கபிலர் விருது

From Tamil Wiki
Revision as of 21:08, 31 December 2022 by Tamizhkalai (talk | contribs)

தமிழுக்கும் தமிழ் வளர்ச்சிக்கும் உயர்வுக்கும் உழைக்கும் தமிழறிஞர்களைச் சிறப்பிக்கும் வகையில், தமிழக அரசு, தமிழ் வளர்ச்சித்துறை மூலம் பல்வேறு விருதுகளை வழங்கிச் சிறப்பித்து வருகிறது. அவற்றுள் கபிலர் விருதும் ஒன்று. இவ்விருது 2012-ஆம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது.

கபிலர் விருது

பழந்தமிழர், தொன்மை, வரலாறு, நாகரீகம், பண்பாடு போன்றவற்றுக்கு வலுசேர்க்கும் வகையில்  மரபுச் செய்யுள், கவிதைப் படைப்புகளை அளிக்கும் தமிழறிஞருக்கு தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறையால் கபிலர் விருது வழங்கப்படுகிறது. 2012 முதல் வழங்கப்படும் இவ்விருது, இரண்டு லட்ச ரூபாய் பரிசுத் தொகையும், தங்கப் பதக்கமும், தகுதிச்சான்றும் பொன்னாடையும் கொண்டது.

கபிலர் விருது பெற்றோர் பட்டியல் - 2021 வரை

வ.எண். ஆண்டு பெயர்
1 2012 முனைவர் அ.அ. மணவாளன்
2 2013 கவிஞர் முத்துலிங்கம்
3 2014 முனைவர் ஆ. லலிதா சுந்தரம்
4 2015 கவிஞர் பிறைசூடன்
5 2016 முனைவர்  எல்.கே. அக்னிபுத்திரன்
6 2017 முனைவர் கு.வெ.பாலசுப்பிரமணியன்
7 2018 புலவர் மி. காசுமான்
8 2019 புலவர் வெற்றியழகன்
9 2020 செ. ஏழுமலை
10 2021 கருமலை தமிழாழன்

உசாத்துணை

{First review completed}}