திலகவதி

From Tamil Wiki

திலகவதி (பிறப்பு: 1951) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர்.

பிறப்பு, கல்வி

திலகவதி கோவிந்தசாமி தர்மபுரி மாவட்டம் குமரசாமிப்பேட்டையில் ரெட்டியாருக்கு மகளாக 1951இல் பிறந்தார்.

தனிவாழ்க்கை

திலகவதி 1976இல் தமிழகக் காவல்துறையில் பணியில் சேர்ந்தார். முப்பத்தி நான்கு ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றார். திலகவதி தமிழ்நாட்டிலிருந்து இந்தியக் காவல் பணிக்குத் தேர்வான முதல் தமிழ்ப்பெண்.

திலகவதி இளங்கோவைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜாய்ஸ்ரேகா, பிரபுதிலக் ஆகிய இரு பிள்ளைகள். மணவிலக்கு பெற்றார். 1982இல் நாஞ்சில் குமரனை மணந்தார். 1987இல் மணவிலக்கு பெற்றார்.

அமைப்புப் பணிகள்

  • மகளிர்நல ஆணய உறுப்பினர்
  • சாகித்ய அகாடமி உறுப்பினர்

இலக்கிய வாழ்க்கை

திலகவதியின் முதல் சிறுகதை ’உதைத்தாலும் ஆண்மக்கள்’ 1987இல் தினகரன் இதழில் வெளியானது. கவிதைகள், நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் எழுதினார்.

திரைப்படம்

திலகவதியின் பத்தினிப்பெண் நாவல் 1983இல் திரைப்படமாக உருவானது.

விருதுகள்

  • திலகவதியின் கல்மரம் நாவல் 2005ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருது பெற்றது.

நூல்கள்

கவிதை
  • அலை புரளும் கரையோரம்
நாவல்
  • இனிமேல் விடியும் (மாலைமதி,1989)
  • உனக்காகவா நான் (அம்ருதா பதிப்பகம்,2007)
  • ஒரு ஆத்மாவின் டயரி சில வரங்கள்
  • கல்மரம் (அம்ருதா பதிப்பகம்,2005)
  • கனவைச் சூடிய நட்சத்திரம் (2001)
  • கைக்குள் வானம்
  • சொப்பன பூமியில் (அம்ருதா பதிப்பகம்,1998)
  • தமிழ்க்கொடியின் காதல் (அம்ருதா பதிப்பகம்,2007)
  • தீக்குக் கனல் தந்த தேவி
  • திலகவதி நாவல்கள் 1 & 2(தொகுப்பு) (புதுமைப்பித்தன் பதிப்பகம், 2004)
  • நேசத்துணை (அம்ருதா பதிப்பகம்,2007)
  • பத்தினிப்பெண்
சிறுகதைகள்
  • தேயுமோ சூரியன்
  • அரசிகள் அழுவதில்லை
கட்டுரை
  • முடிவெடு
  • வேர்கள் விழுதுகள்
  • சமதர்மப் பெண்ணியம்
  • மானுட மகத்துவங்கள்
மொழிபெயர்ப்பு
  • அன்புள்ள பிலாத்துவுக்கு (பால் சக்காரியா)
  • இத்வா முண்டாவுக்கு வெற்றி (மகாசுவேதா தேவி) (நேஷனல் புக் டிரஸ்ட்)
  • உதிரும் இலைகளின் ஓசை (உருது சிறுகதைகள்) (குர்ரத்துலைன் ஹைதர்) (சாகித்திய அகாதெமி)
  • போலுவும் கோலுவும் (பங்கஜ் பிஷ்ட்) (நேஷனல் புக் டிரஸ்ட்)
தொகுத்தவை
  • தொப்புள்கொடி (சிறுகதைகள்)
  • மரப்பாலம் (தென்கிழக்காசியச் சிறுகதைகள்)

உசாத்துணை

இணைப்புகள்