under review

ஐ. கிருத்திகா

From Tamil Wiki
Revision as of 12:13, 25 December 2022 by Ramya (talk | contribs)
ஐ. கிருத்திகா (நன்றி: காமதேனு)

ஐ. கிருத்திகா (பிறப்பு: நவம்பர் 8, 1976) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர்.

பிறப்பு, கல்வி

ஐ. கிருத்திகா திருவாரூர் மாவட்டம் மணக்கால் அய்யம்பேட்டை கிராமத்தில் சோ.பாலு, பா.துர்க்கா இணையருக்கு நவம்பர் 8, 1976-ல் பிறந்தார். குளிக்கரை மற்றும் மணக்காலில் ஆரம்பக்கல்வி பயின்றார். திருவாரூர் அரங்கநாத முதலியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்புவரை பயின்றார். நாகை ஏ.டி.ஜெ. தர்மாம்பாள் பெண்கள் பாலிடெக்னிக்கில் பட்டயக்கல்வி பயின்றார்.

தனிவாழ்க்கை

ஐ. கிருத்திகா சீர்காழியைச் சேர்ந்த சோ. ஐயப்பவாசனை மார்ச் 15, 2000-ல் மணந்தார். மகள் மானஸா, மகன் ஸ்ரீமன். கோவையில் வசிக்கிறார்.

இலக்கிய வாழ்க்கை

ஐ. கிருத்திகா 1998 முதல் சிறுகதைகள் எழுதிவருகிறார். 'அனிச்சமலர்’ இவரின் முதல் சிறுகதை. காலச்சுவடு, கணையாழி, கல்கி, காமதேனு, மங்கையர்மலர், கனவு போன்ற இதழ்களில் சிறுகதைகள் எழுதினார். ஐ. கிருத்திகாவின் முதல் சிறுகதைத்தொகுப்பு ’உப்புச்சுமை’ தேநீர் பதிப்பகம் வெளியீடாக 2020-ல் வெளியானது.

இலக்கிய இடம்

“பெரும்பாலும் மண்ணின் மகத்துவம் பேசும் கதைகள். ஈர நெஞ்சின் ஏக்கங்கள் துளிர்க்கும் கதைகள்.” என எழுத்தாளர் திலகவதி மதிப்பிடுகிறார்.

விருதுகள்

  • கோவை ஞானி நடத்திய பெண் எழுத்தாளர்கள் சிறுகதைப்போட்டியில் பரிசு பெற்றார்.
  • நாய்சார் சிறுகதைத்தொகுப்பு வாசகசாலையின் சிறந்த சிறுகதைத்தொகுப்பு பரிசு பெற்றது.

நூல்கள்

சிறுகதைத்தொகுப்பு
  • உப்புச்சுமை (தேநீர் பதிப்பகம்) (2020)
  • நாய்சார் (zero degree publishing) (2021)
  • திமிரி (எதிர் வெளியீடு) (2021)
  • கற்றாழை (காலச்சுவடு)

உசாத்துணை

இணைப்புகள்



Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.