under review

எஸ்.ஆர். ஜானகி

From Tamil Wiki
Revision as of 17:38, 22 November 2025 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected typo errors;)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
ஜானகி என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: ஜானகி (பெயர் பட்டியல்)
எஸ்.ஆர். ஜானகி

எஸ்.ஆர். ஜானகி (இறப்பு: 1988) தமிழ் நாடக நடிகை, திரைப்பட நடிகை.

வாழ்க்கைக் குறிப்பு

எஸ்.ஆர். ஜானகி கோயம்புத்தூரில் பிறந்தார்.

நாடக வாழ்க்கை

எஸ்.ஆர். ஜானகி, எம்.ஜி.ஆருடன்

எஸ்.ஆர். ஜானகி ஓவியர் பொன்னுசாமிப்பிள்ளை கம்பெனி நடத்திய நாடகங்களில் நடித்தார். துவக்கக் காலத்தில் நாடகத்துறையில் பிரபலமானவராக இருந்தார். நாடகங்களில் கதாநாயகனாக ஆண் வேடங்களில் நடித்தார். கம்பீரமான குரலில் மேடையில் பாடுவார்.

திரை வாழ்க்கை

எஸ்.ஆர். ஜானகி 1934-ல் பேசும் படமெடுக்கத் துவங்கிய காலத்திலிருந்தே திரைப்படங்களில் நடித்தார். தமிழ்த் திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தார். 1935-ல் சி.டி.ராஜகாந்தம் போன்ற பல்வேறு நடிகர், நடிகையரைத் திரையுலகிற்குஅறிமுகப்படுத்தியவர். தமிழ்த் திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர். எம்.ஜி.ஆருடன் 'கலை அரசி' என்ற திரைப்படத்தில் நடித்தார். 'ரத்தக்கண்ணீர்' திரைப்படத்தில் எம்.ஆர். ராதாவின் தாயாக நடித்தார். சிவாஜிகணேசனுடன் 'கப்பலோட்டிய தமிழன்', ரவிச்சந்திரனுடன் 'மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி', 'மயில்', 'வாழையடி வாழை', 'வா ராஜா வா', 'கண் திறந்தது', 'ஊமை விழிகள்', ஏவி.எம்மின் 'வாழ்க்கை', 'அனுபவி ராஜா அனுபவி' போன்ற பல படங்களில் நடித்தார்.

நடித்த திரைப்படங்கள்

  • நல்லதம்பி [1949]
  • சர்வாதிகாரி [1951]
  • என் தங்கை [1952]
  • கோமதியின் காதலன் [1955]
  • நடு இரவில் [1970]
  • மாமன் மகள் [1950]
  • ரத்தக்கண்ணீர் [1956]
  • பட்டினத்தார் [1962]
  • டௌரி கல்யாணம் [1983]
  • காலம் வெல்லும் [1970]
  • பார் மகளே பார் [1963]
  • பாகப்பிரிவினை [1959]
  • வானம்பாடி [1963]
  • சிவப்பு நிலா [1985]
  • இதய மலர் [1976]

விருது

  • தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது

மறைவு

எஸ்.ஆர். ஜானகி 1988-ல் காலமானார்.

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 17-Aug-2024, 19:43:50 IST