being created

நாச்சியார் திருமொழி

From Tamil Wiki
Revision as of 17:22, 30 December 2022 by Ramya (talk | contribs)

நாச்சியார் திருமொழி (பொ.யு. 7ஆம் நூற்றாண்டு) பக்தி இலக்கிய கால நூல். பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவரான ஆண்டாள் பாடியது. வைணவ பாசுரங்கள் அடங்கிய நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் உள்ளது.

நூல் பற்றி

பொ.யு. 7ஆம் நூற்றாண்டில் பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் பாடியது. நூற்றி நாற்பத்து மூன்று பாடல்களைக் கொண்டது. நாயகன் நாயகி பாவம் என்ற உத்தியைக் கொண்டு எழுதப்பட்ட பாடல்கள். கண்ணனைத் தன் நாயகனாகக் கொண்டு அவன் மீதுள்ள காதலையும், பிரிவாற்றாமையையும் பாடுவதாக அமைந்துள்ளது.

நூல் அமைப்பு

நாச்சியார் திருமொழியிலுள்ள நூற்றி நாற்பத்து மூன்று பாடல்கள், பதினாங்கு தலைப்புகளின் கீழ் ஆண்டாள் இயற்றினார். பாடல்கள் அனைத்தும் அறுசீர், எழுசீர், எண்சீர் கழிநெடிலடி ஆசிரியப்பாக்களாலும் கலிப்பாக்களாலும் ஆனவை.

பாடுபொருள்

காமனிடம் வேண்டுதல்,  கண்ணனுக்கு அவள் விடும் மேக தூது, குயில் தூது, அழகருக்குப் பாடிய பாடல்கள், திருமணக் கனவு, பிரிவாற்றாமை, வேதனை, தன்னை பிருந்தாவனத்திலோ, துவாரகையிலோ கண்ணன் இருக்குமிடம் சென்று சேர்க்கும்படி உற்றாரிடம் வேண்டல் போன்றவற்றை பாடுபொருளாகக் கொண்டது. கண்ணன் எனும் பிம்பம் விளையாட்டுத்தோழனாய், குறும்புக்கார சிறுவனாய், மாயங்கள் பல புரியும் சாகசக்காரனாய் என பல வடிவங்கள் எடுத்துக்கொண்டே சென்று காதலன், மணாளன் என்ற நிலையை எட்டுகிறது.

பத்துகள்

  • முதல்பத்து: தை முதல் நாளில் காமனைத் தொழுது, நோன்பிருந்து கண்ணனுடன் இணைய வேண்டும் என்ற வரத்தைக் கோரும் பத்து பாடல்கள் அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியப் பாக்களாக அமைந்தவை
  • இரண்டாம் பத்து (நாமமாயிரம்): இரண்டாம் பத்து பாடல்கள் கலிவிருத்தங்களாக அமைந்தவை. கண்ணனைக் கோபியர் தம் சிற்றில் வந்து சிதயேலே என வேண்டும் வகையில் அமைந்தவை.
  • மூன்றாம் பத்து (கோழியழைப்பதன்): மூன்றாம் பத்து தன்னையும் தன் தோழியரையும் கோபிகைகளாகப் பாவித்து, யமுனையில் நீராடும்போது தங்கள் ஆடைகளைக் கவர்ந்த கண்ணனை, அவற்றை திருப்பித் தர வேண்டுபவையாக அமைந்த பத்துஅறுசீர்கழிநெடிலடி ஆசிரிய விருத்தங்களைக் கொண்டது.

கண்ணா, இது என்ன மாயம், இந்தப் பொய்கைக்கு நீ எப்படி வந்தாய்? தேன் நிறைந்த திருத்துழாய் மாலையை அணிந்தவனே, பெரியவனே, மாயனே,  எங்கள் அமுதே, வித்தகனே, நீ செய்வது முறையல்ல. காளிங்கன் என்ற பாம்பின்மீது குதித்து நடனமாடியவனே, ஓடாதே, குருந்தமரத்தின்மீது நீ  வைத்துள்ள ஆடைகளைத் திரும்பக் கொடுத்துவிடு!

  • நான்காம்பத்து(தெள்ளியார்பலர் நீ கூடிடு கூடலே)

நான்காம் பத்து கண்ணன் வரக் காத்திருந்த ஆண்டாள் கண்ணனை அடையும் தன் நோக்கம் நிறவேறுமா என அறிய கூடல் இழைத்துப் பார்ப்பதை கூறும் பத்து கலிவிருத்தங்களால் ஆனது. சங்க காலம் தொட்டே தலைவன் வருவானா என்ற ஐயத்தில் கூடல் இழைத்தல் என்பது மரபாக இருந்தது. ஆண்டாள் தன் தோழியருடன் 'கூடிடு கூடலே' என மஞ்சள் கிழங்குகளைக் கையில் அள்ளியெடுத்து அவற்றின் எண்ணிக்கை இரட்டைப்படையாக அமைந்தால் கண்ணன் வருவான் எனக் கூடல் இழைத்துப் பார்க்கிறாள்.

இலக்கிய இடம்

நாச்சியார் திருமொழி திருப்பாவை முடிந்த இடத்தில் தொடங்குகிறது என வைணவ அறிஞர்கள் கருதுகின்றனர். அகப்பொருள் கூறுகளைக் கொண்டவை. தமிழரின் வழிபாட்டு முறைகளையும் புலப்படுத்துபவை. பெண்ணின் அகமொழியும், அகவெளியும் பெண் சார்ந்த எந்த வரையறைகளுக்கும், ஒழுக்க நியதிகளுக்கும் உட்படாமல் கட்டற்று வெளிப்படும் ஓர் படைப்பாகவும் விளங்குகிறது.

ஆன்மிகம்

பாடல் நடை

உசாத்துணை

  • ஆண்டாள்: tamilvu





🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.