under review

நமசிவாய நாவலர்

From Tamil Wiki
Revision as of 03:44, 6 May 2026 by Tamilwiki Bot 1 (talk | contribs) (; Added info on Finalised date)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

நமசிவாய நாவலர் (பிறப்பு: 1845 - 1897) தமிழ் சிற்றிலக்கியப் புலவர்.

வாழ்க்கை குறிப்பு

நமசிவாய நாவலர் கடலூர் மாவட்டம் பண்ருட்டி கிராமத்தில் சுப்பிரமணிய ஐயருக்கு 1845-ம் ஆண்டு பிறந்தார். உடன்பிறந்தவர் சண்முக ஐயர். சண்முக ஐயர் இளமையிலேயே மறைந்தார். வீரசைவ மரபை சார்ந்தவர். சொர்க்கபுரம் இராமலிங்க தம்பிரானிடம் சிலகாலம் கல்வி கற்றார். பின்னர் மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் கல்வி கற்றார். கல்வியில் தேர்ச்சி பெற்ற பின்னர் பண்ருட்டியில் பள்ளிக்கூடம் ஒன்றை உருவாக்கி நடத்தி வந்தார். திருவிளையாடற் புராண சொற்பொழிவுகள் நடத்துவதில் வல்லவராக இருந்தார். சொற்பொழிவுகள் ஆற்றுவதையும் தம் தொழிலாக கொண்டிருந்தார்.

ஆன்மீக வாழ்க்கை

நமசிவாய நாவலர் வாழ்வின் பிற்காலத்தில் முருகன் அருள் கிடைக்கப்பெற்றார். தியான நிலையில் அமர்ந்திருக்கையில் தெய்வ லோகம், கந்தமாதனம் முதலிய நுண் உலகங்களின் தரிசனம் கிடைக்கப்பெற்றார் என்று கூறப்படுகிறது.

இலக்கிய வாழ்க்கை

நாவசிவாய நாவலர் திருத்தினை பதிகம், மயிலாசல சதகம் ஆகிய இருநூல்களை எழுதினார். தம்பிப்பேட்டை பாளையம் என்னும் சோலையில் தவத்தில் இருந்த அப்பாவையர் மீது அகவற்பா ஒன்று பாடினார்.

மறைவு

நமசிவாய நாவலர் 1897-ம் ஆண்டு மறைந்தார்.

நூல்கள்

  • திருத்தினை பதிகம்
  • மயிலாசல சதகம்

உசாத்துணை

  • தமிழ்ப் புலவர் வரிசை இருபத்து மூன்றாம் புத்தகம், சு அ இராமசாமிப் புலவர், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், 1960.

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 05-May-2026, 18:40:28 IST