under review

உன்ன நிலை

From Tamil Wiki
Revision as of 16:04, 22 November 2025 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected typo errors;)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

உன்ன நிலை பொதுவியல் திணையின் துறைகளில் ஒன்று. உன்ன மரத்தைக் கொண்டு நிமித்தம் பார்க்கும் நிலை

விளக்கம்

புறப்பொருள் வெண்பாமாலை

புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் சிறப்பையுடையவனும் கழல் அணிந்தவனுமாகிய மன்னனை உன்ன மரத்தோடு சேர்த்து அவன் புகழைக் கூறுதல் என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.

 துன்னரும் சிறப்பில் தொடுகழல் மன்னனை
உன்னம் சேர்த்தி உறுபுகழ் மலிந்தன்று (கொளு 10.4)

வெண்பா

உன்னஅரும் தானைத் தொடுகழலான் துப்பு எதிர்ந்து
முன்னர் வணங்கார் முரண் முருங்க - மன்னரும்
ஈடு இலாம் தாங்கி இகல் அவிந்தார் நீயும் நின்
கோடெலாம் உன்னம் குழை (243)

பொருள்: இவ்வரசனுக்கு அடங்காத மன்னரெல்லாம் இப்பொழுது தோற்று அடங்கும்வண்ணம் உன்ன மரமே! நம் அரசனின் நல் ஊழை விளக்குவது போன்று தளிர்ப்பாயாக'

உசாத்துணை

பொதுவியல் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்



✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 25-Mar-2025, 19:00:54 IST