வாள்நாட் கோள்
வாள்நாட் கோள் உழிஞைத் திணையின் துறைகளில் ஒன்று. நற்சகுனம் பார்த்துப் போருக்குப் புறப்படுவதன் முகமாக குடை, வாள், முரசு போன்ற அரச சின்னங்களை நல்ல நாளில், நல்ல முழுத்தத்தில்(முகூர்த்தம்) புறவீடு செய்யும் வழக்கம் இருந்தது. அரசனின் வாளைப் புறவீடு செய்வதைக் கூறுவது குடைநாட் கோள்.
விளக்கம்
புறப்பொருள் வெண்பாமாலை
புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் பகைவருடைய அரணைக் கைப்பற்ற நினைந்த உழிஞை வேந்தன், தனக்கு வெற்றியைத் தருவதாகிய வாளினை நல்ல நாள் ஒன்றில் புறவீடு விட்டது என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.
கலந்தடையார் மதில் கருதி
வலம்தரு வாள்நாள் கொண்டற்று
(கொளு 6.3)
வெண்பா
வாள்நாள் கொளலும் வழிமொழிந்து வந்தடையாப்
பேணார் பிறைதொடும் பேர்மதில் - பூணார்
அணிகொள் வனமுலையார் ஆடரங்கம் ஏறிப்
பிணிகொள் பேயாடும் பெயர்த்து (97)
பொருள்: உழிஞை வேந்தன் பகைவரது அரணைக் கொள்ளக் கருதித் தனது வாளை நல்ல நாளில் புறவீடு செய்தான். செய்த அளவில், பகைவர் மதிலினுள் உள்ள நடன மகளிர் ஆடுகின்ற அரங்கம், கைகளைக் கோத்துக் கொண்டு பேய்கள் ஏறி, மாறிமாறி ஆடும் களம் ஆயிற்று.
உசாத்துணை
உழிஞைத்திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்
✅Finalised Page