிகளுள் 12 மொழிகள் தேர்ந்தெடுக்கப்பெற்று . மொழியை அதன் கட்டமைப்பு அடிப்படையில் இவ்வாறுதான் கற்பிக்க வேண்டும் என்று முடிவுசெய்து கற்பிக்க முயன்றனர் . தமிழ்மொழியை யாரும் விரும்பாததால் தமிழ் கற்பதற்கு வாய்ப்பு இல்லாமல் போனது . சிவப்பிள்ளை அவர்களின் நண்பர் நிறுவனம் ஒன்றில் 25 மாணவர்கள் தமிழ் கற்கும் சூழல் உருவாக்கப்பட்டு தமிழ் கற்பதற்கு உரிய வாய்ப்பு இங்கிலாந்தில் இவரால் பெறப்பட்டது . இன்று 75 மாணவர்கள் தமிழ் கற்கின்றனர் . தமிழ் மாணவர்கள் எளிதாகத் தமிழ் மொழியைக் கற்கப் பல ஆய்வுகளைச் செய்து குறுவட்டுகளை , நூல்களைச் சிவகுருநாதப் பிள்ளை அவர்கள் உருவாக்கியுள்ளார் . காண்பொலி ( வீடியோ ) வழியாகத் தமிழ் கற்பிப்பது என்ற அடிப்படையில் இவர் பல ஆய்வுளைச் செய்து வருகின்றார் . இவர்தம் தமிழ்க் கல்விப் பணியைப் பாராட்டி இங்கிலாந்தில் இவருக்கு EAL என்னும் உயரிய விருது வழங்கப்பட்டது . மின் வெண்பலகை வழி கற்பிக்கும் INDIRECTIVE WHITE BOARD முறையைக் கண்டு பிடித்துள்ளார்.

சிவகுருநாதப்பிள்ளை அவர்கள் 1975 இல் ஞானபூபதி அவர்களைத் திருமணம் செய்து கொண்டார் . மூன்று பெண்மக்கள் இவர்களுக்கு இலண்டனில் உள்ளனர் . இவர்தம் துணைவியார் இலண்டனில் கணக்காளராகப் பணிபுரிகின்றார் . இளம் வயதில் குறும்புக்காரச் சிறுவனாக இருந்த சிவப்பிள்ளை சுவாமி சச்சிதானந்தர் அவர்கள் இலங்கைக்கு வந்ததும் அவரிடம் யோகா முதலிய கலைகளைக் கற்றுக்கொண்டார் . இச் சச்சிதானந்தர் நடிகர் இரசினிகாந்து அவர்களின் குரு என்பதும் பாபா படம் முதல்நாள் திரையிட்டபொழுது முதற்காட்சி காண வந்து இறந்தவர் என்பதும் நினைவிற்கொள்ள வேண்டிய செய்தியாகும் . 1953 இல் சச்சிதானந்தர் மேல் ஏற்பட்ட ஈடுபாடு இன்றுவரை குறையாமல் இவருக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது . சிவப்பிள்ளையின் குடும்பம் இலங்கையில் மிகச்சிறந்த செல்வச்செழிப்பிலான குடும்பம் . பெற்றோர் இருவரும் ஆசிரியர்கள் . எனவே இலண்டன் சென்று படிக்கும் வாய்ப்பு அமைந்தது . இவர்தம் பெரியப்பா குடும்ப மரபுகளை மீறாதவர் . இவர்தம் முன்னோர்கள் கட்டைத்திராய் என்ற ஊரில் கட்டிய முத்துமாரியம்மன் கோயில் புகழ்பெற்றது . தங்கைகள் இக்கோயிலையும் நில புலங்களையும் பார்த்துக் கொள்கின்றனர் . சிவப்பிள்ளை இனச்சிக்கல் காரணமாக இலங்கைக்குச் செல்ல முடியாத நிலை . இவரின் அம்மா இறந்த ஒரு மணி நேரத்தில் அப்பாவும் இறந்துவிட்டார் . இவர்களை அடக்கம் செய்யச் செல்லமுடியாத நிலை சிவப்பிள்ளைக்கு ஏற்பட்டது . எனவே இவரின் உடன் பிறந்த தங்கைகள் இவரின் பெற்றோரை அடக்கம் செய்தனர் . சிவப்பிள்ளை அவர்களுக்குத் தமிழ் , ஆங்கிலம் , சிங்களம் , சமற்கிருதம் உள்ளிட்ட மொழிகள் தெரியும் . 1990 இல் பெரும் பொருள் வளத்துடன் இருந்த சிவப்பிள்ளை அவர்கள் நண்பர்களுக்கு உதவச்சென்று மிகப்பெரும் பொருள் இழப்பிற்கு ஆளானார் . இலண்டனில் இருந்த பல வீடுகளை விற்றார் . விடுமுறை நாட்களில் மகிழுந்து ஓட்டியும் , பிற பணிகளைச் செய்தும் இழந்த செல்வத்தை மீட்டார் . மரக்கறி உணவுகளை விரும்பி உண்ணும் சிவப்பிள்ளை அவர்கள் சிவ மதத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்டவர் .

பல நாடுகளுக்குச் சென்று தமிழ்க்கல்வி பயிற்றுவிப்பது தொடர்பில் பல கட்டுரைகளைக் கருத்தரங்குகளுக்கு வழங்கினார்.

இலக்கிய வாழ்க்கை

மறைவு

நூல் பட்டியல்

உசாத்துணை


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.