being created

மருதன் இளநாகனார்

From Tamil Wiki
Revision as of 22:30, 27 August 2025 by Ramya (talk | contribs) (Created page with "மருதன் இளநாகனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். சங்கநூல்களில் இவரது பாடல்கள் 79 உள்ளன. == வாழ்க்கைக் குறிப்பு == மதுரை என்னும் ஊர்க்குறிப்புடன் ‘மத...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

மருதன் இளநாகனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். சங்கநூல்களில் இவரது பாடல்கள் 79 உள்ளன.

வாழ்க்கைக் குறிப்பு

மதுரை என்னும் ஊர்க்குறிப்புடன் ‘மதுரை மருதன் இளநாகன்’, ‘மதுரை மருதன் இளநாகனார்’ என்றும் சில பாடல்களில் குறிப்பிடப்படுகிறார்.

இலக்கிய வாழ்க்கை

மருதன் இளநாகனார் அகநானூற்றில் 23 பாடல்களும், குறுந்தொகையில் 4 பாடல்களும், புறநானூற்றில் 5 பாடல்களும், நற்றிணையில் 12 பாடல்களும் கலித்தொகையில் 35 பாடல்களும் பாடியுள்ளார். பாடல்கள்

  • அகநானூறு: 34, 59, 77, 90, 104, 121, 131, 184, 193, 206, 220, 245, 255, 269, 283, 297, 312, 343, 358, 365, 368, 380, 387
  • குறுந்தொகை: 77, 160, 279, 367,
  • நற்றிணை: 21, 39, 103, 194, 216, 283, 290, 302, 326, 341, 362, 392
  • புறநானூறு: 52, 55, 138, 139, 349
  • கலித்தொகை: மருதக் கலி (35 பாடல்கள்)

பாடல்களால் அறியவரும் செய்திகள்

புறநானூறு
  • கூடகாரத்துத் துஞ்சிய நன்மாறன் போரிட்டு அழித்த நாட்டு மன்றத்தில் வல்லு விள்ளையாட்டு 52 அறநெறி முதற்றே அரசின் கொற்றம் என்பதை உணர்ந்துகொள் என்று இவனுக்கு அறிவுரை கூறுகிறார் 55
  • பாணனை நாஞ்சில் வள்ளுவனிடம் ஆற்றுப்படுத்துகிறார் 138

வள்ளல் நாஞ்சில் வள்ளிவன் வேந்தர் பக்கம் நின்று போரிடுபவன் 139

  • மகட்பாற் காஞ்சி (மறவன் மகளை வேந்தன் பெண் கேட்டல்) 349
அகநானூறு

குடவோலை முறையில் தேர்தல் 77 குளிக்கும் மகளிர்க்குக் கண்ணன் சேலை தந்தது, முருகன் சூரபன்மனைக் கொன்றது 59 காதலி உடன் வருகிறாள் 121

புலத்தி துவைத்த ஆடை போல் தூய்மை 34 செல்லூர் கோசர் -- மகளை மணக்க விலை 90 காதலிக்குப் பூ சூட்டல் 104 கன்றைக் காத்து மாண்டவனுக்கு நடுகல் 131

கடவுள் கற்பு 184 கரும்புத் தண்டு போல் அவளுக்குப் பல் 193 தலைவிக்கு உதவும் விறலி 206 செல்லூரில் சிவன் கோயில் 220

ஒட்டகம் எலும்பு தின்னும் 245 பொருளீட்டக் கப்பலில் செல்லல் 255 கணவனைப் பிரிந்திருக்கும் காலத்தில் மனைவி பூ சூடிக்கொள்ள மாட்டாள் 269 தலைவியை வழியனுப்பும் தோழி 283

அவள் எப்படி வருந்திக்கொண்டிருப்பாளோ 297 வழுதி கையில் இருக்கும் வேல் போல் வானம் மின்னுகிறது 312 கூர் உளி குயின்ற கோடு மாய் எழுத்து 343 யானை மேல் கொடி 358

கழுவுள் காமூரில் பூதச் சிலை 365 கொங்கு நாட்டில் உள்ளி விழா 368 நாவல் பழம் நீர்த்துறையில் விழுவது போல 380 தலைவன் பிரியாவண்ணம் தோழி தடுத்து நிறுத்தல் 387

குறுந்தொகை

செந்தலை அன்றில் 160 அவர் வந்திசின் 367 வழிப்போக்கர் இட்ட பந்தல் யானைக்கு நிழல் 77 எருமை கழுத்தில் மணி 279

நற்றிணை

உருகும் நெய்யைப் பதம் பார்க்கப் பாலைத் தெளிக்கும்போது கேட்கும் ஒலி போல் 21 புலியைக் குத்தி விளையாடிய யானைக்கொம்பு போன்ற கண் கொண்டவள் 39 திருமணம் செய்துகொள்ள அவன் குதிரையில் வருகிளான் 163

கிளிக்கு என்ன கைம்மாறு செய்யலாம் 194 கண்ணில் தூசி விழுந்தால் கை உதவுவது போல 216 நாள் தவறாத ஞாயிறு போல, சொல் தவறாதவன் 283 பசு உண்ட மிச்சிலை எருது மேயும் 290

தெறுழ் என்னும் மலர் நரைமுடி நிறத்தில் இருக்கும் 302 பலாப்பழத்துக்குப் பக்கத்தில் கொக்கு மீனை உண்ணும்போது வீசும் முடைநாற்றத்தால் மந்தி தும்மும் 326

ஆடு புலி விளையாட்டு 341 நீ தம்பலப் பூச்சியைப் பார்த்து விளையாடிக்கொண்டிரு 362 கடலுக்குச் செல்லும் தந்தை தன்னைப் கூட்டிச்செல்லவில்லை சிறுவன் அழுவான் 392

பாடல் நடை

புறநானூறு
அகநானூறு
குறுந்தொகை
நற்றிணை

உசாத்துணை

  • மருதன் இளநாகனார் - tamilvu



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.