being created

வடபத்ரசாயி ஆண்டாள் கோயில்

From Tamil Wiki
Revision as of 16:20, 28 December 2022 by Ramya (talk | contribs)

வடபத்ரசாயி ஆண்டாள் கோயில் (பொ.யு 8-15ஆம் நூற்றாண்டு) ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைந்த ஆண்டாள் கோயில். 108 வைணவ திவ்ய தேசங்களில் 90-வது திருத்தலம். இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது.

இடம்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் இக்கோவில் அமைந்துள்ளது மதுரைக்குத் தெற்கே 77 கி.மீ. தொலைவில் உள்ளது.

கோவில் பற்றி

வடபத்ரசாயிக்கென தனி கோயிலும், ஆண்டாளுக்கென தனி கோயிலும் உள்ளது. சிறுகோயிலாக இருந்த வடபத்ரசாயி கோயிலில் பெரியாழ்வார் பூஜை செய்துவந்தார். ஆண்டாள் பெரியாழ்வாரால் கண்டெடுக்கப்பட்ட நந்தவனம் உள்ளது. திருப்பாவை பாடப்பட்ட தலம்.

தெய்வங்கள்

மூலவராக வடபத்ரசாயி, ரங்கமன்னார், ஆண்டாள் (கோதை நாச்சியார்) உள்ளனர். தலமரம் துளசி. திருக்குளமாக திருமுக்குளம், கண்ணாடித் தீர்த்தம் உள்ளது.

கல்வெட்டு / செப்பேடு

ஆண்டாள் கோயில் பொ.யு 788ல் கட்டப்பட்டது. இங்குள்ள நரசிம்மர் சன்னதி, கல்வெட்டுகளில் ஒன்றான, சோழனின் தலைகொண்ட வீரபாண்டியன் (பொ.யு. 946 -966) கல்வெட்டில், இக்கோயில் 'ஜலசயநாட்டுக் கிடந்தருளின பரமசுவாமி கோயில்' என்றழைக்கப்பட்டதாக உள்ளது. சோழமன்னன் முதலாம் குலோத்துங்கன் (பொ.யு. 1070-1120) ஆட்சியில் இந்த ஊர் 'விக்கிரமசோழ சதுர்வேதிமங்கலம்' என்றழைக்கப்பட்டது. பிற்கால பாண்டியர் கல்வெட்டில், இக்கோயில் வடபெருங்கோயில் பள்ளி கொண்டருளிய பெருமாள் கோயிலாக இருந்தது. பொ.யு. 13ஆம் நூற்றாண்டில் இந்த ஊர், 'பிரம்மதேய குலசேகர சதுர்வேதி மங்கலம்' என்ற பெரிய நகரமாக பிற்கால பாண்டியர்களால் விரிவுபடுத்தப்பட்டது. திருமலைநாயக்கர் (பொ.யு 1623-1659) மற்றும் இராணி மங்கம்மாள் (பொ.யு 1689-1706) ஆட்சி காலத்தில், இக்கோயில் திருப்பணி செய்யப்பட்டு விரிவுபடுத்தப்பட்டது. பொ.யு 8-15-ஆம் நூற்றாண்டு / பாண்டியர் விஜயநகர, நாயக்கர் கல்வெட்டுக்களில் ஆண்டாள் கோவில் “சூடிக் கொடுத்த நாச்சியார் கோவில்” என்று குறிப்பிடப்பட்டது.

வரலாறு

ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து இராமநாதபுரத்திற்கு மாறித் தற்போது விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள திருவில்லிபுத்தூரில் ஆண்டாள் கோயில் உள்ளது. சங்க காலத்தில் மல்லி நாட்டின் ஒரு பகுதியாக இருந்தது. புதியதாகக் குடியிருப்புகள் எழுந்தவுடன், புத்தூர்(புதூர்) எனப் பெயர் பெற்றது. ஆண்டாள் கோவிலுக்கு அருகில் வடபத்ரசாயி கோவில் உள்ளது. ஆண்டாள் கோவிலின் தோற்றத்திற்கு முன்பே இக்கோவில் தோன்றியிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. இக்கோவிலின் சில பகுதிகள் பொ.யு. 9ஆம் நூற்றாண்டில் பெரியாழ்வாரால் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது.

பொ.யு. 15ஆம் நூற்றாண்டில் மாவெலி வாணாதிராயர் இக்கோவிலைப் புதுப்பித்தும், விரிவுபடுத்தியும் திருப்பணிகள் செய்தார். மதுரைப் பாண்டிய மன்னர்கள், திருமலை நாயக்கர் மன்னர் முதலிய மதுரை நாயக்க மன்னர் இக்கோயிலில் திருப்பணிகள் செய்தனர். திருமலை மன்னர் இக்கோவிலில் சிவகாமி அம்மனை இறைவியாகக் கொண்ட ஒரு மண்டபத்தைக் கட்டினார்.

ஆலய அமைப்பு

வடபத்ரசாயி கோயில்

இக்கோவிலின் கோபுரம் 60 மீட்டர் உயரமுடையது. இது விஜயநகர் காலப் பணி. வடபத்ரசாயி கோவிலின் கருவறையில் பெருமாள் ஸ்ரீதேவியுடனும் பூதேவியுடனும் சயனநிலையில் உள்ளார். பெருமாளின் சந்நிதிக்கு அருகில் பெரியாழ்வார் சந்நிதியும், ஸ்ரீஆண்டாள் பிறந்த இடத்தைக் குறிக்கும் சந்நிதியும் உள்ளன. வடபத்ரசாயி கோயிலிலுள்ள கருடாழ்வார் மண்டப மரச்சிற்பங்கள் வேலைப்பாடுமிக்கவை.

ஆண்டாள் கோயில்

வடபத்ரசாயி கோவிலுக்குச் சிறிது வடக்கில் ஆண்டாள் கோவில் உள்ளது. நாச்சியார் கோவில் எனவும் அழைக்கப்படுகிறது. இக்கோவிலின் பெருமாள் ரெங்கமன்னார். ஆண்டாளை சூடிக்கொடுத்த நாச்சியார் என்பர். இக்கோவிலின் கருவறை கல்லினால் ஆனது. வேலைப்பாடுமிக்கது. கருவறை மேலுள்ள விமானத்தில் ஆண்டாள் அருளிய திருப்பாவைப் பாசுரங்களின் கருத்துகளை விளக்கும் சிற்பங்கள் உள்ளன. கருவறை முன்னுள்ள மண்டபத்தில் திருமலை மன்னர், அவரது குடும்பத்தினரின் சிலைகள் உள்ளன. தங்கமுலாம் பூசப்பட்ட தாமிரத் தகடுகள் இச்சிலைகள்மீது உள்ளன. இக்கோவிலின் கல்யாண மண்டபம், துவஜஸ்தம்ப மண்டபம், ஏகாதசி மண்டபம் ஆகியவை சிற்ப, கட்டடக் கலைச் சிறப்புமிக்கவை. கல்யாண மண்டபத்திலுள்ள பன்னிரெண்டு தூண்களில் காணப்படும் யாளிகளின் சிற்ப அமைப்பு நேர்த்தியானது. துவஜஸ்தம்பத்தின் இரு பக்கங்களிலும் பின்புறம் பெயர்களைக் கொண்ட சிற்பப் படைப்புகள் உள்ளன.

சிற்பங்கள்

ஆண்டால் கோவிலில் வேணுகோபாலன், ஸ்ரீராமர், விஸ்வகர்மா, நடன மாது, லட்சுமணன், சூர்ப்பனகைக் காட்சி, கலைவாணி, அகோர வீரபத்திரன், ஜலந்தர், மோகினி, சக்தி ஆகிய சிற்பங்கள் ஒற்றைக் கல்லினாலான மிகப்பெரிய தூண்களில் அமைந்துள்ளன. துவஜஸ்தம்பத்தை அடுத்துள்ள ஏகாதசி மண்டத்தில் கர்ணன், அர்ஜீனன், குகன், சாத்தகி, ஊர்த்துவமுக வீரபத்திரன், நீர்த்தமுக வீரபத்திரன், மன்மதன், ரதி ஆகிய சிற்பங்கள் உள்ளன. இந்தச் சிற்பங்கள் யாவும் பொ.யு. 16ஆம் நூற்றாண்டில் மதுரை நாயக்க மன்னர் வீரப்பர் ஆட்சியில் அமைக்கப்பட்டிருக்கலாம்.

தேர்

இக்கோவிலைச் சேர்ந்த மிகப்பெரிய தேர் மரச்சிற்ப வேலைமிக்கது. கோவில் சன்னிதியை ஒட்டிய பிரதான சாலையில் இந்தத் தேர் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

நூற் குறிப்புகள்

தமிழ்நாடு அரசு சின்னம்

  • அருள்மிகு வடபத்ர சயனர் திருக்கோயிலின் இராஜகோபுரமே தமிழ்நாடு அரசின் அரசுச் சின்னத்தில் பதிக்கப்பட்டது.

விழாக்கள்

  • விஸ்வரூப தரிசனம், கால சாந்தி பூஜை, உச்சிகால பூஜை, நடை திருக்காப்பிடுதல், நடை திறப்பு, சாயரக்ஷை, அத்தாளம், அரவணை ஆகியவை அன்றாடம் நிகழ்கின்றன. காலை 6.30-1.00 முதல் மாலை 4.00-9.00 வரை கோயில் நடை திறந்துள்ளது.
  • ஆண்டாள் பிறந்ததாகக் கூறப்படும் ஆடி மாதத்தில் இக்கோவிலில் முக்கிய விழாவான ஆடிப்பூரம் தேர்த்திருவிழா நடஒபெறுகிறது.
  • மார்கழி மாதம்

உசாத்துணை


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.