under review

உமறுப் புலவர் விருது

From Tamil Wiki
Revision as of 21:44, 8 January 2026 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Removed Category:Spc)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

தமிழுக்கும் தமிழ் வளர்ச்சிக்கும் உயர்வுக்கும் உழைக்கும் தமிழறிஞர்களைச் சிறப்பிக்கும் வகையில், தமிழக அரசு, தமிழ் வளர்ச்சித்துறை மூலம் பல்வேறு விருதுகளை வழங்கிச் சிறப்பித்து வருகிறது. அவற்றுள் உமறுப் புலவர் விருதும் ஒன்று. இவ்விருது 2014-ம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது.

உமறுப் புலவர் விருது

சீறாப்புராணத்தை இயற்றிய உமறுப் புலவர் நினைவாக தமிழுக்கும், தமிழ் இலக்கியத்திற்கும் தொண்டாற்றிவரும் சிறந்த தமிழறிஞருக்கு தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறையால் உமறுப் புலவர் விருது வழங்கப்படுகிறது. 2014 முதல் வழங்கப்படும் இவ்விருது, இரண்டு லட்ச ரூபாய் பரிசுத் தொகையும், தங்கப் பதக்கமும், தகுதிச்சான்றும் பொன்னாடையும் கொண்டது.

உமறுப் புலவர் விருது பெற்றோர் பட்டியல் - 2021 வரை

எண் ஆண்டு பெயர்
1 2014 முனைவர் சேமுமு. முகமதலி
2 2015 மு. சாயபு மரைக்காயர்
3 2016 பேராசிரியர் முனைவர் தி.மு. அப்துல் காதர்
4 2017 திரு.ஹாஜி எம். முகம்மது யூசுப்
5 2018 பேராசிரியர் சா. நசீமாபானு
6 2019 லியாகத் அலிகான்
7 2020 அ.சையத் அசன் (எ) பாரிதாசன்
8 2021 நா. மம்மது
9 2022 பீ.மு. அஜ்மல்கான்

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 02-Feb-2023, 06:13:14 IST