under review

வே. இராமலிங்கம்

From Tamil Wiki
Revision as of 16:00, 22 November 2025 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected typo errors;)
ராமலிங்கம் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: ராமலிங்கம் (பெயர் பட்டியல்)

வே. இராமலிங்கம் (19-ம் நூற்றாண்டு) இலங்கை தமிழறிஞர். ஈழத்து சிற்றிலக்கியப் புலவர். கோட்டுப்புராணம் முக்கியமான நூல்.

வாழ்க்கைக் குறிப்பு

இலங்கை, யாழ்ப்பாண உடுப்பிட்டியில் வேலுப்பிள்ளைக்கு மகனாக பத்தொன்பதாம் நூற்றாண்டில் வே. இராமலிங்கம் பிறந்தார்.

இலக்கிய வாழ்க்கை

சிற்றிலக்கிய வகைகளில் ஒன்றான புராணத்தில் 'கோட்டுப் புராணம்' என்ற நூலை எழுதினார். நீதிமன்றங்களுக்குச் சென்று வழக்காடுவோர் நிலையயும் அல்லல்களையும், வழக்கறிஞர்களின் தந்திரங்களையும் இதில் விவரித்துள்ளார். இதன் ஒரு சில பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளது.

நூல்கள் பட்டியல்

  • கோட்டுப் புராணம்

உசாத்துணை


‎


✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:37:49 IST