under review

ஆர்.வி. ரமணி

From Tamil Wiki
Revision as of 15:42, 22 November 2025 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected typo errors;)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
ரமணி என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: ரமணி (பெயர் பட்டியல்)
ஆர்.வி. ரமணி

ஆர்.வி. ரமணி (R.V. Ramani) இந்திய ஆவணப்பட இயக்குனர், திரைப்பட ஒளிப்பதிவாளர். தனக்கென ஒரு தனித்துவமான பாணியை நிறுவிச் சுயாதீனமான மனப்பதிவியல் பாணி ஆவணப்படங்களை உருவாக்குகிறார்.

வாழ்க்கைக் குறிப்பு

ஆர்.வி. ரமணி மும்பையில் பிறந்தார். மும்பை பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் இளங்கலைப்பட்டம் பெற்றார். புனே திரைக் கல்லூரியில் திரைப்பட ஒளிப்பதிவாளராக நிபுணத்துவம் பெற்றார். புகைப்பட பத்திரிக்கையாளராக பணியாற்றுகிறார்.

கலை வாழ்க்கை

ஆர்.வி. ரமணி இந்தியாவின் ஆவணப்பட இயக்குனர்களில் ஒருவர். தனக்கென ஒரு தனித்துவமான பாணியை நிறுவி, சுயாதீனமான மனப்பதிவியல் பாணி ஆவணப்படங்களை உருவாக்கினார். இயற்கையில் கலை (Art in Nature) திட்டத்தின் ஒரு பகுதியாக, உல்ரிக் அர்னோட் என்னும் ஜெர்மானியக் கலைஞரைத் தென்னிந்தியாவில் பணிபுரியத் தேர்வு செய்தார். உல்ரிக் அர்னோடைப் பற்றியும், அவரின் கலை பற்றியும் 'Heaven on Earth' என்னும் ஆவணப்படத்தை இயக்கினார். எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் 'நீ யார்' என்னும் ஆவணப்படத்தை இயக்கினார். நடனக்கலைஞர் பானுவைக் குறித்த 'Oh That's Bhanu' ஆவணப்படத்தை இயக்கினார்.

ஆவணப்படங்கள்

  • நீ யார் (சுந்தர ராமசாமி)
  • Where Are You (2003)
  • Oh That's Bhanu (2019)
  • Heaven on Earth (2001)
ஒளிப்பதிவாளர்
  • இலையும் முள்ளும் (மலையாளம்)

இணைப்புகள்



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 07-Jul-2024, 21:31:50 IST