under review

இளங்கோவடிகள் விருது

From Tamil Wiki
Revision as of 15:26, 12 October 2026 by Tamilwiki Bot 1 (talk | contribs)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

தமிழுக்கும் தமிழ் வளர்ச்சிக்கும் உயர்வுக்கும் உழைக்கும் தமிழறிஞர்களைச் சிறப்பிக்கும் வகையில், தமிழக அரசு, தமிழ் வளர்ச்சித்துறை மூலம் பல்வேறு விருதுகளை வழங்கிச் சிறப்பித்து வருகிறது. அவற்றுள் இளங்கோவடிகள் விருதும் ஒன்று. இவ்விருது 2015-ம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது.

இளங்கோவடிகள் விருது

இளங்கோவடிகளின் நடையையொட்டிப் புதிய காப்பியம் படைப்பவருக்கோ அல்லது சிலப்பதிகாரத்தின் புகழைப் பரப்பி வருபவருக்கோ இளங்கோவடிகள் விருது வழங்கப்படுகிறது. தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையால் 2015 முதல் இவ்விருது வழங்கப்படுகிறது. இவ்விருது, விருதுத் தொகை இரண்டு லட்சம் ரூபாய், தங்கப்பதக்கம், தகுதிச்சான்று மற்றும் பொன்னாடையும் கொண்டது.

இளங்கோவடிகள் விருது பெற்றவர்கள் (2021 வரை)

எண் ஆண்டு விருது பெற்றவர்
1 2015 முனைவர் ஜி.டி. நிர்மலா மோகன்
2 2016 நா. நஞ்சுண்டன்
3 2017 முனைவர் வெ. நல்லதம்பி
4 2018 சிலம்பொலி சு. செல்லப்பன்
5 2019 கவிக்கோ ஞானச்செல்வன் (எ) கோ. திருஞானசம்பந்தம்
6 2020 மா. வயித்தியலிங்கன்
7 2021 நெல்லை கண்ணன்

உசாத்துணை

‎


✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 01-Feb-2023, 09:18:52 IST