under review

ஒட்டுச்செடி

From Tamil Wiki
Revision as of 15:27, 12 October 2026 by Tamilwiki Bot 1 (talk | contribs)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

To read the article in English: Ottuchedi (novel). ‎

ஒட்டுச்செடி

ஒட்டுச்செடி (1955) த.நா. குமாரசாமி எழுதிய நாவல். எளிய காதல்கதை. ஆனால் பின்னணியில் பூண்டி நீர்த்தேக்க திட்டத்தால் ஒரு கிராமமே இடம்பெயர்வதை சித்தரிக்கிறது. வளர்ச்சியின் அழிவுக்கூறை எழுதிய முதல்நாவல் எனப்படுகிறது.

எழுத்து, பிரசுரம்

த.நா.குமாரசாமி எழுதிய இந்நாவல் 1954-ல் ஆனந்தவிகடன் இதழில் தொடராக வெளிவந்தது. 1955-ல் நூல்வடிவம் பெற்றது.

கதைச்சுருக்கம்

சோங்கு கண்ணம்மாவை மணந்துகொள்கிறான். போர்முனைக்குச் சென்று ஊனமுற்றுத் திரும்பும் கதிர்வேலு தன் மனைவியின் காதலன் என்று சோங்கு அறிகிறான். தான் மணந்த கண்ணம்மாவை கதிர்வேலுவுடன் செல்ல அனுமதிக்கிறான்.

இலக்கிய இடம்

சென்னையின் குடிநீர் தேவைக்காக உருவாக்கப்பட்ட பூண்டி நீர்த்தேக்கத்தால் ஓர் ஊரே இடம்பெயர்வதை இந்நாவல் காட்டுகிறது. வளர்ச்சியின் அழிவுக்கூறை சித்தரிக்கும் முதல் நாவல். கூடவே, சோங்குவின் மறுபிறவியின் குறியீடாகவும் இந்த ஊர் இடம்பெயர்தல் நாவலில் நிகழ்கிறது.

உசாத்துணை

ஒட்டுச்செடி - த.நா.குமாரசாமி - கவிதா வெளியீடு | panuval.com

‎


✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:31:00 IST