being created

பிரேம்சந்த்

From Tamil Wiki
Revision as of 05:20, 6 January 2023 by Madhusaml (talk | contribs)

முன்ஷி பிரேம்சந்த்(பிரேம்சந்த்; இயற்பெயர்:தனபத் ராய்)(ஜூலை 31,1880 – அக்டோபர் 8,1936) புகழ்பெற்ற ஹிந்தி எழுத்தாளர். ஹிந்தி, உருது மொழிகளின் நவீன,இயல்புவாத எழுத்தின் முன்னோடியாகக் கருதப்படுகிறார். சமுதாய நோக்கில் சாதி அடுக்குகளையும், உழைப்பாளிகள், பெண்களின் நிலையையையும் எழுதிய முன்னோடி. இந்தியாவின் தலைசிறந்த எழுத்தாளர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.

இளமை, கல்வி

தன்பத்ராய் உத்தரப் பிரதேசத்தில் காசிக்கு அருகிலுள்ள லாம்கி என்ற ஊரில் காய்ஸ்த சமூகத்தில் அஜப் லால்-ஆனந்தி தேவி இணையருக்கு ஜூலை 31, 1880 அன்று நான்காவது குழந்தையாகப் பிறந்தார். தமக்கை சுக்கி. அதற்கு முன் பிறந்த இரு பெண் குழந்தைகளும் சிறுவயதில் இறந்து விட்டன. காசிக்கருகில் ஓர் மதரஸாவில் மௌல்வி ஒருவரிடம் உருதும் பாரசீகமும் பயின்றார். எட்டாவது வயதில் தாயை இழந்தார். கோரக்பூரிலுள்ள தந்தை மறுமணம் செய்து கொண்டார். தனிமையைப் போக்க வாசித்த புனைவு நூல்கள் வாசிப்பின் மீது ஆர்வத்தை வளர்த்தன.

மிஷினரி பள்ளியொன்றில் ஆங்கிலம் கற்றார்.

தனி வாழ்க்கை

1919 ஆம் ஆண்டில் அலகாபாத் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். 1895-ல் பதினைந்தாம் வயதில் முதல் திருமணம் நடந்தது. 1905 ஆம் ஆண்டில் சிவ்ராணி தேவி எனும் இளம் விதவையை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டார். 1899 முதல் 1923 ஆம் ஆண்டு வரை உத்தரப் பிரதேசத்தின் கிழக்குப்பகுதி பள்ளிகளில் ஆசிரியர் பணிகளில் இருந்தார்.










🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.