ஒசிங்ரன் பண்டிதர்

From Tamil Wiki
Revision as of 15:00, 9 October 2022 by Ramya (talk | contribs) (Created page with "ஒசிங்ரன் பண்டிதர் (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ்ப் புலவர். சைவ அறிஞர். == வாழ்க்கைக் குறிப்பு == ஒசிங்ரன் பண்டிதர் வட்டுக்கோட்டையில் பிறந்தார். வட்டுக்கோட்டை சாஸ்திரக்...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

ஒசிங்ரன் பண்டிதர் (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ்ப் புலவர். சைவ அறிஞர்.

வாழ்க்கைக் குறிப்பு

ஒசிங்ரன் பண்டிதர் வட்டுக்கோட்டையில் பிறந்தார். வட்டுக்கோட்டை சாஸ்திரக் கல்லூரியின் தலைவராகப் பத்து ஆண்டுகள் பணியாற்றினார். சைவசமய சாத்திர நூல்களையும் கொள்கைகளையும் ஆராய்வதில் ஈடுபட்டார். அக்கல்லூரியில் கந்தபுராணத்தினை முதன்முதலாக இலக்கிய பாடமாக வைத்தார்.

இலக்கிய வாழ்க்கை

ஒசிங்ரன் பண்டிதர் தத்துவக் கட்டளை, சிவஞானபோதம், சிவட்பிரகாசம் ஆகிய நூல்களை 1854-ல் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். சிவஞானபோதம் முதலான நூல்களை மொழிபெயர்த் தியற்றிய நல்லசாமிப் பிள்ளையவர்களுக்கு இவை பயன்பட்டன.

நூல் பட்டியல்

மொழிபெயர்ப்பு
  • தத்துவக் கட்டளை
  • சிவஞானபோதம்
  • சிவட்பிர காசம்

உசாத்துணை

  • ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்: தென் புலோலியூர்: மு. கணபதிப் பிள்ளை