under review

கரிக்கையூர் பாறை ஓவியங்கள்

From Tamil Wiki
Revision as of 16:01, 22 November 2025 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected typo errors;)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
கரிக்கையூர் பாறை ஓவியத்தின் பொதுதோற்றம் (நன்றி: தமிழ் இணைய நூலகம்)

கரிக்கையூர் பாறை ஓவியங்கள் நீலகிரி மாவட்டத்திலுள்ள கரிக்கையூர் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட புதிய கற்காலம், பெருங்கற்காலம் முதல் பொ.மு. 2000 வரையிலான பாறை ஓவியங்களின் தொகுப்பு. தென்னிந்தியாவின் மிகப் பெரிய பாறை ஓவியம்.

அமைவிடம்

(நன்றி - ஜெயமோகன்.இன்)

கரிக்கையூர் பாறை ஓவியங்கள் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி தாலுக்காவிலுள்ள பொறிவரை பகுதியில் அமைந்துள்ளன.

காலம்

Karikaiyoor1.jpg

கரிக்கையூர் ஓவியங்கள் பொ.மு. 5000 முதல் பொ.மு. 2000 வரை பல்வேறு காலகட்டங்களில் வரையப்பட்டவை. இவற்றுள் காலத்தால் பழமையான ஓவியம் புதிய கற்காலத்தைச் சேர்ந்தது.

கண்டுபிடிப்பு

Karikaiyoor2.jpg

கரிக்கையூர் ஓவியங்கள் முதலில் ஆங்கிலேயர் காலத்தில் கண்டெடுக்கப்பட்டன. அவை பின்னர் மறக்கப்பட்டு பொ.யு. 2004-ல் ஆய்வாளர் க.த. காந்திராஜனால் மீண்டும் கண்டெடுக்கப்பட்டன.

அமைப்பு

கரிக்கையூர் ஓவியங்கள் வரையப்பட்ட கிழக்கு மேற்காக அமைந்த பாறைச்செதுக்கு தெற்கு நோக்கி அமைந்திருக்கிறது. இப்பாறை ஐந்நூறு அடி நீளமும், நூற்றியைம்பது அடி உயரமும் கொண்டது. இதன் அடியில் நூறு பேர் வரை நிற்கும் அளவு இடம் கொண்டது. இப்பாறையில் மொத்தம் முந்நூறு ஓவியங்கள் தனியாகவோ, தொகுப்பாகவோ வரையப்பட்டுள்ளன.

கரிக்கையூர் பகுதியில் காணப்படும் பாறை ஓவியங்கள் ஒரு அடி முதல் இருபது அடி வரை நீளம் கொண்டவை. இவ்வோவியங்கள் சிவப்பு, வெள்ளை வண்ணப்பூச்சுகளால் வரையப்பட்டுள்ளன. கரிக்கையூர் ஓவியங்களில் பழைமையானதாக கருதப்படும் புதிய கற்காலத்து ஓவியங்கள் அடர் சிவப்பு வண்ணத்தில் சிறிய அளவில் காணப்படுகின்றன.

ஓவியங்கள்

மான் கூட்டங்கள்

கரிக்கையூர் ஓவியங்களில் மாடுகளும் மான்களும் அதிகமாகக் காணப்படுகின்றன. யானை, குரங்குகள், நாய், நரி, பாம்பு, புலி மற்றும் அடையாளங்காண முடியாத விலங்குகளும் வரையப்பட்டுள்ளன. மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையே நடந்த வேட்டைக் காட்சி, விலங்குகளைப் பழக்கப்படுத்துதல், விலங்குகளோடு பயணித்தல் போன்றவையும் காணப்படுகின்றன. கரிக்கையூர் பகுதியில் காணப்படும் ஓவியங்களில் மாடு, மான் போன்ற விலங்குகளின் சித்திரங்கள் காலத்தால் பழமையானவை. இப்பகுதியில் ஆய்வாளர்கள் முக்கியமாகக் குறிப்பிடும் சித்தரிப்புகள்:

  • பலர்சூழ்ந்து காளைமாட்டைப் பிடித்தல்
  • பெண்கள் தோளோடு தோள் சேர்ந்து ஆடும் நடனம்.

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 01-Aug-2024, 20:01:24 IST