under review

ஊரின்னிசை

From Tamil Wiki
Revision as of 21:44, 8 January 2026 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Removed Category:Spc)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

To read the article in English: Oorinnisai. ‎


ஊரின்னிசை (ஊர் இன்னிசை) தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். பாட்டுடைத் தலைவனின் ஊரைத் தொண்ணூறு, எழுபது அல்லது ஐம்பது இன்னிசை வெண்பாக்களால் பாடுவது ஊரின்னிசை

இறைவன் பெயர் ஊரினை இன்னிசையான்
முறையின் தொண்ணூறு எழுபான் ஐம்பான்
அறையின் அப்பெயர் ஆகும் என்ப
                                      - இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 825

பாட்டுடைத் தலைவன் ஊரைச் சார
இன்னிசை வெண்பா எழுபான் இருபஃ
தேனும் எழுபா னேனும் ஐம்பஃ
தேனும் இயல்புவது ஊர்இன் னிசையே
- முத்துவீரியம் - யாப்பிலக்கணம் 132

உசாத்துணை

வெளி இணைப்புகள்


✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:30:30 IST