under review

துயிலெடை நிலை

From Tamil Wiki
Revision as of 10:30, 3 January 2023 by Madhusaml (talk | contribs)

துயிலெடை நிலை (பள்ளியெழுச்சி ) தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். மன்னனை உறக்கத்திலிருந்து எழும்படி வேண்டுவதாகப் பாடப்படுவது துயிலெடை நிலை[1].

பக்திக் காலத்தில் இறைவனைத் துயில் எழுப்புவதாகப் பாடும் திருப்பள்ளியெழுச்சி வழக்கம் ஏற்பட்டதுடன், மன்னர்களுக்கான தனியான ஒரு சிற்றிலக்கியமாக தியிலெடை நிலை உருவானது.

உசாத்துணைகள்

  • சுப்பிரமணியன், ச. வே. (பதிப்பாசிரியர்), தமிழ் இலக்கண நூல்கள், மெய்யப்பன் பதிப்பகம், சென்னை. 2009.

அடிக்குறிப்புகள்

  1. கண்படை மன்னர் முன்னர்த் தண்பதம்
    விடியல் எல்லை இயல்புறச் சொல்லி
    தந்த திறையரும் தாராத் திறையரும்
    ஏத்தி நின்மொழி கேட்டுஇனிது இங்க
    வேண்டினர் இத்துயில் எழுகென விளம்பின்
    அதுவே மன்னர் துயில்எடை நிலையே.

    - பன்னிரு பாட்டியல், பாடல் 324

இதர இணைப்புகள்



✅Finalised Page