தி. பரமேசுவரி

From Tamil Wiki
Revision as of 17:47, 18 October 2022 by Ramya (talk | contribs)

தி. பரமேசுவரி (பிறப்பு: செப்டம்பர் 11, 1970) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர், ஆசிரியர்.

வாழ்க்கைக் குறிப்பு

தி.பரமேசுவரி ஜெகதீசுவரி, திருநாவுக்கரசு இணையருக்கு செப்டம்பர் 11, 1970இல் சென்னையில் பிறந்தார். தமிழ் இலக்கியத்தில் ம.பொ.சி பார்வையில் பாரதி எனும் தலைப்பில் முனைவர் பட்டம் பெற்றார். B.A., M.A., B.Ed., PH.D., Pg diploma in Guidance and Counselling.

தனி வாழ்க்கை

திருவண்ணாமலை தானிப்பாடியில் முதுகலைத் தமிழாசிரியராக 2002இல் பணியில் சேர்ந்தேன். பிறகு காஞ்சிபுரம் மானாம்பதியிலும் பண்ருட்டியிலும் பணியாற்றி 2018இல் இராணிப்பேட்டையில் மேலபுலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றுகிறார். மகள் கிருத்திகா.

இலக்கிய வாழ்க்கை

தி. பரமேசுவரி பள்ளி காலத்திலிருந்து கட்டுரைகள், கவிதைகள் எழுதினார். பூங்குழலி, திலீபா எனும் புனைப் பெயர்களில் கவிதைகள், கட்டுரைகள் எழுதினார். இவரின் ஆய்வேடு “ம.பொ.சி பார்வையில் பாரதி” என்ற பெயரில் நூலாக வெளிவந்தது. இவரது கவிதைகள் உயிர்மை, அவள் விகடன், ஆனந்த விகடன், பூங்குயில், புதிய பார்வை, யாதும் ஊரே, இளந்தமிழன், அணி, நொச்சி போன்ற இதழ்களில் வெளிவந்தன. முதல் தொகுப்பு ‘எனக்கான வெளிச்சம்’ வம்சி பதிப்பக வெளியீடாக வந்தது. புதுமைப்பித்தன், அசோகமித்திரன், தி.ஜானகிராமன், இராசேந்திர சோழன், பஷீர், தாஸ்தாவெஸ்கி, தல்ஸ்தோய், பாரதி, கலாப்ரியா, இளங்கோ கிருஷ்ணன், யூமா வாசுகி, பிரான்சிஸ் கிருபா, பெருந்தேவி ஆகியோரை ஆதர்ச எழுத்தாளர்களாகக் குறிப்பிடுகிறார்.

விருது

  • “எனக்கான வெளிச்சம்” கவிதைத் தொகுப்பிற்காக “திருப்பூர் கலை இலக்கியப் பேரவை பரிசு” பெற்றார்.

நூல்கள் பட்டியல்

கவிதைத் தொகுப்பு
  • எனக்கான வெளிச்சம் (2005)
  • ஓசை புதையும் வெளி (2010)
ஆய்வு நூல்
  • ம.பொ.சி. பார்வையில் பாரதி (2003)

பதிப்பித்த நூல்கள்

  • ம.பொ.சி.யின் சிறுகதைகள் (2006)
  • ம.பொ.சி.யின் சிலப்பதிகார விளக்கத் தெளிவுரை (2008)
  • ம.பொ.சி.யின் தமிழன் குரல் இதழ்த் தொகுப்பு (2010)

உசாத்துணை

  • தி. பரமேசுவரி: eluthu

இணைப்புகள்

  • தி. பரமேசுவரி: வலைதளம்